ரமளானை வரவேற்போம் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது. ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு…
Category: நோன்பு
வாய்ப்பைத் தவற விடாதீர்கள்!
வாய்ப்பைத் தவற விடாதீர்கள்! Don’t miss the chance سُبْحَانَ اللهِ நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு அமர்ந்திருந்தபோது, உங்களில் எவரேனும் ஒருநாளில் ஆயிரம் நன்மைகள் சம்பாதிக்க முடியுமா? என்று கேட்டார்கள். ஆயிரம் நன்மைகள் எப்படி சம்பாதிக்க முடியும்? என்று ஒரு தோழர் கேட்க, நூறு தடவை தஸ்பீஹ் ( سُبْحَانَ اللهِ ) செய்யுங்கள். ஆயிரம் நன்மைகள் எழுதப்படும் அல்லது ஆயிரம் தீமைகள் அழிக்கப்படும் என நபி ஸல்லல்லாஹு…
நிய்யத் என்றால் என்னவென்பதை சரியான முறையில் விளங்குவோம்
நிய்யத் என்றால் என்னவென்பதை சரியான முறையில் விளங்குவோம் எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 1) தொழுகையானாலும், நோன்பானாலும், இன்ன பிற வணக்கங்களானாலும் நிய்யத் மிகவும் அவசியமாகும். நிய்யத் என்றால் என்ன? இதைப் பற்றியும் பெரும்பாலான மக்கள் அறியாதவர்களாகவே உள்ளனர். குறிப்பிட்ட சில வாசகங்களை வாயால் மொழிவது தான் நிய்யத் என இவர்கள் நினைக்கின்றனர். பல காரணங்களால் இவர்களது நினைப்பு தவறானதாகும். நிய்யத் என்ற வார்த்தைக்கு…
“நோன்பு எனக்குரியது”
“நோன்பு எனக்குரியது” புண்ணியமிக்க ரமலான் நோன்பை நோற்கக் கூடிய பாக்கியம் பெற்ற மக்களாக நாம் இருக்கிறோம் ரமலான் நோன்பைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கூடிய வசந்தகாலமாகும். மீண்டும் ஒரு ரமலான் நம் வாழ்வில் வராதா என்றும் ரமலானை அடைய மாட்டோமா என்றும் பலரும் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி நாம் எதிர்பார்த்திருக்கும் காலம் தான் ரமலான் மாதமாகும். ரமலானின் நன்மைகளைப் பெற நாம் எப்படித் தயாராக இருக்கிறோமோ அதைப் போன்று அல்லாஹ்வும் இந்த மாதத்தில் பல்வேறு…
ரமழான் மாதத்துக் கொடையின் சிறப்பு
ரமழான் மாதத்துக் கொடையின் சிறப்பு Sayed Abdurrahman Umari ரமழான் மாதத்தில் செய்யப்படுகின்ற கொடைக்கும் மற்ற மாதங்களில் வழங்கப்படுகின்ற கொடைக்கும் பெரிய வேறுபாடு இருக்கின்றது. ரமழான் மாதத்தில் வழக்கத்தை விட கூடுதலாக இறை வழிபாட்டில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்களுக்கு கொடையளிக்க வேண்டும் என்பது மனதில் கொள்ள வேண்டிய அம்சமாகும்..சம்பளம் வாங்கும் வைலைக்கு போவோர் ரமழான் மாத இபாதத்துகளை செய்ய வேண்டுமெனில் கண்டிப்பாக அவர்களுடைய ஊதியம் குறைந்துவிடும். அன்றாட வாழ்வு கேள்விக்குறியாக ஆகிவிடும்….
நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டாலும் சில தவறுகள் செய்து விடுகிறோமே! ஏன்?
நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டாலும் சில தவறுகள் செய்து விடுகிறோமே! ஏன்? நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்படுகிறது. இருந்தாலும் சில தவறுகள் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகிறோமே ஏன்? என ஒரு நண்பர் கேட்டார். நோன்பு காலங்களில் இறைவன் ஷைத்தான்களை விலங்கிடுவது உண்மைதான் என்றாலும் நம்மிடமிருந்து வெளியாகும் தவறுகள் ஷைத்தான்களால் மட்டுமல்ல. நமது நப்ஸ் எனும் மனோ இச்சைகளின் மூலமாகவும் தவறுகள் வெளியாகும். உலகில் மனிதனுக்கு பெரும் எதிரி நப்ஸ் என சொல்லப்படும் மனோ இச்சைதான் .ஷைத்தானை…
ரமளான் ஒரு போராட்ட மாதம்
ரமளான் ஒரு போராட்ட மாதம் நோன்பு காலம் வெற்றியின் மாதம். 17ம் நாள் பத்ர் யுத்தம் வெற்றி முதல் 1973ம் ஆண்டு ரமளான் (ஒக்டோபர்) இஸ்ரேலுக்கு எதிரான வெற்றிவரை வரலாற்றில் பல வெற்றிகள் அம்மாதத்தில் நிகழ்ந்துள்ளன. இப்போது இஸ்லாமிய உலகில் தேசிய சர்வதேச அடக்கு முறைகளுக்கெதிரான போராட்டமொன்று செல்கிறது. இது வரலாற்றில் இதுவரை கண்ட போராட்டங்களில் மிகக் கடுமையானது; மிகச்சிக்கலானது. எனவே இந்தப் போராட்ட வெற்றி இலகுவில் சாதிக்க முடியாதது. சற்று நீண்ட காலத்தை அது எடுக்கும். சிறுபான்மையினரான எமது…
ரமளானும் திக்ரும்
ரமளானும் திக்ரும் ஸய்யித் அப்துர் ரஹ்மான் உமரி திக்ரு எனும் தலைப்பின் கீழ்வரும் இந்நான்கையும் ரமளான் மாதத்தில் முழுமையாக வெளிப்படுத்தியாக வேண்டும். நபிகளாரின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அழகிய முன்மாதிரி வாழ்க்கை இதனையே நமக்குப் போதிக்கின்றது ‘காலையிலும், மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருங்கள். அவனே உங்கள் மீது கருணை பொழிகிறான்’. (அல்குர்ஆன் 33:42) (நபியே!) நாம் உம்மைச் சான்று வழங்குபவராகவும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்; (எதற்காக வெனில்…
”ஈதுல் ஃபித்ர்” பெருநாள் வாழ்த்துக்கள்
இன்று பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் ”ஈதுல் ஃபித்ர்” பெருநாள் வாழ்த்துக்கள்
”ஈதுல் ஃபித்ர்” பெருநாள் வாழ்த்துக்கள்
இன்று பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் ”ஈதுல் ஃபித்ர்” பெருநாள் வாழ்த்துக்கள்