அறியாமல் செய்த தவறுகளை ‘அல்லாஹ் மன்னிப்பான்’ என்பது இணை வைத்தலுக்கு பொருந்தாது! நம்மில் பலர், தங்களையும் அறியாமல் அல்லாஹ்வுக்கு இணையாக மனிதர்களில் சிலரைக் கருதிக் கொண்டிருப்பதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் எல்லாமே மனிதர்களில் சிலருக்கு இருப்பதாக நம்பி, அதன் வழியிலே தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்டிருப்பதும் அதிர்ச்சி தரும் உண்மைகளாகும். அறியாமல் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிப்பான் என்பது இணை வைத்தலுக்கு பொருந்தாது. ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையிலே, “நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே…
Category: ‘ஷிர்க்’ – இணை வைப்பு
வேலியே பயிரை மேயும் விந்தை!
வேலியே பயிரை மேயும் விந்தை! ”இந்த ரபீ உல் ஆகிர் மாதத்தில் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பெயரால் மவ்லூதுகள் ஓதப்பட்டு வருகின்றன. இதில் வரம்பு மீறிய ஏராளமான ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன என்பது தெரிந்தும், சில மதரஸா மாணவர்களும், ஆலிம்களும் பிடிவாதமாக மவ்லூதுகள் ஓதிவருவது ”வேலியே பயிரை மேயும் விந்தை” போன்றுள்ளது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ”ஏகத்துவ முழக்கம்” அவர்கள் பார்வைக்கு… o அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி…
ஷிர்க்கின் அசல் காரணம்?
ஷிர்க்கின் அசல் காரணம்? நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கௌமுகள் (சமூகம்) செய்த ஷிர்க்கின் அசல் காரணம் இமாம் புகாரீ தம்முடைய சஹீஹிலும் தப்றானீ முதலியவர்கள் தங்களுடைய தப்ஸீர்களிலும் வஸீமா கஸஸ் அன்பியாவிலும் பின்காணுமாறு வரைந்திருக்கிறார்கள்: நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வர்க்கத்தாரிலும் சில சாலிஹீன்கள் காணப்பட்டார்கள். அவர்கள் மரணமடைந்ததன் பின் மனிதர்கள் அன்னவர்களின் சமாதியினருகே உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். பிறகு காலம் செல்லச் செல்ல அன்னவர்களின் படத்தை எழுதவும் அவர்களேபோல் உருவச்சிலை செய்யவும் ஆரம்பித்தனர். எனவே, சமாதியின் அருகே தாமதித்திருப்பதும் அதைத்…
மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்
மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் 1. குர்ஆனை இழிவுபடுத்தும் போக்கு மவ்லிதுகள் வணக்கமாக மாறிவிட்ட பின் ஏற்பட்ட தீய விளைவுகளில் முக்கியமானது அதைக் குர்ஆனுக்குச் சமமாக சில சமயம் குர்ஆனுக்கும் மேலாகக் கருதும் நிலை ஏற்பட்டதாகும். அல்லாஹ்வுடைய வேதம் அல்குர்ஆன் வீடுகள் தோறும் இவ்வளவு முக்கியத்துவத்துடன் ஓதப்படுவதில்லை. மங்கலமான நிகழ்ச்சிகளுக்கு மவ்லிது என்றும், அமங்கலமான நிகழ்ச்சிகளுக்கு குர்ஆன் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொருள் தெரியாமல் ஓதினாலும் ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மை கிடைக்கும் என்ற குர்ஆனுக்குரிய தனித்தகுதி முகவரியற்ற யாரோ…
மவ்லிது ஒரு வணக்கமா?
மவ்லிது ஒரு வணக்கமா? ஒரு முதலாளியிடம் ஒருவன் வேலை செய்கின்றான். அந்த முதலாளிக்குக் காலையில் 6 மணிக்கு டீ தேவை, 9 மணிக்கு டிபன் தேவை. ஆனால் இந்தப் பணியாளனோ 6 மணிக்கு டிபனையும் 9 மணிக்கு டீயையும் கொண்டு போய் கொடுக்கின்றான். இதுபோலவே அந்த முதலாளிக்குச் செய்ய வேண்டிய காரியங்கள், பணிவிடைகளில் அவரது விருப்பத்திற்குத் தக்க இவன் நடக்காமல் இவனது விருப்பத்திற்குத் தக்க அவருக்குப் பணிவிடைகள் செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். இதை அந்த முதலாளி…
நபிவழியை பின்பற்றுவதின் அவசியமும் பித்அத் பற்றிய எச்சரிக்கையும்!
