ஹாஃபிஸ், எஸ்.இ.எம். ஷெய்கப்துல் காதிர் மிஸ்பாஹி கேள்வி: கண் திருஷ்டியின் உண்மை நிலை என்ன? பொறாமைக்காரர்கள் பொறாமைக் கொள்ளும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்) (அத்: 114 வச: 5) என்ற இறை வசனத்தின் கருத்து என்ன? ‘கப்றுகளிலுள்ள மூன்றில் ஒரு பகுதி கண்திருஷ்டியிலுள்ளதாகும்’ என்று பொருள் தொனிக்கும் ஹதீஸ் ஸஹீஹானதா? ஒருவர் பொறாமைக்கொள்கிறார் என சந்தேகம் வரும்போது ஒரு முஸ்லீம் (தன்னைக் காத்துக்கொள்ளும் பொருட்டு செய்ய வேண்டியது என்ன? கண்திருஷ்டியிட்டவரின் உடலைக்…
Category: கேள்வி பதில்
திருமணத்திற்கு முன் பழகினால் என்ன தவறு?
கேள்வி: பெண்ணுக்குத் தெரியாத மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளைக்குத் தெரியாத பெண்ணுக்கும்; இடையே மணமுடித்து வைக்கின்றனர். வாழ வேண்டியது நாங்களா? மணமுடித்து வைப்பவர்களா? இருவரையும் பழக விட்டு ஒருவர் மற்றவரை புரிந்து கொண்டு பிறகு ஏன் திருமணம் நிச்சயிக்கப் படக்கூடாது? பதில்: பெண்ணும் ஆணும் பார்த்துக் கொள்ளாமல் திருமணம் முடிப்பதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. ஒருவர் தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறியபோது ‘மணப்பெண்ணைப் பார்த்துவிட்டாயா?’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டனர். அவர்…
ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாமா?
ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாமா? தங்க நகைகள் விற்பது போலவே கவரிங் நகைகளையும் விற்கலாம். மார்க்கத்தில் கவரிங் நகைகளை விற்கலாகாது என்று எந்தத் தடையும் இல்லை. (வாங்குவோரை) ஏமாற்றும் வியாபாரத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 2783) கவரிங் நகைகளைத் தங்க நகை என்று சொல்லியோ, அல்லது அதில் கலந்துள்ள தங்கத்தின் அளவை விட அதிக அளவு தங்கம்…
ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா?
முஸ்லீம்கள் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யலாமா? ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா? என்பதை ஆய்வு செய்வதற்கு முன் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? அதனால் பொது மக்களுக்கு என்ன பயன் என்பதை அறிய வேண்டும்! அலசுவோம் வாருங்கள்! வியாபாரம் வியாபாரம் செய்யப்படும் முறையை 4 வகைப்படுத்தலாம் 1. தனி நபர் நிறுவனம், 2. கூட்டு நிறுவனம், 3. வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனம், 4. பொதுத்துறை நிறுவனம் தனி நபர் நிறுவனம் (PROPRIETORSHIP CONCERN) உங்களிடம் 5 இலட்ச…
நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தொலைபேசியில் பேசலாமா?
நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன்தொலைபேசியில் பேசலாமா? நிச்சயதார்த்தம் என்பது ஷரீஅத்திலும் சரி, மரபிலும் சரி திருமணம் அல்ல. அது திருமணத்திற்கான ‘முன் நிகழ்வு’ மட்டுமே ஆகும். திருமணமன நிச்சயதார்த்தம், திருமணம் ஆகிய இவ்விரு அம்சங்களையும் ஷரீஅத் தெளிவாக பிரித்து வைத்துள்ளது. ”நிச்சயதார்த்தம்” என்பது எவ்வளவு பிரபலப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டாலும் அது ஓர் உறுதிப்பாட்டை வழங்குகிறது என்ற நிலையை விட்டு நகர்ந்து விடாது. நிச்சயதார்த்தம் எந்நிலையிலும் நிச்சயிக்கப்பட்ட ஆணுக்கு அப்பெண் மீது எவ்வித உறிமையையும் வழங்கி விடாது. தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை இன்னொருவர்…
ஆண்களின் ஆடையை, பெண்கள் அணியக் கூடாது என்றால்…
o ஆண்களின் ஆடையை, பெண்கள் அணியக் கூடாது என்றால் பேண்ட் சட்டைகளின் நிலை என்ன? o தொப்பியை கட்டாயம் அணிய வேண்டுமா? o பலவீனமான அறிவிப்பு என்று தெரிந்த பின்னரும் அதைப் பின்பற்றி அமல் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? ஆண்களின் ஆடையை, பெண்கள் அணியக் கூடாது என்றால் பேண்ட் சட்டைகளின் நிலை என்ன ? ஆண்களின் ஆடையைப் பெண்கள் அணியக் கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை. இன்று பெண்களுக்கென்றே தனியாக பேண்ட், சட்டைகள் இருக்கின்றன. இவற்றின்…
கேள்வி பதில் பகுதி – 13
கேள்வி: சில ஊர்களில் குர்பானி கொடுக்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் பங்குவைக்கின்றார்களே! இதற்கு அனுமதி உண்டா? பதில்: அல்லாஹ்வும் அவனது தூதரும் இது போன்ற மூட நம்பிக்கைகளை நமக்குக் கற்றுத் தரவில்லை. கேள்வி: பள்ளிவாசல், மத்ரஸா போன்றவற்றை நிர்வகிப்பவர் எப்படிப்பட்ட தகுதிகள் கொண்டவராக இருக்க வேண்டும்? மதுக்கடை வைத்திருப்பவர்கள், சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் போன்றவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்கலாமா? பதில்: பள்ளிவாசலை நிர்வாகம் செய்வோரின் தகுதிகளை அல்லாஹ் தெளிவாகக் கூறுகின்றான். “அல்லாஹ்வின் மீதும்,…
கேள்வி பதில் பகுதி – 12
கேள்வி: “இகாமத் சொன்னதும் உடனே எழக்கூடாது; ஹய்ய அலஸ்ஸலாஹ் என்று கூறும்போதே எழ வேண்டும்” என்று எங்கள் இமாம் பயான் செய்தார்! சரிதானா? பதில்: தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் என்னைக் காணும் வரை நீங்கள் எழ வேண்டாம்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவுது, நஸயீ, திர்மிதீ, அஹ்மத், தாரமீ. இதிலிருந்து, இமாம் தொழ வைக்கின்ற இடத்திற்கு வந்துவிட்டால் நாம் எழ வேண்டும் என்பதை விளங்கலாம். கேள்வி: ரமலான்…
முஸ்லீமாவது எப்படி?
“அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ” அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உண்டாவதாக. இந்தச் சிறிய பிரசாரத்தின் நோக்கம், இஸ்லாத்தைத் தம் மார்க்கமாக – வாழ்க்கை வழியாக-ஏற்றுக் கொள்ள விழையும் நண்பர்களிடையே நிலவும் சில தப்பெண்ணங்களை நீக்குவதேயாகும். இஸ்லாத்தில் நுழைவதற்கு யாரேனும் பெரிய இஸ்லாமிய அறிஞரிடமிருந்து பிரகடனம் வரவேண்டும் என்றோ, ஓர் அதிகாரியிடம்…
டாக்டர் ஜாஹிர் நாயக் பதில்கள்(1)
கேள்வி : முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் – பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?. பதில் : உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும் மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முஸ்லீம்கள் அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர். இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் முஸ்லீம்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேற்படி தவறான தகவல் மற்றும் தவறான பிரச்சாரம் – முஸ்லீம்கள்…