“திண்ணமாக அல்லாஹ் மென்மையானவன்; அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ, முஸ்லிம்) “இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?” என ஒரு மனிதர் இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவியதற்கு, ”நீர் (பிறருக்கு) உணவளிப்பதும், நீ அறிந்தோருக்கும், அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு நூல்: புகாரீ, முஸ்லிம்) (ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,…
Category: ஹதீஸ்
நன்மை பயக்கும் நபிமொழி – 13
“பெண்களைப் போலவே நடக்கும் ஆண்களையும் ஆண்கள் போல நடக்கும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்” என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, திர்மிதி) “பெண்ணுடைய ஆடையைஅணிகின்ற ஆணையும் ஆணுடைய ஆடையை அணிகின்ற பெண்ணையும் அல்லாஹ் சபிப்பானாக!” (நபிமொழி) அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு (நூல்: அபூதாவூத்)
நன்மை பயக்கும் நபிமொழி – 12
ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள். நாங்கள் இரண்டு பெருநாள் களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில்…
நன்மை பயக்கும் நபிமொழி – 11
முதுமையின் சிறப்பு ஒரு முஸ்லிம் நாற்பது வயது வரை வாழும் சிறப்பை பெற்றவரை அல்லாஹ் குஷ்டம், பைத்தியம் ஷைத்தானின் கெடுதலை விட்டு பாதுகாக்கின்றான். ஐம்பது வயது வரை வாழுகின்ற சிறப்பை பெற்றவரை மறுமை நாளில் கேள்வி கணக்குகளை இலகுவாக்குவதில் அல்லாஹ் தன் கருணையைப் பொழிகின்றான். அறுபது வயது வரை வாழும சிறப்பை பெற்றவரை அவர் பிரியமுடன் நன்மையான வழிமுறைகளை செயலாற்றுவதற்காக அல்லாஹ் தனது கருணையைப பொழிகின்றான்.
நன்மை பயக்கும் நபிமொழி – 10
“இறைவனை அஞ்ச வேணடிய அளவுக்கு அஞ்சுங்கள்! முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி صلى الله عليه وسلم ஓதினார்கள். பிறகு (நரக வாதிகளுக்குக் கொடுக்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலக வாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உணவாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும்!? என்று கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு: திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா)…
நன்மை பயக்கும் நபிமொழி – 9
மகிழ்ச்சியான செய்தி! ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார், “யா ரசூலல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)! கியாமத் தீர்ப்பு நாள் எப்போது?“ நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், “வாஹ் (கியாம நாள் நிகழும் காலம், குறிப்பாக அதன் நேரம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறாய்) சரி. அதற்காக நீ என்ன தயாரித்துக் கொண்டிருக்கிறாய்?“ அம்மனிதர் சொன்னார, “ (தங்களிடம் குறிப்பிட்டுச்…
நன்மை பயக்கும் நபிமொழி – 8
“நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு சவுத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம் “ஆரம்பநேரத்தில், ( விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடைய அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்” என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். திர்மிதீ “ஸஹர் செய்யுங்கள் ( சாப்பிடுங்கள்) ஏனெனில், அதில்…
நன்மை பயக்கும் நபிமொழி – 7
தேவையற்ற வாக்கு வாதம் வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரேயாவர் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம்…
நன்மை பயக்கும் நபிமொழி – 6
நபிصلى الله عليه وسلم அவர்கள் என்னிடம் கூறினார்கள். ”நான் உமக்கு நன்மையானவற்றின் வாயில்களை அறிவிக்கட்டுமா? நோன்பு கேடயமாகும் மேலும் தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தான தர்மம் பாவத்தை அழித்துவிடும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஅத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்)
நன்மை பயக்கும் நபிமொழி – 5
“நிச்சயமாக ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதனைக்கொண்டு அவை பெருமையடைகின்றன. என்னுடைய உம்மத்தினரின் அழகும் சிறப்பும் குர்ஆனாகும்” என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக அன்னை ஆயிஷா ரளியல்லாஹ¤ அன்ஹா அறிவிக்கிறார்கள் – அல் ஹதீஸ். “நீங்கள் அல்லாஹ¤த்தஆலாவிடம் திரும்பச் செல்வதற்கும் (அவனிடம் நெருங்குவதற்கும்) (உதவியாக) அவனிடமிருந்து வந்த குர்ஆன் ஷரீiஃபத் தவிர வேறு சிறந்த பொருளைப் பெற்றுக் கொள்ள முடியாது” என்று பெருமானார் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக…