கேள்வி: குத்ப்மார்கள் என்றால் யார்? நபிமார்களில் சிலர் இன்றைய குத்ப்மார்களின் தரத்தை விட குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்று மறை ஞானப் பேழையில் படித்தேன். இது எப்படி சரியாகும்?! பதில்: இஸ்லாத்தின் உயிரோட்டமான ஏகத்துவத்தில் களங்கம் ஏற்படுத்தி – தனிமனித வழிபாட்டை ஊக்குவித்து – பல தெய்வ கொள்கைக்கு வழி வகுக்கும் அத்வைத கோட்பாடு (இறைவனும் மனிதனும் இரண்டற கலந்துவிட முடியும் என்ற கேடுகெட்ட சித்தாந்தம் தான் அத்வைதம்) தான் நீங்கள் படித்த பைத்தியக்காரத்தனமான உளறல்களை உள்ளடக்கியுள்ளது. குத்புகள்,…
Category: கேள்வி பதில்
‘மோசமான’ நல்ல கணவனை என்ன செய்வது?
கேள்வி: என் கணவர் நல்ல மனிதர். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. எனக்காக அவரும், அவருக்காக நானும் படைக்கப்பட்டது போல் ஒருவரை ஒருவர் நேசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த ஒரு வருட காலமாக அவருடைய நடத்தை மோசமாக இருக்கிறது. பிற பெண்களுடன் ‘சாட்” பண்ணுகிறார். செக்ஸ்மூவி பார்க்கிறார். கேட்டால் பொழுது போக்கு என்கிறார். என்னால் இதை அலட்சியப் படுத்த முடியவில்லை. நான் கண்டித்தாலோ, கத்தினாலோ அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு ‘இனி செய்ய மாட்டேன்” என்கிறார். ஆனால்…
மூடப் பழக்கவழக்கங்கள் ஒழியட்டும்!
[ திருமணத்தின் போது நடைபெறுகின்ற மூட பழக்கவழக்கங்கள் ஒருவரின் மரணத்தின் போது நடைபெறுகின்ற மூடபழக்கவழக்கங்கள் புதிய வீடு கட்டும் போது, குடிபுகும் போது நடைபெறும் மூடப்பழக்கங்கள் ] கேள்வி: நமது குடும்பத்தவர்கள் செய்கின்ற சடங்கு சம்பிரதாயங்களில் கலந்து கொள்ளலாமா? நமது சமுதாயத்தில் நடைபெறும் திருமணம், மரணம், புது வீடு புது வீடு மனை முகூர்த்தம், மற்றும் குடிபுகுதல், போன்ற நிகழ்ச்சிகளில் கடைபிடிக்கப்படுகின்ற சடங்கு சம்பிரதாயங்கள் காலங்காலமாக நடைபெற்று வருகிறதே! மேலும் நமது குடும்பத்தில் உள்ளவர்களாலும் இது பின்பற்றப்பட்டு…
”களா” தொழுகை என்றால் என்ன?
[ ஆணைகளைப் பிறப்பிக்கும் போது அதை நிறைவேற்ற இயலாத வேளைகளில் எப்படி நிறைவேற்றுவது என்ற தீர்வையும் விளக்குகிறது இஸ்லாம். இது தான் இஸ்லாத்திற்கும் ஏனைய மதங்களுக்குமுரிய வேறு பாடு. வேலைப் பளுவுக்காக தொழுகையை விடமுடியாது. எந்த வேலைக்காகவும்; நாம் நமது சொந்த அலுவல்களை விடுவதில்லை. அதை முறையாக நிறைவேற்றியே தீருகிறோம். அப்படியிருக்க நமது சொந்த வேலைகளில் காட்டும் அக்கரையை அல்லாஹ்வை வணங்குவதில் ஏன் காட்டக் கூடாது? தொழுகையின் முக்கியத்தைப் புரிந்து கொண்டால் ‘களாத் தொழுகை‘யைக் கற்பனை கூட…
இணை வைக்கும் (ஷிர்க்) இமாமைப் பின்பற்றி தொழுகலாமா?
இணை வைக்கும் (ஷிர்க்) இமாமைப் பின்பற்றி தொழுகலாமா? கடமையான ஐங்கால தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவது மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட செயல். தக்க காரணமின்றி ஜமாஅத்தை விட்டு தனித்துத் தொழக்கூடாது என்பதற்கு பல ஹதீஸ் ஆதாரங்கள் இருக்கின்றன. இமாமின் தொழுகை கூடாமல் போனாலும் அதன் காரனமாக பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகை கூடாமல் போகாது; நிறைவேறி விடும். இதற்கு மாற்றமாக ஷிர்க் பித்அத் புரியும் சில இமாம்கள் பின்னால் தொழும் தொழுகை நிறைவேறாது; அப்படிப்பட்ட இமாம்கள் பின்னால் தொழக்கூடாது என்று…
”தஸ்பீஹ்மணி”யினால் திக்ர் செய்யலாமா?
