அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125)மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்¢ இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்¢ அவனே இரவைப்…
Category: குர்ஆன்
பெரும்பாவிகள் யார்?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் – பெரும்பாவிகள் ஆவார்கள்.
அநியாயக்காரர்களின் உயிர் கைப்பற்றப்படும்போது…
அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில், மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அப்போது அவர்கள், “நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே!” என்று (கீழ்படிந்தவர்களாக மலக்குகளிடம்) சமாதானம் கோருவார்கள்; “அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்; (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்.) (அல்குர்ஆன்: 16:28)
இறைமொழி – 004
அனைத்திலும் ஜோடி ‘மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான். இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான். அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’ அல்குர்ஆன் 13:3‘(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான். மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்¢ இம் மழை நீரைக் கொண்டு நாம்…
மகத்தான நற்பாக்கியங்கள்
மகத்தான நற்பாக்கியங்கள் 1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் 2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார். 3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும். 4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார். 5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு…
இறைமொழி – 003
அவன் தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். (சூரா அத்தவ்பா : 33) எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.(அல்குர்ஆன் 53:28) ஆனால் அவர்களில் பெரும்பாலோர்…
இறைமொழி – 002
தீமைக்குக் கூலி அதே போன்று தீமைதான். இருப்பினும் அந்த தீமையை மன்னித்து பொறுமையை மேற்கொள்வதானது திண்ணமாக உறுதிமிக்க வீரச்செயல் ஆகும். – அல்குர்ஆன் 42:43
இறைமொழி – 001
நன்மையும் தீமையும் சமமாகாது. மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையை தடுப்பீராக! அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கூட உற்ற நண்பர்களாய் ஆகிவிடுவதைக் காண்பீர். பொறுமை கொள்வோரைத்தவிர வேறு எவர்க்கும் இந்த குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும் பேறு பெற்றவர்களைத்தவிர வேறெவர்க்கும் இந்த உயர் தகுதி கிட்டுவதில்லை. – அல்குர்ஆன் 41:34
Names of Allah
The most beautiful names belong to Allah: so call on him by them. (7:180)7-180 அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் Those who believe, and whose hearts find satisfaction in the remembrance of Allah: for without doubt in the remembrance of Allah do hearts find satisfaction. (13:28) அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள்…
உணர்வூட்டும் உபதேசம் – 001
எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ, அவருக்கு அந்த விளைச்சலை நாம் அதிகரிக்கச் செய்கின்றோம். எவர் இம்மையின் விளைச்சலை விரும்புகின்றாரோ, அவருக்கு அதனை இம்மையிலேயே அளிக்கின்றோம். ஆனால் மறுமையில் அவருக்கு எந்த பங்கும் இல்லை. – திருக்குர்ஆன் 42:20