உம்மு அய்மன் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிற்குரிய இடத்தை பெற்ற நபித்தோழியராவார். இந்த உம்மு அய்மன் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீதும் இவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் மீதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தனது பேரர்கள் மீது கொண்ட அளவுக்கு நேசம் வைத்திருந்தார்கள். உஸாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நாம் அறிந்துவைத்துள்ளோம். இந்த உஸாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்…
Category: வரலாறு
நபி صلى الله عليه وسلم அவர்கள் எழுதிய கடிதங்கள் (5,6,7)
5. பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம் பஹ்ரைன் நாட்டு ஆளுநர் ‘அல்முன்திர் இப்னு ஸாவி‘ என்பவருக்கு இஸ்லாமின் பக்கம் அழைப்புக் கொடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தை அலா இப்னு ஹள்ரமி என்ற தோழர் மூலம் அனுப்பினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்பு அவர் நபியவர்களுக்குப் பதில் எழுதினார். ”அல்லாஹ்வின் தூதரே! உங்களது கடிதத்தை பஹ்ரைன் நாட்டு மக்களுக்கு முன் நான் படித்துக் காட்டினேன். அவர்களில்…
பத்ர் போர் – கைதிகள் பற்றிய முடிவு!
பத்ர் போர் கைதிகள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது தோழர்களுடன் ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்; ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறை நிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும்….
நபி صلى الله عليه وسلم அவர்கள் எழுதிய கடிதங்கள் (4)
[ ”அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்” என்று கூறினாய், ”நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி…
ஷைத்தான் இவரைக்கண்டால் வெருண்டோடுவான்!
முகவை எஸ்.அப்பாஸ் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (குடும்பச் செலவுத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி…
கப்பல் படையில் களமிறங்கி ஷஹீதான வீரப்பெண்மணி!
கப்பல் படையில் களமிறங்கி ஷஹீதான வீரப்பெண்மணி! அனஸ் இப்னு மாலிக்ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; ”இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம் ரளியல்லாஹு அன்ஹா, உபாதா இப்னு ஸாமித் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹராம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்…
நபி صلى الله عليه وسلم அவர்கள் எழுதிய கடிதங்கள் (3)
3. பாரசீக மன்னர் ‘கிஸ்ரா‘விற்கு கடிதம்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாரசீக மன்னர் ‘கிஸ்ரா‘விற்கும் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதமாவது: ”அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவிற்கு எழுதும் கடிதம். நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக்…
நபி صلى الله عليه وسلم அவர்கள் எழுதிய கடிதங்கள் (1, 2)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டின் இறுதியில் பல அரசர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைத்தார்கள். நபியவர்கள் அரசர்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டபோது ”முத்திரை இல்லாத கடிதங்களை அரசர்கள் படிக்க மாட்டார்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஆகவே, நபியவர்கள் வெள்ளியினாலான மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் ‘முஹம்மது ரஸூலுல்லாஹ்’ என்று பதித்தார்கள். அது மூன்று வரிகளாக இருந்தது. முஹம்மது என்று முதல்…
செய்த பாவத்திற்கு வாழ்நாளிலேயே பரிகாரம்!
செய்த பாவத்திற்கு வாழ்நாளிலேயே பரிகாரம்! [ அல்லாஹ் நாடினால் இன்று இஸ்லாமிய எதிரிகளாக காட்சி தருபவர்களையும் இஸ்லாத்தை நிலைநாட்டுபவர்களாக மாற்றிக் காட்டுவான் என்பதற்கு சான்றாக விளங்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தையார் மாவீரர் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை உஹது களத்தில் ஷகீதாக்கிய வஹ்ஷீ அவர்கள் வரலாறு ] நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தையார் மாவீரர் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை உஹது களத்தில் ஷகீதாக்கிய வஹ்ஷீ அவர்கள்…
மாவீரர் துல்கர்னைன்
மாவீரர் துல்கர்னைன் மேற்கு கிழக்காகிப் போன அற்புதம்! ”(நபியே!) ‘துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்’ என்று கூறுவீராக!. அவருக்கு பூமியில் ஆட்சி செய்ய நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் பயணம் சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் மறைவதைக் கண்டார். அங்கே அவர் சமுதாயத்தைக் கண்டார்.” (அல்…