மருத்துவம் ‘மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான்.’ (அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஷரீக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்) ‘ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது.’ (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம், பைஹகீ) ‘அல்லாஹ் நோயையும் அதற்குரிய மருந்தையும் உருவாக்கியுள்ளான். ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. எனவே நீங்கள் மருத்துவம் செய்யுங்கள்! ஆனால்,…
Category: ஹதீஸ்
நன்மை பயக்கும் நபிமொழி – 23
‘ஓர் அவையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோதுஅவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். ‘மறுமை நாள் எப்போது?’ எனக் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை’ என்றனர். வேறு சிலர், ‘அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை’…
நன்மை பயக்கும் நபிமொழி – 22
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே…
நன்மை பயக்கும் நபிமொழி – 21
‘தன் பிள்ளை(களை)விட, பெற்றோர்களைவிட, மற்றுமுள்ள ஏனைய ஜனங்களைவிடவும் அவருக்கு நான் மிக விருப்பமுள்ளவராக ஆகும்வரை, உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமாட்டார் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்) மூன்று காரியங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர் அவைகளின் மூலமாக ஈமானின் இன்பத்தைப் பெற்றுவிடுகின்றார். 1. அவ்விருவரல்லாத மற்றனைத்தையும்விட அல்லாஹ்வையும் அவனது தூதரும் அவருக்கு மிகப்பிரியமானவர்களாக இருக்க வேண்டும். 2….
நன்மை பயக்கும் நபிமொழி – 20
ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம் அவர்கள் அவரை (ஹுதைபாவை) சந்தித்து கைகொடுப்பதற்காக அவரை நோக்கி வந்த போது, அவர் சொன்னார், ‘நான் குளிப்புக் கடமையானவனாக இருக்கிறேன்”. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ‘ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டார்” (நூல்: நூல்: அபூதாவூது) உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்கு இரவில் குளிப்பு கடமை ஏற்பட்டு விடுகிறதே! என்று அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி…
நன்மை பயக்கும் நபிமொழி – 19
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தான் குளிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்கவும் பிறகு அதில் குளிக்கவும் வேண்டாம். பிறகு அதில் உலூ செய்யவும் வேண்டாம். ஏனெனில் அதில் தான் பெருமளவு வஸ்வாஸ் (மனக்குழப்பம்) உள்ளது என்று அப்துல்லாஹ் பின் முகப்பல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ, அபூ தாவூது, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்)பொந்துக்குள் சிறுநீர் கழிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள் என்று அப்துல்லாஹ் பின்…
நன்மை பயக்கும் நபிமொழி – 18
அல்லாஹ் ஒரு அடியானை பிரியம் வைத்துவிட்டால் ஜிப்ரீலை அழைத்து, ”அவரை நான் பிரியம் கொள்கிறோம். அவரை நீ விரும்புவீராக!” என்று கூறுவான். அவரும் அவனை பிரியம் கொள்வார். ஜிப்ரீல் வானத்தில் உள்ளவர்களை அழைத்து ”அல்லாஹ் இன்னமனிதனை பிரியம் கொள்கிறான். அவரை நீங்களும் விரும்புங்கள் என்பார். வானத்தில் உள்ளோர் அவரை பிரியம் கொள்வர். பின்பு பூமியில் (உள்ளவர்களிலும்) அவர் பால் இணக்கத்தை ஏற்படுத்தப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு…
நன்மை பயக்கும் நபிமொழி – 17
“நானும் அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளிப்போம் என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். நூல்: அபூ தாவூத் (குறிப்பு: முஸ்லிம், நஸயீ, அஹ்மது ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.) “ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும் ரஸூல் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும்”…
நன்மை பயக்கும் நபிமொழி – 16
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரளியல்லாஹு அண்ஹு அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள் என்பதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அண்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)
நன்மை பயக்கும் நபிமொழி – 15
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், வட்டி வாங்குபவர்கள் மீதும், வட்டி கொடுப்பவர்கள் மீதும், அவ்விருவருக்கும் சாட்சியாக இருப்பவர்கள் மீதும், வட்டி கணக்கு எழுதுபவர்கள் மீதும் சாபமிட்டார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு புகாரி, முஸ்லிம்) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: “ஹலாலும் (அனுமதிக்கப்பட்டதும்) தெளிவாக உள்ளது. ஹராமும் (தடுக்கப்பட்டதும்) தெளிவாக உள்ளது. ஆனால் இவ்விரண்டுக்குமிடையே சந்தேகத்திற்குரிய சில விஷயங்கள் உள்ளன. சந்தேகத்துக்குரிய பாவங்களிலிருந்து விலகி இருப்பவன் பகிரங்கமான…