நிறைந்த அர்த்தத்துடன் விரிவாக விஷயங்களை வெளியிடும் பேச்சு வன்மையுடன் அல்லாஹ் என்னை அனுப்பியுள்ளான்’ என்றார்கள் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஹதீஸ் குதுஸியின் ஓரிடத்தில் ‘நீர் நாவை அசைக்க வேண்டியதுதான், உடனே நாம் பேசுவோம்’ என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான்.
Category: சொற்பொழிவுகள்
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (25)
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (25) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருபத்தி ஐந்தாவது சொற்பொழிவு அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஹிஜ்ரி ஒன்பதில் சிரியாவிலுள்ள தபூக் யுத்தக்களத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய விலைமதிப்பில்லாத சொற்பொழிவு இது: (அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி தெரிவித்த பின்னர்) “அல்லாஹ்வின் (வேதமான) கிதாப்(அல்குர்ஆன்)தான் முழுக்க முழுக்க சத்தியமானது என்று உறுதியாகக்…
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (23, 24)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருபத்தி மூன்றாவது சொற்பொழிவு அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஹிஜ்ரி எட்டில், மக்கா வெற்றிக்குப் பின்னர், மக்ஸூம் கூட்டத்தஎச் சேர்ந்த ஃபாத்திமா என்ற பெண் திருட்டுக் குற்றத்தின்மீது தண்டிக்கப்பட இருந்தாள். அப்போது அவளை விடுதலை செய்துவிடும்படி உஸாமா இப்னு ஜைது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போது இரவு நேரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்…
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (22)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருபத்தி இரண்டாவது சொற்பொழிவு அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஹிஜ்ரி எட்டு, ரமளான் மாதத்தில் மக்கா வெற்றி கொள்ளப்பட்டதற்கு மறுநாளான சனிக்கிழமையன்று ‘கஜாஅஹ்’ கூட்டத்தினர் ‘ஹுதைல்’ கூட்டத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாதவன் ஒருவனைக் கொன்றுவிட்டனர். அது சமயம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய உரை. இதைத் தெரிவித்த அபூ ஷுரைஹ் அல்-கஜாயீ ரளியல்லாஹு அன்ஹு, ”அன்று பிற்பகல்லில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி…
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (21)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருபத்தோராவது சொற்பொழிவு ஹிஜ்ரி எட்டு, ரமளான் மாதத்தில் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட வெள்ளிக்கிழமையன்று நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய பிரசங்கம் இது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபத்துல்லாஹ்வின் வாயிலில் எழுந்து நின்று அல்லாஹ்வை புகழ்ந்தபின் (ஹம்தும் ஸலவாத்தும் கூறியபின்) மூன்று தடவை ‘அல்லாஹு அக்பர்’ என்றார்கள். பின்னர் அவர்கள் பேசியதாவது: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றினான்; தன் அடியானுக்கு…
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (20)
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (20) ஐந்து காரியங்களை அலட்சியம் செய்பவர்களுக்கு ஐந்து பாக்கியங்கள் கிட்டாது. 1. உலமாக்களை மதிக்காதவர்களுக்கு சத்திய சன்மார்க்கம் சித்தியாகாது. 2. அரசர்கலையும், பணக்காரர்கலையும் வெறுத்து ஒதுக்குபவர்களுக்கு உலக ஆதாயம் கிட்டாது. 3. அண்டை வீட்டாரை பொருட்படுத்தாதவர்களுக்கு உண்மையான இலாபம் கிடைக்காது. 4.தம் உறவினர்களை மதிக்காதவர்களுக்கு இன்பமான வாழ்வு கிட்டாது. 5. என் உம்மத்துகள் ஐந்து விஷயங்களை மறந்துவிட்டு, (வேறு) ஐந்து காரியங்களுக்காக உழைக்கும் காலம் விரைவில்…
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (19)
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (19) இந்த சொற்பொழிவில், நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதனுக்கு ஈடேற்றமளிக்கும் விஷயங்களையும், மனிதனை நாசமாக்கும் விஷயங்களையும், ஆத்ம தூய்மைக்கான அடிப்படைகளையும் விளக்கியுள்ளார்கள். மக்களே! மூன்று விஷயங்கள் ஈடேற்றமளிக்கக்கூடியவை. மேலும் மூன்று விஷயங்கள் நாசத்தைத் தருபவை. இன்னும் மூன்று விஷயங்கள் உங்களின் அந்தஸ்தை (தரஜாக்களை) உயர்த்துவதற்குக் காரணமானமாய் உள்ளவை. மற்றும் மூன்று விஷயங்கள் பாவ மீட்சிக்கு உதவுபவை ஆகும். 1. உள்ளும், புறமும் ஒன்றித்த…
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (18)
[ “என் அடியார்களே! உங்களில் முன்னவர்களும், பின்னால் தோன்றக் கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், உங்களில் ஜின்னுகளும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் கேட்கட்டும். அவர்கள் கேட்பவை அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அப்படிக் கொடுத்து விடுவதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதில் கடல் நீர் ஒட்டிக்கொள்வதால் கடலில் நீர் குறையும் அளவுக்குக்கூட என்னிடமுள்ள செளபாக்கியங்கள் (நிஃமத்துகள்) குறைந்துவிட மாட்டாது. என் அடியார்க்களே! நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள்தாம். எனினும், நான்…
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (17)
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (17) நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிலிருந்து ஒரு படையைப் போருக்கு அனுப்பிய சமயம் நிகழ்த்திய சொற்பொழிவு இது. எந்தெந்த சந்தர்ப்பங்களில் எந்த முறையில் யுத்தம் புரிய வேண்டும் என்பதை முந்திய சொற்பொழிவை விடவும் இதில் விரிவாக விளக்கி இருக்கிறார்கள்: அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அவன் பாதையில் நின்று புனிதப் போர் புரியுங்கள். ஒப்பந்த துரோகமோ, சதிச் செயலோ செய்யக்கூடாது. மனிதர்களின் மூக்கையும்,…
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (14, 15, 16)
[ இந்த உலகின் பாக்கியங்கள் (நிஃமத்துகள்) அனைத்தும் அல்லாஹ்விடத்தில் வெயில் நேரத்தில் மணலிலிருந்து மிண்ணும் அணுக்களைவிடவும் அற்பமானவையாய், சிறியவையாய் இருக்கின்றன. ஒரு கொசுவின் இறக்கை அளவாவது இந்த பாக்கியங்களை அல்லாஹ் மதித்திருந்தால் ஒரு முஸ்லிம்கூட ஏழையாய இருக்கமாட்டார். ஒரு காஃபிர்கூட இங்கே இன்பம் அனுபவித்து வாழ இச்சைப்படமாட்டான். மனிதனுக்கு (அல்லாஹ் குறித்துள்ள) அவன் தவணை மட்டும் (முன் கூட்டியே) தெரிந்திருக்மேயானால் அவன் வாழ்நாட்களே அவனுக்கு மிகவும் சங்கடமானவையாய் தோன்றும். தான் (இப்போது) சுவைக்கும் உல்லாசபோகங்கள் தனக்கு (மறுமையில்)…