மறுமையில் அறிஞர்கள் அணிக்கு முன்னிலை வகிக்கும் நபித்தோழர் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் [ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், “எனது சமூகத்திலேயே ஹலால், ஹராம் பற்றிய அதிக விளக்கமுடையவர்களாக முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் திகழ்கின்றார்கள்” உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். “மக்களே! சன்மார்க்க சட்ட திட்டங்களைப் பற்றி நீங்கள் எவரேனும் விளக்கம் தேடினால் முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் செல்லுங்கள்”. இன்னொரு கட்டத்தில்…
Category: நூல்கள்
மறுமையில் அறிஞர்கள் அணிக்கு முன்னிலை வகிக்கும் நபித்தோழர் (2)
மறுமையில் அறிஞர்கள் அணிக்கு முன்னிலை வகிக்கும் நபித்தோழர் (2) 34 ஆண்டு காலமே வாழ்ந்த முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மனித குலத்திற்கு வழங்கிய நல்லுரைகளும் அறிவுரைகளும் இதோ: என் சகாக்களே! பிற்கால குழப்பங்களில் இருந்து உங்களை நான் எச்சரிக்கின்றேன். அக்காலத்தில் செல்வம் பெருகும். திருமறை குர் ஆனை நம்பிக்கையாளர்களும், நயவஞ்சகர்க்ளும் ஓதக் கூடிய காலம் அது! குர் ஆனை கற்றவர்கள் எல்லாம் தம்மை மக்கள் வழிகாட்டியாக ஏற்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில், மமதையில்…
“தாலிபான் பிடியில்” – யுவான்னி ரிட்லி
“தாலிபான் பிடியில்” – யுவான்னி ரிட்லி தமிழாக்கம்: மு. குலாம் முஹம்மது [ அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட பின்னணியில் அமெரிக்காவினால் பழி சுமத்தப்பட்ட, தாலிபான்களைச் சந்திக்க புறப்பட்ட நங்கை நல்லாள் பிரிட்டன் நாட்டைச் சார்ந்த பத்திரிகையாளர் யுவான்னி ரிட்லி தாலிபானால் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட பின்லேதன் அவர்களைச் சந்திக்க வேண்டும், அவரைப்பற்றி எழுத வேண்டும் அதன் மூலம் பத்திரிகை உலகில்…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு! யூஸூஃப் கர்ளாவி [ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் அறியாமையின் காரணமாகப் பிடிவாதம் பிடித்தால் அவர் வழிகேடர். ”ஒருவரைப் பின்பற்றிக்கொண்டு அவர் சொல்வது மட்டுமே சரியானது, மாறான அனைத்தும் தவறானது” என்று பிடிவாதமாகப் பின்பற்றுவதை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிடித்தமான, வலிமையான ஆதாரங்களைக்…
இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) வாழ்வும் பணிகளும்
இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி வாழ்வும் பணிகளும் முஹம்மது அபூ ஸஹ்ரா இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்வு, அபிப்பிராயங்கள், ஃபிக்ஹு ஆகியவற்றைக் குறித்த ஆய்வே இந்நூல். அவரின் ஆளுமை, மனோ நிலை, சிந்தனை குறித்து புரிந்து கொள்ள ஏதுவாக முதலில் நான் அவரின் வாழ்வைப் பற்றி அலசுகிறேன். இதன் மூலம், இந்த இமாமின் சிறப்புத் திறன்கள் மற்றும் பண்புநலன்களை வெளிப்படுத்தும் அசலானதொரு சித்திரத்தை வாசகருக்கு வழங்க முடியும். அடுத்து சமயக் கோட்பாடு, ஃபத்வாக்கள்,…
இஸ்லாம் வழங்கும் சமுதாய வாழ்க்கை
இஸ்லாம் வழங்கும் சமுதாய வாழ்க்கை உண்மையான முஸ்லிமின் சமுதாய வாழ்க்கை மிகவும் உயர்ந்த கொள்கைகளின் கீழ் அமைந்ததாகும். வாழ்க்கை இன்பம் நிறைந்ததாகவும், வளம் நிறைந்ததாகவும் இருந்திடும் விதத்தில் ஒரு முஸ்லிமின் தனிவாழ்வும், பொதுவாழ்வும் அமைக்கப்பட்டுள்ளன. வர்க்கப் போராட்டம், இனவேறுபாடுகள், தனிமனிதனின் சமுதாயத்தின்மேல் ஆதிக்கம் செலுத்துவது அல்லது சமுதாயம் தனிமனிதனை ஆதிக்கம் செலுத்துவது இவைகளெல்லாம் இஸ்லாம் வழங்கும் சமுதாய வாழ்வுக்கு அந்நியமானவை. திருக்குர்ஆனிலோ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலோ வாக்கிலோ…
உயிரும் வாழ்க்கையும்!