நபிவழியை பின்பற்றுவதின் அவசியமும் பித்அத் பற்றிய எச்சரிக்கையும்! ஷேக் அப்துல் அஜீஸ் அப்துல்லாஹ் பின் பாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதை முழுமைப்படுத்தி, தனது சொல், செயல், அங்கீகாரம் யாவையும் சட்டங்களாக்கி வைத்துவிட்டுத்தான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றார்கள். அத்துடன் மக்களால் மார்க்கத்தினுள் நுழைந்து பின்னர் மார்க்கமாகக் காட்டக்கூடிய எல்லா வகையான நூதனச் செயல்களும், அவற்றை உட்புகுத்தியவர்கள் நல்ல நோக்கத்துடன் செய்திருந்தாலும், நிராகரிக்கப்பட வேண்டியவைகளே…
இறைவனுக்கு இணைவைப்பவர்களின் நம்பிக்கைகள்!
இறைவனுக்கு இணைவைப்பவர்களின் நம்பிக்கைகள்! அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் வணக்க வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கே செய்து அவனை ஒருமைப்படுத்த வேண்டும். அல்லாஹ் அல்லாத பிறருக்கு அந்த வணக்க வழிபாடுகளைச் செய்யும் போது அது “தவ்ஹீது” என்னும் ஓர் இறைக்கோட்பாட்டிற்கு எதிர்மறையான “ஷிர்க்” என்னும் இணைவைப்பாகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்: ”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான் அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு…
‘சுன்னத் வல் ஜமாஅத்’ ஆலிம்களே! உங்களை நீங்களே கேவலப்படுத்திக்கொண்டு விட்டீர்கள்!
[ கட்டுரை சற்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.] ‘சுன்னத் வல் ஜமாஅத்’ ஆலிம்களே! உங்களை நீங்களே கேவலப்படுத்திக்கொண்டு விட்டீர்கள்! திருச்சியில் கூடிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு பிறகு சில ‘சுன்னத் ஜமா அத்’ ஆலிம்கள் கொடுக்கும் விளக்கமும், அவர்களின் செயல்பாடுகளும் வினோதமாக இருக்கிறது. சில ஆலிம்களின் விளக்கத்தைப் படிக்கும்போது பரிதாபமாக இருக்கிறது. சென்ற தலைமுறை மக்களைப்போல் கல்வியில் குறைந்தவர்களாக இன்றைய தலைமுறையை கருதிக்கொண்டு விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள். இனி வரப்போகும் ”ஜும்ஆ”க்களெல்லாம் பாழடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் மதரஸாவில் கற்ற…
மரணித்தவர்களால் இந்த உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா?
மரணித்தவர்களால் இந்த உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா? இன்றைய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் கெட்ட மனிதர்கள் மரணித்தால் அவர்கள் ஆவியாக வந்து மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், நல்லவர்கள் மரணித்தாலும் உலகோடு அவர்கள் தொடர்பு வைத்துக்கொண்டு நலவு செய்கின்றார்கள் என்று நினைக்கின்றனர். அந்த அடிப்படையிலேயே கப்ராளிகள் என்று கூறிக்கொண்டு அவர்களிடம் தேவைகளை முறைப்பாடு செய்கின்றனர். காரணம் கேட்டால் அவர்கள் அல்லாஹ்விடம் வாங்கித் தறுவதாக கூறுகின்றனர். இதுவே இன்றைக்கு அதிகமானவர்களை ஷிர்க்கில் சேர்த்திருக்கின்றது. அப்படி மரணித்தவர்கள் உலகில் ஏதும் செய்வார்களா? என்றால்…
ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!
ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!! “எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்கு கிரயமாக சொற்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ! நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. கியாம நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.” (அல்குர்ஆன் 2:174) ஆலிம்கள் உங்களுக்கு எதை மார்க்கமாய் போதிக்கிறார்கள்? சற்று சிந்தியுங்கள். அவர்கள் வயிற்றுப் பிழைப்பை வெற்றிகரமாய் நடத்துவதற்காக மார்க்கத்திற்கு எதிரானவையெல்லாம் மார்க்கமாய் போதிக்கின்றார்கள். அவைகளை இன்னமும் நீங்கள் உணராமல் இருக்கின்றீர்கள். நாங்கள் தன்னிச்சையாக…