கடிதங்கள் மூலம் தகவல்கள் (தகவல் பரிமாற்றம்) நாட்கள் மாறி, நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கிக் கொடுத்த காகிதம் புழக்கத்திற்கு வந்தது. கடிதங்கள் எழுதும் பழக்கம் துவங்கியது. எழுதுபவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று உரிய நபரிடம் கொண்டு சேர்க்கும் அஞ்சல் சேவை உருவாக்கப்பட்டது;. இதற்கான கட்டணங்களை பெறுவதற்கு பல்வேறு முறைகள் முயற்சிக்கப்பட்டன. இறுதியாக இன்றைய நாட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தபால் தலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிற்கு இதனை அறிமுகப்படுத்தியவர்கள் தாங்களே என்பதால், இன்றும் தபால் தலையில் இங்கிலாந்து நாட்டின் பெயர் கொடுக்கப்படுவதில்லை….
Category: இஸ்லாம்
ஒலி வழித் தகவல்கள் – ரஹ்மத் ராஜகுமாரன்
ஒலி வழித் தகவல்கள்! தகவல் தொடர்பிற்கு அந்த நாட்களில் சில வழிமுறைகளும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முதல் நிலையில் உள்ளது தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டு செய்யப்பட்ட தகவல் பரிமாற்றமாகும். இன்று பயன்பாட்டில் உள்ள பேரிகைகள், மத்தளங்கள் , நவரா போன்ற தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டது. மகிழ்ச்சி, ஆபத்து, போர், வரவேற்பு போன்ற நேரங்களிலெல்லாம் அந்த நிகழ்விற்கு ஏற்ற ஒலிகளை எழுப்ப இந்தத் தோல் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் யுத்த காலங்களில் எழுப்பப்படும் போர் முரசு…
ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன?
ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன? அப்துர் ரஹ்மான் உமரி யாரெல்லாம் கொடுக்கவேண்டும்? எப்போதுகொடுக்கவேண்டும்? எவற்றைக்கொடுக்கவேண்டும்? உணவுப் பொருள் என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது? ஸகாத்துல் ஃபித்ரு கொடுப்பதற்கு என்ன காரணம்? நிர்ணயிப்பது சரியா? இறைமறை குர்ஆனின் வழிகாட்டுதல்
ஐரோப்பாவிற்கு தடுப்பூசி முறைகளை கற்றுக்கொடுத்த உதுமானிய கிலாஃபத்
ஐரோப்பாவிற்கு தடுப்பூசி முறைகளை கற்றுக்கொடுத்த உதுமானிய கிலாஃபத் உலகில் யார் எதை கண்டுபிடித்தாலும் அதை தங்களது கண்டுபிடிப்பாக முன்னிறுத்தும் கயமைத்தனம் ஐரோப்பியர்களின் உடன்பிறந்த குணம். பிரிட்டனில் பிறந்த எட்வர்ட் ஜென்னர் 1798 இல் அம்மை நோய்க்கான தடுப்பூசியை அறிமுகம் செய்ததிலிருந்து தான் அதன் வரலாறு துவங்குகிறது என்பது அந்த கயமைத்தனங்களில் ஒன்று. 16 ஆம் நூற்றாண்டு துவங்கி ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டத்தில் அம்மை நோயை பரப்பி அங்கே வாழ்ந்த ஆயிரக்கணக்கான பூர்வகுடி செவ்விந்தியர்களை கொலை செய்த வரலாறை…
ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்
ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள் 1. பத்ர் போர்: இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள் தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான். 2. மக்கா வெற்றி: குறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது…
வாய்ப்பைத் தவற விடாதீர்கள்!