உயிரும் வாழ்க்கையும்! நாம் நமக்குள் கொண்டிருக்கும் ‘உயிர்’ இறைவனின் பூரண ஞானத்தின் புனிதமான எடுத்துக்காட்டாகும். இறைவனின் அதிகாரத்தின் – வல்லமையின் இணையற்ற உதாரணமாகும். அவனது படைக்கும் திறனின் பாங்கான மேற்கோளாகும். உயிரை தருபவனும், வாழ்க்கையை உருவாக்குபவனும் அவனே! அவனே படைத்தவன்! இந்த உலகில் நாம் காணும் எதுவும் எதேச்சையாகத் தோன்றியவையல்ல. எவரும் தன்னைத்தானே படைத்துக் கொள்வதில்லை. அல்லது வேறு யாரையும் படைத்து விடுவதில்லை. நமக்கு இறைவனால் தரப்பட்டுள்ள உயிரும் வாழ்வும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அறிவுடைய…
அறிவுக் களங்களைக் கைப்பற்றுவோம்!
ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞர்களின் கரங்களில் இருக்க வேண்டிய நூல் [ வெறுங்கையால் முழம் போடுகிற அறிவுஜீவிகள் ஒரு புறம்; திறமையும் ஆற்றலும் நிரம்பிய இளைஞர்கள் அமைப்பை மாற்றுகிற கவலையின்றி அந்த அமைப்பிலேயே தம்மையும் தொலைத்துக் கொள்கிற அவலம் மறுபுறம்….! இந்த நிலையில் இந்தக் களத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இதற்குப் பதிலாக ஒரு தெளிவான, தீர்க்கமான மாற்று ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற தொலைநோக்குடனும் கவலையுடனும் ஆழமான ஈடுபாட்டுடனும் பற்றியெரிகிற ஆசையுடனும் செயற்கலத்தில் குதிக்கிற இளைஞர்களே இன்று…
ஆண் பெண் தொடர்பாடல்
ஆண் பெண் தொடர்பாடல் நூலிலிருந்து… [ இஸ்லாமிய சமூகங்களில் பெண்களின் பிரச்சினைகளைப் போல் சத்தியமும் அசத்தியமும், சரியும் பிழையும், அதி தீவிரப் போக்கும் அளவு மீறிய நெகிழ்வும் கலந்து குழம்பிப் போன பிரச்சினை வேறெதுவும் கிடையாது. உண்மையைக் கூறுவதாயின், எந்த மதமும், இலட்சியவாத அல்லது யதார்த்தவாத தத்துவமும் எதுவுமே இஸ்லாத்தைப் போல் பெண்ணை கண்ணியப்படுத்தி, நீதி வழங்கி அவளைப் பாதுகாக்கவில்லை. இந்த அடிப்படையில் பார்க்கும்போது பெண் தொழில் செய்வது ஆகுமானது. சிலசமயம் அவ்வாறு தொழில் செய்வது சுன்னாஹ்வாக…
இஸ்லாத்தின் நிழலில் இளைய இரத்தங்கள்
இஸ்லாத்தின் நிழலில் இளைய இரத்தங்கள் [ இளைஞர்கள் உடல் வலிமைமிக்கவர்கள்; பெருமளவு உடல் ஆரோக்கியமானவர்கள்; உள்ளம் தெளிவானவர்கள்; உணர்வுகள் விறுவிறுப்பானவர்கள்; புலன்கள் துடிதுடிப்பாகச் செயற்படுகின்றவர்கள். எனவே, ஆவல்களும் வேட்கைகளும் அதிக ஆசைகளும் உடையவர்கள். எல்லா வகையிலும் உயிரோட்டமுடனும், துடிதுடிப்புடனும் செயற்படுகின்ற தன்மையுடையவர்கள். மிக இலகுவிலேயே உணர்ச்சி வசப்பட்டு, அதன்படியாய் செயற்பட முனைந்துவிடுவார்கள். இக்கால கட்டத்தில், இளைஞர்கள்; பெற்றோர், உறவினர்கள் போன்ற பிறரில் தங்கி நிற்பதில் இருந்து தன்னில் சுயமாக தங்கி நிற்க பிரயத்தனப்படுவர். இது, இளமையின் முக்கிய…