[ ஹிந்துக்களோடு இரண்டறக்கலந்து வாழ்ந்த இந்திய முஸ்லிம்களிடமிருந்துதான் இக்கலாசாரம் முஸ்லிம்களுக்குள் தோன்றியுள்ளது. ஹிந்து முனிவர்களிடம் காணப்படும் ”ஜெபமாலை” யின் மறுவடிவமே ”தஸ்பீஹ்மணி” என்பது வெளிவராத உண்மையாகும். சில ஸஹாபாக்கள் கற்களினாலும் பேரீத்தங் கொட்டைகளினாலும் திக்ர் செய்ததாக தப்லீக் ஜமாஅத் சகோதரர்களின் தஃலீம் தொகுப்பு எனும் நூலில் இடம் பெற்றுள்ள தகவல் முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்டதும் பலவீனமான செய்தியுமாகும். கைவிரல்களால் திக்ர் செய்யும் நடைமுறையே நபிவழியில் ஆதாரபூர்வமானதாகும். கைவிரல்களினால் நாம் திக்ர் செய்தால் கரங்கள் பேசும் அந்த மறுமை…
அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கலாமா?
[ ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அன்னிய ஆணுடனோ முஸாஃபஹா செய்வது ஹராமாகும். நிச்சயமாக இது கையின் விபச்சாரம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.] இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர். மார்க்கக் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு மேற்கத்திய கலாச்சாரங்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கமுடைய ஒருவரிடம் இது தவறானது என்ற மார்க்க கட்டளையை ஆதாரத்துடன் கூறினால் உடனே, நீங்கள் பழமைவாதிகள், சந்தேக…
செயற்கை முறையில் பெண்ணை கருத்தரிக்க செய்யலாமா?
[ 1. செயற்கை முறையில் பெண்ணை கருத்தரிக்க செய்யலாமா? 2. கருணைக் கொலைக் கூடுமா? 3. இஸ்லாம் மார்க்கத்தில் மணைவி இறந்து விட்டால் அடுத்த நாளே கணவன் மறுமணம் செய்து கொள்கிறான். அது போன்ற சட்டம் பெண்ணிற்கு இல்ல்லையே ஏன்? ]
முஸ்லிம் என்றால் யார்?
தாடி, தொப்பி, லுங்கி, ஜிப்பா முழுக்கை சட்டை இவைகளே ஒருவரை முஸ்லிமாக அடையாளப்படுத்துகின்றன. முஸ்லீம் என்றால் யார்? குல்-இன்ன-ஸலாத்தி-வ-நுஸுகீ-வ-மஹ்யாய-வ-மமாத்தீ-லில்லாஹி-ரப்பில்-ஆலமீன். லா-ஷரீக்க-லஹூ–வ-பிதாலிக்க-உமிர்த்து-வ-அன-அவ்வலுல்-முஸ்லிமீன். (சூரா: அன்ஆம்: 162,163) எனது தொழுகையும், சேவைகளும், வாழ்வும், மரணமும் அகிலங்களைப் படைத்து இரட்சித்து வரும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. அவனுக்கு இணை, துணை, நிகர் கிடையாது. அதையே என் முதல் கொள்கையாகக் கொள்ளுமாறு ஏவப்பட்டுள்ளேன். யானே முதலாவது முஸ்லீமாக இருக்கிறேன் என்று (நபியே!) நீர் கூறுவீராக! வெறும் உடலையும், வெளிக்காரணங்களையும் நம்புபவர் முஸ்லிம் அல்ல. ஒரு…
பல முஸ்லிம்கள் ஒரே தட்டில் ஒன்றிணைந்து சாப்பிடுகிறார்களே! ஏன்?
Q. இரண்டாயிரம் ஆண்டில் ஒருவருக்குப் போடும் ஊசியை மற்றொருவருக்குப் பயன்படுத்தினால் நோய் வருகிறது எனக் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் ஒரே தட்டில் பல முஸ்லிம்கள் ஒன்றினைந்து சாப்பிடுகிறார்களே இது ஏன்? A. முதலில் நாம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். எய்ட்ஸ் நோயைப் பற்றி ஆய்வு செய்த மருத்துவ உலகம் கூறுவது என்னவென்றால் எய்ட்ஸ் நோயாளிகளுடன் ஒன்றாக அமர்ந்து இருப்பதாலோ, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதலோ எய்ட்ஸ் தொற்றாது என்பது மருத்துவ ஆராய்ச்சியின் முடிவாகும்….