Category: ‘துஆ’க்கள்
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன் 1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும். இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்! அல்லாஹ்வின் தூதர்…
நடைமுறையில் உள்ள மிக மோசமான திருமண துஆவும் அதன் பொருளும்
நடைமுறையில் உள்ள மிக மோசமான திருமண துஆவும் அதன் பொருளும் [ திருமணத்தை எவ்வாறு (மார்க்கம் அனுமதித்துள்ள விதத்தில்) நடத்துவது என்பது அந்தந்த குடும்பத்தாரின் உரிமை. இதில் ஆலிம்கள் வரம்புமீறி மார்க்கம் காட்டித்தராத “தவறான ”துஆ”வை வலுக்கட்டாயமாக ஓதித்தான் ஆவேன் என்பது வரம்புமிறிய செயல். சுன்னத்துக்கு முற்றிலும் மாற்றமான “துஆ”வை ஒப்புவித்து தங்களை “சுன்னத் ஜமா அத்” என்று மார்தட்டிக்கொள்வது நகைப்புக்கிடமாகவே உள்ளது. ”கேள்வி கணக்கு கேட்கப்படும் மறுமை நாளில்” ஒவ்வொரு மணமக்களும் இவர்கள்மீது வழக்கு தொடுப்பதைதான்…
வெள்ளிக்கிழமை- அனைத்து துஆவும் ஏற்கப்படும் அந்த ஒரு நேரம் எது?
வெள்ளிக்கிழமையில் நாம் கேட்கும் அனைத்து துஆவும் ஏற்கப்படும் ஒரு நேரம் உண்டு. அது எந்த நேரமாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் இரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உண்டு. அவற்றில்… முதலாவது ஹதீஸ்: என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள (துஆ ஏற்கப்படும்) அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம்;…
பாங்கின் “துஆ” (பிரார்த்தனை)
பாங்கின் “துஆ” (பிரார்த்தனை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உம்மத்துகளிடம் ஸலவாத்துச் சொல்லக் கூறியிருப்பதுபோல தமக்காக வஸீலாவையும், பளீலாவையும், புகழுக்குரிய இடத்தையும் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் படியும் ஏவியிருக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்டால் முஅத்தின் சொல்வதைப் போன்று நீங்களும் சொல்லுங்கள். பிறகு என்மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். ஒருமுறை என்மீது ஒருவர் ஸலவாத்துச்…
பொருளுணர்ந்து ‘துஆ”ச்செய்வோம்
பொருளுணர்ந்து ‘துஆ”ச்செய்வோம் அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. திருக்குர்ஆனில் ஏராளமான ‘துஆ’க்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு ‘துஆ’வும் நம்மைப்படைத்த அந்த ஏக இறைவனே நமக்கு அவற்றைக்கொண்டு “அவனிடம்” கேட்குமாறு கற்றுக்கொடுப்பது போன்று அமைந்திருப்பதை என்றைக்கேனும் நாம் கவனித்திருக்கிறோமா? தொழுகையாளிகளில் எத்தனை பேர் ‘துஆ’வின் அர்த்தத்தை விளங்கி ‘துஆ’ கேட்கிறோம்? மஸ்ஜிதில் இமாம்கள் செய்கின்ற ‘துஆ’வுக்கு “ஆமீன்” சொல்வதோடு சரி…! அதன் பொருள் என்னவென்பதைப் பற்றியெல்லாம் நமக்கு தெரிந்துகொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருப்பதில்லை. எல்லாம்…
நன்மையை அள்ளுங்கள்!
நன்மையை அள்ளுங்கள்! 1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் 2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார். 3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும். 4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார். 5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு…
பிரார்த்தனை பற்றி திருமறையும் நபிமொழியும்
பிரார்த்தனை பற்றி திருமறையும் நபிமொழியும் அல்லாஹ்விடமே நேரடியாகக் கேளுங்கள்! (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிறகு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 2:186) உங்களுடைய இறைவன் கூறுகிறான். நீங்கள் என்னையே அழைத்துப் பிரார்த்தியுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனைக்குப் பதிலளிப்பேன். நிச்சயமாக என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிப்பவர்கள் இழிவடைந்தவர்களாய்…
என் கேள்விக்கு இறைவனின் பதில்!
என் கேள்விக்கு இறைவனின் பதில்! [ “துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ) “மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள். கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னைத் தெரிந்து கொள்வான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்…
இறைவனிடம் உரிமை கலந்த உறுதியுடன் கேட்க வேண்டும்
இறைவனிடம் உரிமை கலந்த உறுதியுடன் கேட்க வேண்டும் ஒரு வீட்டின் கதவு வேகமாகத் திறக்கப்பட்டது. ஏழு அல்லது எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை அவனது தாய் கடுமையாக அடித்து, வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு, “எனது எந்த பேச்சையும் கேட்காத உன்னை இனி இந்த வீட்டில் நான் பார்க்க விரும்பவில்லை, எங்கு வேண்டுமென்றாலும் போய்த்தொலை” என்று விரட்டிவிட்டு படீரென்று கதவை சாத்திக்கொண்டாள். வாசலில் நின்று கொண்டு சிறுவன் தேம்பித்தேம்பி அழுதான். மெதுவாக அந்த தெருவின் முனை வரை…