அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் – நூல் இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும். முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ…
Category: நூல்கள்
MRM அப்துற் றஹீம்: தமிழில் சுயமுன்னேற்ற நூல் முன்னோடி
M.R.M.அப்துற் றஹீம்: தமிழில் சுயமுன்னேற்ற நூல் முன்னோடி தமிழில் ‘இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்’ எழுதிய ஒரே எழுத்தாளர் M.R.M. அப்துற் றஹீம் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் தமிழில் முதன்முதலாகச் சுய முன்னேற்ற நூல்களைப் படைத்தவருமான அப்துற் றஹீம் (Abdur-Rahim) பற்றிய அரிய முத்துக்கள் பத்து: o ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிறந்தார் (1922). தொண்டி அரபி மதரஸாவில் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தொண்டியிலும் காரைக்குடியிலும் ஆரம்பக் கல்வி கற்றார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில்…
‘சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்’
‘சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்’ [ சமூக ஆர்வலர் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) அவர்கள் அவ்வப்போது இணையத்தில் எழுதிவந்த கட்டுரைகளை நூலாக தொகுத்து வெளியிட்டு வருகிறார். ‘சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்’ சகோதரர் அவர்களின் மணிமகுடமாக அமைய வாழ்த்துக்கள். இங்கு இடம்பெற்றுள்ள நூலின் தலைப்புகளே இந்நூலின் முக்கியத்துவத்தை நமக்கு பரைசாற்றுகிறது. சிறப்பான கட்டுரைகளை தாங்கிநிற்கும் இந்நூல் ஒவ்வொரு இளைஞரின் கரங்களில் இருப்பது பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. -adm.N.I.] 1) பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அல்லாஹ் பொக்கிஷத்தை…
“கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” புத்தகத்தின் தாக்கம்!
“கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” புத்தகத்தின் தாக்கம்! நேற்று பேருந்தில் வரும் போது நல்ல கூட்டம் கடைசி சீட்டில் எனக்காக ஒரு இடம் இருந்தது!. அமர்ந்ததும் “கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” புத்தகத்தை கையில் எடுத்து வாசித்து கொண்டிருக்கும் போதே அருகில் அமர்ந்திருந்த 40 வயதுமிக்க ஒருவர் மெதுவாக என்னுடன் சேர்ந்தே இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கினார். சரியாக, நான் பிப் 98 குண்டுவெடிப்பை நெருங்கின சமயம் அவரும் இணைகிறார். நாங்கள் இருவரும் புத்தகத்துடன் பயணப்படுகிறோம். அடுத்து…
நபிமணியும் நகைச்சுவையும்
நபிமணியும் நகைச்சுவையும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை ஓர் அற்புதம். மனிதராக நாற்பது ஆண்டுகள், நபித்துவம் அருளப்பெற்றபின் அல்லாஹ்வின் தூதராக இருபத்து மூன்று ஆண்டுகள் என்று அறுபத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே கொண்ட அவர்களது வாழ்க்கை வரலாறு வற்றாத ஊற்று. அம்மாமனிதர் நபியாக வாழ்ந்து மறைந்து இன்றுவரை ஆயிரத்து நானூற்று இருபத்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு காலத்திலும் பல மொழிகளிலும் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியும் அவரது…
