MUST READ MUST READ MUST READ இரண்டு நிகழ்ச்சிகள் முதல் நிகழ்ச்சி: ஒரு தடவை அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளில் (ஹசன் அல்லது ஹுசைன்) ஒருவரைச் சுமந்தவாறு மக்ரிப் அல்லது இஷா தொழுகைக்கு வந்தார்கள். குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு தொழுகையைத் தொடங்கினார்கள். அவர்கள் சஜ்தாவுக்குச் சென்றதும் நீண்ட நேரம் அதே நிலையிலேயே இருந்திடவே நான் சற்று என் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தேன். பேரக்குழந்தை நபியவர்கள்…
Category: ஹதீஸ்
இரத்த பந்தம்
இரத்த பந்தம் ‘அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தினுள் நுழையச் செய்யும் ஒர் அமலை எனக்கு அறிவியுங்கள்” என்று (ஸஹாபி ஒருவர்) கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், நீர் அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதிருப்பது, தொழுகையை நிலை நாட்டுவது, ஜகாத்தை கொடுத்து வருவது மற்றும் இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பது” என்று கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “எவர்…
இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?
“திண்ணமாக அல்லாஹ் மென்மையானவன்; அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ, முஸ்லிம்) “இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?” என ஒரு மனிதர் இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவியதற்கு, ”நீர் (பிறருக்கு) உணவளிப்பதும், நீ அறிந்தோருக்கும், அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு நூல்: புகாரீ, முஸ்லிம்) (ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,…
பிறர்நலம் பேணுவோம்
‘முன்னோர்களில் ஒருவர், பாதையொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். திடீரென ஓரிடத்தில் நடுவழியில் ஒரு முள்மரம் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். இது மக்களுக்கு இடையூறு செய்யுமல்லவா? இதை நான் அகற்றிவிட்டுத் தான் மேலே செல்வேன் என்று கூறியவராக அந்த முள் மரத்தை வெட்டி ஓரத்தில் வீசினார். அவரது இந்த நற்செயலால் மகிழ்ந்த வல்ல ரஹ்மான் அவரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தான். சுவர்க்கத்தில் அவர் ஆனந்தமாக சுற்றி விளையாடுவதை நான் கண்டேன் என்று கூறிய இந்நிகழ்ச்சி, உண்மையின் உறைவிடமாம் உத்தம…
நன்மை பயக்கும் நபிமொழி – 30
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ‘ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி“ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி صلى الله…
குழந்தைகளை பள்ளிவாசலோடு இணையுங்கள்
ஒரு நிகழ்ச்சி: “ஒரு தடவை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளில் (ஹஸன் அல்லது ஹுசைன்) ஒருவரைச் சுமந்தவாறு மக்ரிப் அல்லது இஷா தொழுகைக்கு வந்தார்கள். குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு தொழுகையைத் தொடங்கினார்கள். அவர்கள் சஜ்தாவுக்குச் சென்றதும் நீண்ட நேரம் அதே நிலையிலேயே இருந்திடவே – நான் சற்று என் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தேன். பேரக்குழந்தை நபியவர்கள் முதுகில் அமர்ந்திருந்தது! நான் மீண்டும் சஜ்தாவுக்குச்…
நன்மை பயக்கும் நபிமொழி – 28
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள், “இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளலாகாது/ ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல்/ மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால்/ (மக்களின் பிரச்சினைகளுக்குத்) தீர்ப்பு வழங்கிக்கொண்டும்/ (பிறருக்கு) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல்.“ (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரீ) நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்,”எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்)…
நன்மை பயக்கும் நபிமொழி – 27
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்கள் சிலருடன், உ(க்)காழ், எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச் செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது விண்கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக்கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) தம் கூட்டத்தாரிடம் திரும்பி வந்தனர். அப்போது அக்கூட்டத்தார்கள்” உங்களுக்கு என்ன நேர்ந்தது,, என்று கேட்டனர். ஷைத்தான்கள் “வானத்துச் செய்திகளுக்கும் எஙகளுக்குமிடையே…
நன்மை பயக்கும் நபிமொழி – 26
“நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டாப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன் இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (رَضِيَ اللَّهُ عَنْهُ) (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்’ என்று இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு)…
நன்மை பயக்கும் நபிமொழி – 25
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “நிச்சயமாக உங்களிடையே சில தலைவர்கள் தோன்றுவார்கள்; அவர்களிடம் நல்லவற்றையும் காண்பீர்கள், தீயவற்றையும் காண்பீர்கள். யார் அவர்களின் தவறுகளை கண்டிக்கிறாரோ, அவர் தமது பொறுப்பிலிருந்து நீங்கிவிட்டார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் பாதுகாப்பு பெற்றார். யார் அவர்களது தீய செயல்களைப் பொருந்தி துணை செய்கிறாரோ அவர் நாசமடைந்தார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உடன் சஹாபாக்கள் அவர்களிடம் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் போர் செய்யலாமா?…