வாய்ப்பைத் தவற விடாதீர்கள்! Don’t miss the chance سُبْحَانَ اللهِ நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு அமர்ந்திருந்தபோது, உங்களில் எவரேனும் ஒருநாளில் ஆயிரம் நன்மைகள் சம்பாதிக்க முடியுமா? என்று கேட்டார்கள். ஆயிரம் நன்மைகள் எப்படி சம்பாதிக்க முடியும்? என்று ஒரு தோழர் கேட்க, நூறு தடவை தஸ்பீஹ் ( سُبْحَانَ اللهِ ) செய்யுங்கள். ஆயிரம் நன்மைகள் எழுதப்படும் அல்லது ஆயிரம் தீமைகள் அழிக்கப்படும் என நபி ஸல்லல்லாஹு…
நிய்யத் என்றால் என்னவென்பதை சரியான முறையில் விளங்குவோம்
நிய்யத் என்றால் என்னவென்பதை சரியான முறையில் விளங்குவோம் எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 1) தொழுகையானாலும், நோன்பானாலும், இன்ன பிற வணக்கங்களானாலும் நிய்யத் மிகவும் அவசியமாகும். நிய்யத் என்றால் என்ன? இதைப் பற்றியும் பெரும்பாலான மக்கள் அறியாதவர்களாகவே உள்ளனர். குறிப்பிட்ட சில வாசகங்களை வாயால் மொழிவது தான் நிய்யத் என இவர்கள் நினைக்கின்றனர். பல காரணங்களால் இவர்களது நினைப்பு தவறானதாகும். நிய்யத் என்ற வார்த்தைக்கு…
“நோன்பு எனக்குரியது”
“நோன்பு எனக்குரியது” புண்ணியமிக்க ரமலான் நோன்பை நோற்கக் கூடிய பாக்கியம் பெற்ற மக்களாக நாம் இருக்கிறோம் ரமலான் நோன்பைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கூடிய வசந்தகாலமாகும். மீண்டும் ஒரு ரமலான் நம் வாழ்வில் வராதா என்றும் ரமலானை அடைய மாட்டோமா என்றும் பலரும் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி நாம் எதிர்பார்த்திருக்கும் காலம் தான் ரமலான் மாதமாகும். ரமலானின் நன்மைகளைப் பெற நாம் எப்படித் தயாராக இருக்கிறோமோ அதைப் போன்று அல்லாஹ்வும் இந்த மாதத்தில் பல்வேறு…
ரமழான் மாதத்துக் கொடையின் சிறப்பு
ரமழான் மாதத்துக் கொடையின் சிறப்பு Sayed Abdurrahman Umari ரமழான் மாதத்தில் செய்யப்படுகின்ற கொடைக்கும் மற்ற மாதங்களில் வழங்கப்படுகின்ற கொடைக்கும் பெரிய வேறுபாடு இருக்கின்றது. ரமழான் மாதத்தில் வழக்கத்தை விட கூடுதலாக இறை வழிபாட்டில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்களுக்கு கொடையளிக்க வேண்டும் என்பது மனதில் கொள்ள வேண்டிய அம்சமாகும்..சம்பளம் வாங்கும் வைலைக்கு போவோர் ரமழான் மாத இபாதத்துகளை செய்ய வேண்டுமெனில் கண்டிப்பாக அவர்களுடைய ஊதியம் குறைந்துவிடும். அன்றாட வாழ்வு கேள்விக்குறியாக ஆகிவிடும்….
நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டாலும் சில தவறுகள் செய்து விடுகிறோமே! ஏன்?
நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டாலும் சில தவறுகள் செய்து விடுகிறோமே! ஏன்? நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்படுகிறது. இருந்தாலும் சில தவறுகள் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகிறோமே ஏன்? என ஒரு நண்பர் கேட்டார். நோன்பு காலங்களில் இறைவன் ஷைத்தான்களை விலங்கிடுவது உண்மைதான் என்றாலும் நம்மிடமிருந்து வெளியாகும் தவறுகள் ஷைத்தான்களால் மட்டுமல்ல. நமது நப்ஸ் எனும் மனோ இச்சைகளின் மூலமாகவும் தவறுகள் வெளியாகும். உலகில் மனிதனுக்கு பெரும் எதிரி நப்ஸ் என சொல்லப்படும் மனோ இச்சைதான் .ஷைத்தானை…