இறைவனின் உண்மை அறியும் சோதனை! “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான். இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். அல்லது தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு) தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது. எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம்…
Category: குர்ஆன்
படைப்புகளின் சரணடைதல் அல்லாஹ் ஒருவனுக்கே!
படைப்புகளின் சரணடைதல் அல்லாஹ் ஒருவனுக்கே! உண்மையின் உண்மையல்லவா இது! உள்ளத்தின் எண்ணக்கிடங்கை அறியும் அல்லாஹ்வின் ஆற்றல்! அனைத்தையும் விட ஒரு முஸ்லிமுக்கு உவந்தவை அல்லாஹ்வும் அவனது தூதருமே! மற்ற மதங்களுடன் சமரசம் ஏதுமற்ற ஓரிறை வணக்கம்! இணைவைப்பின் கொடூரம் புரிகிறதா? இறை விசுவாசத்துடன் இணைவைப்பு எனும் அக்கிரமத்தை கலக்காதிருத்தல்! உண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்! உள்ளத்தில் நிராகரிப்பின் சிறு வடுவும் ஏற்படாது காத்துக்கொள்ளல்! வேத ஞானம் ஏதுமின்றி மக்களை வழிகெடுக்கும் குறுமதியுடையோர்! பாவத்திலிருந்து பரிசுத்தம், தானம்,…
அல்லாஹ்வின் அருள்மொழி – 008
நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல்! மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள். தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர். எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன்: 3:110) அல்லாஹ்வை மறக்க வைத்த உலகின் வீணான ஆசைகள்! தாங்களும்…
மனித குலத்தின் ஒளிவிளக்கு அல்குர்ஆன்
மனித குலத்தின் ஒளிவிளக்கு அல்குர்ஆன் எம்.பி.ரபீக் அஹ்மத் ‘துக்ளக்’ ஆசிரியர் சோ ராமசாமி ஒரு மீலாது விழாவில் ஒரு அழகான கருத்தைச் சொன்னார். “எல்லா மதத்தவர்களிடமும் நான் நாத்திகர்களை பார்க்கின்றேன். ஆனால் முஸ்லிம்களிடையே நாத்திகர்களை பார்ப்பது அரிதாக இருக்கின்றது; ஏனெனில் அவர்களுடைய கடவுள் நம்பிக்கை அவ்வளவு உறுதியாக இருக்கின்றது” என்றார் அவர். இந்த உறுதியை முஸ்லிம்களிடம் தந்தது எது? அல்குர்ஆன்தான். நாத்திக வாதம் என்ற நோய் AIDS நோயைவிட பயங்கரமாக பரவி வருகின்றது. கடவுள்…
குர்ஆனை மனப்பாடம் செய்ய உதவும் குறிப்புகள்!
குர்ஆனை மனப்பாடம் செய்ய உதவும் குறிப்புகள்! உங்களுடைய மூளை எப்படி வேலை செய்கிறது? நரம்பணுக்கள் (Neurons) தான் மூளையின் கட்டுமான தொகுதிகள் (building blocks of the brain) அனைத்து யோசனைகளும் (நினைவாற்றல், நனவுநிலை அடங்கலாக) இச்சிறு செல்களைச் சார்ந்து தான் இருக்கின்றன. நரம்பணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து வலைப்பின்னல் (neural networks) இணைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலம் செய்திகளை ஒரு நரம்பணுவிலிருந்து மற்றொரு நரம்பணுவிற்கு கடத்துகின்றன. இவ்விணைப்புகள், எவ்வளவு அவை உபயோகப்படுத்தப்படுகின்றனவோ அதற்கு ஏற்ப ஒத்துப்போகின்றன. அவைகள்…
இலாஹ் – இறைவன்: சொற்பொருள் ஆய்வு
இலாஹ் – இறைவன்: சொற்பொருள் ஆய்வு பல இஸ்லாமிய சகோதரர்களுக்கு தங்களுடைய இறைமையியல் தத்துவங்கள் சரியாக தெரியாமல் இருக்கிறார்கள். விளைவு… தர்ஹா வழிபாடு போன்ற ஒரிறைக்கு எதிரான திசை நோக்கி போய் விடுகிறார்கள். அவர்களுக்கு சரியான விளக்கமளிப்பதற்காகவே இப்பதிவு. குர்ஆனின் அடித்தளம் ஓரிறைக் கொள்கையே ஆகும். இதர மதங்களும், நெறிகளும்கூட தொடக்கத்தில் ஓரிறைக் கொள்கையை போதித்தாலும்,காலப் போக்கில் அதில் நெகிழ்வுகளும்,பிறழ்வுகளும் ஏற்பட்டு ஒன்று மூன்றாகி,மூன்று முப்பதாகி,முப்பது முப்பது கோடியாகி எண்ணற்றக் கடவுள்கள் உருவாகி விட்டனர். ஆனால் இஸ்லாம்…
ரமலான்! வரவேற்பும்… வழியனுப்புதலும்…
ரமலான்! வரவேற்பும்… வழியனுப்புதலும்… ஒவ்வோர் ஆண்டும் மகத்துவமும், அருள்வளமும் நிறைந்த ரமலான் மாதம் நம்மிடம் வருகின்றது. துவக்கத்தில் வரவேற்கின்றோம், முடிவில் வழியனுப்பி வைக்கின்றோம். வரவேற்பதும், வழியனுப்புவதும் நமக்குத் தான் பழகிப்போன விஷயமாயிற்றே! ”ரமலானில் நாம் என்ன சாதித்து இருக்கின்றோம்?, நோன்பின் மூலம் நாம் அடைய வேண்டிய தக்வாவை அடைந்து கொண்டோமா?, நரக நெருப்பிலிருந்து ஈடேற்றம் பெற்று விட்டோமா? பாவத்திலிருந்து மீட்சி அடைந்தோமா? அல்லாஹ்வின் ரஹ்மத்தை அடைந்து கொண்டோமா?” இது போன்று ஆயிரமாயிரம் கேள்விகள் பதில் இல்லாமல் நம் மனதைக்…
நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?” (2:44) ”தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை”. (2:269) ”அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான…
அல்லாஹ்வை நிராகரிக்கும் மனித சமுதாயமே! இந்த அறிவார்ந்த விளக்கம் உமக்கு போதாதா?
அல்லாஹ்வை நிராகரிக்கும் மனித சமுதாயமே! இந்த அறிவார்ந்த விளக்கம் உமக்கு போதாதா? ”(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அந்த வானத்தைப் படைத்தான்.” (அல்குர்ஆன் 79:27) ”வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமுமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றலுடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன்.” (அல்குர்ஆன் 46:33) ”முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கின்றீர்கள். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா? (இவ்வாறுதான்…
கடன் பற்றிய அல்லாஹ்வின் நேரிய வழிமுறைகள்!
கடன் பற்றிய அல்லாஹ்வின் நேரிய வழிமுறைகள்! “ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும். எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும். அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்….