கண்ணுக்குள் சுவர்க்கம் – சிறுகதைத்தொகுதி
கண்ணுக்குள் சுவர்க்கம் – சிறுகதைத்தொகுதி காத்தான்குடி நசீலா [ கண்ணுக்குள் சுவர்க்கம் – சிறுகதைத்தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு ] எங்கோ ஓர் மூலையில்நான்கு சுவர்களுக்குள்ளிருந்துஒவ்வொரு இரவும்தூக்கம் காணாமல் போன கண்களுடன்ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும்முதிர்கன்னிகளுக்கு… என்ற ஓர் கவித்துவ வரிகளுடன் ஏழைக் குமர்களுக்காக தன் சிறுகதைத் தொகுப்பை சமர்ப்பணமாக்கியிருக்கிறார் கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற சிறுகதைத் தொகுதியின் நூலாசரியரான காத்தான்குடி நசீலா. புரவலர் புத்தகப் பூங்காவின் 24வது வெளியீடாக வெளிவந்திருக்கும்…
“மீண்டும் பூக்கும்” – ஜெ.பானு ஹாருன்
“மீண்டும் பூக்கும்” – ஜெ .பானு ஹாருன் அபு பப்ளிகேஷன்ஸ் — தன்னுடைய மூன்றாவது வெளியீடாக என்னுடைய ”மீண்டும் பூக்கும்” நாவலை வெளியிட்டிருக்கிறது . 130 பக்கங்கள், விலை ரூ 70 நூல் கிடைக்குமிடங்கள் : பஷாரத் பப்ளிஷர்ஸ், சென்னை -1.தொலைபேசி: 044 2522 5027 / 28
வீரமங்கை ஜெய்னபுல் கஸ்ஸாலி
வீரமங்கை ஜெய்னபுல் கஸ்ஸாலி சாலிஹான பெண் என்பவள் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமையாகவும் தன் கணவனுக்கு அன்புள்ள மனைவியாகவும் இருப்பதோடு இந்த சமூகத்திற்கும் உபயோகமுள்ள ஒரு பெண்ணாக வாழ வேணடாமா? இன்று தமிழகத்தில் முஸ்லிம் பெண்களுக்காக போராடுவதற்காக ஆண்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் தலைவர்களாவது சமூகத்திற்கு குரல் கொடுப்பதற்கு உள்ளார்களா? ஆனால் வருடந்தோறும் 6000 பெண் ஆலிம்கள் வெளிவருகிறார்கள் எங்கே செல்கிறார்கள் இவர்கள் எல்லாம்? ஒரு ஆணிற்கு அடிமையாகவா? எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சோதனையே இல்லாமல்…
செங்கிஸ்கான் பேரர்கள்
செங்கிஸ்கான் பேரர்கள் [ நூல் நயம் ] 96 பக்கத்திற்குள் மாபெரும் வரலாற்றை அடக்கியுள்ளார் நூலாசிரியர் தாழை மதியவன். நூல்வாசிப்போர் உள்ளத்தில் இடம்பெற்ற படைப்பாளர்களில் இவரும் இடம் ஒருவர். எந்தவித ஒளிவுமறைவுமின்றி பழிவாங்கும் வெறித்தனம், பாலியல் வேட்கை, பதவிப் பித்துநிறைந்த கூட்டம் என அன்றைய வரலாற்று அருவருப்புகளை பதிவு செய்துள்ளார். இந்த நூல் செழுமையான நடை கொண்டு வாசிக்கத் தூண்டுகிறது, சில இடங்களில் வாய்பிளந்து நம்மை ரசிக்கவும் வைக்கிறது. தேர்ந்த சிற்பியின் கைங்கர்யத்தால் உருவாகும் சிற்பம் போல்…
அண்ணலாரும் அறிவியலும் – நூல் அறிமுகம்
தூண்டில் பதிப்பகத்தைத் தொடங்கிய போது, தற்போது விற்பனையில் இல்லாத சிறந்த நூல்களை மறுபதிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தையும் முன்மொழிந்து தொடங்கினோம். அதற்கு முக்கியமானதொரு காரணம் உண்டு. நவீன அறிவியல் வளர்ச்சியில் முன்னேறியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் எழுத்துத் துறையில் இயங்குபவர்களுக்கு தரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. பிறமொழிகளில் உள்ள நல்ல நூல்கள் தமிழ்மொழியில் ஏராளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எத்தனையோ நூல்களும், தகவல்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்துத் துறையில் இயங்கியவர்களுக்கு இதுபோன்ற…