வேதம் புதிது டாக்டர், அஹ்மது பாகவி PhD ”நாமே இந்த இந்த வேதத்தை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.” – திருக்குர்ஆன் 15:9. இன்று உலகில் வேதங்கள் என்ற பெயரால் கற்பனைகளையும், கனவுகளையும், அறிவிற்கே பொருந்தாத கதைகளையும் கலந்து உலா வரும் பல வேதநூல்களைக் காணமுடிகிறது. மனிதன் தான் விரும்பியவாறு தன் கையாலே எழுதிவிட்டு அதை இறைவன் அருளியதாக வாதிடுகிறான். ஆன்மீகத்தின் பெயரால் புனையப்படும் பல கதைகள் கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கும்…
Category: குர்ஆன்
சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து)வின் சிறப்பு
சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து)வின் சிறப்பு திருக்குர்ஆனில் மிக முக்கிய அத்தியாயம் ‘சூரத்துல் ஃபாத்திஹா‘ எனப்படும் அல்ஹம்து அத்தியாயமாகும். ஏராளமான சிறப்புகளைக் கொண்ட அந்த அத்தியாயத்தை அறியாத – மனனம் செய்யாத முஸ்லிம்கள் யாரும் உலகில் இருக்க முடியாது. ஆனாலும் அதன் மகத்துவத்தை அவர்கள் அறிவதில்லை. இதன் சிறப்பு குறித்து வந்துள்ள நபிமொழிகளை தமிழறியும் முஸ்லிம்கள் அறிந்துக்கொள்ள வேண்டும், பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக தொகுத்து வழங்குகிறோம்.
இறைமறை கூறும் இவ்வுலகின் உண்மை இயல்பு
குர்ஆன் கூறும் இவ்வுலகின் உண்மை இயல்பு மனிதர்களை உண்மையான நேர்வழியில் செலுத்த வழிகாட்டும் இறுதி இறை வெளிப்பாடாகிய குர்ஆன், இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் இறைவனுக்கு அடிபணிவதே ஆகும். மனிதன் இறைவனுக்கு அடிபணிகின்றானா அல்லவா என்று சோதிப்பதற்காகவே அவன் அனுப்பப்பட்ட இடம்தான் இவ்வுலகம் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது. இந்தச் சோதனையில் மனிதனை நேர்வழியில் நின்றும் பிறழத் தூண்டும் வகையில் படைக்கப்பட்ட பிரத்தியேகக் கூறுகளைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கின்றான்; அவற்றின் தன்மைகளைப் பற்றிக் கூறுகையில் அவை முற்றிலும் ஏமாற்றுபவை எனவும்…
அருள் மறை கூறும் அழகிய அத்தாட்சிகள்
சிந்திப்போம் நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் – பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?(அல்குர்ஆன் 10:3) …
இறைமறையும் இலக்கியமும்
இறைமறையும் இலக்கியமும் உலகப் பொதுமறையாகத் திகழும் அல்குர்ஆனின் இலக்கிய நயம் பற்றி யாவரும் அறிவர். இலக்கிய நூல் என்பது எத்துறையைச் சார்ந்தவரும் எக்கோணத்தில் சிந்தித்தாலும் கருத்துக்களைத் தந்து கொண்டேயிருக்க வேண்டும். நீரூற்று போல் இலக்கியக் கருத்துக்கள் ஊரிக்கொண்டிருக்க வேண்டும். பல்வேறு இலக்கியச் சட்டங்களை உட்கொண்டிருக்க வேண்டும். அப்படியொரு நூலைத்தான் இலக்கிய நூல் என்ற கூற முடியும். அதற்கு தகுதி வாய்ந்த ஒரே நூல் அல்குர்ஆன் மட்டுமே. பல்வேறு மொழிகள் உலகில் பரவியிருந்தாலும் அல்லாஹ் அரபி மொழியைத் தேர்ந்தெடுத்த…
யுகமுடிவு நாளிலே!
அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் – அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது. (அல்குர் ஆன் 42:47) (அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும் வெளிப்படுத்தும். (அல்குர் ஆன் 10:54) ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக…
அல்லாஹ்வின் அருள்மொழிகள்-017
ஸூரத்துத் தவ்பா” விலிருந்து 9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக – ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள். 9:23. ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை…
திருக்குர்ஆனும் மனிதனும்
திருக்குர்ஆனும் மனிதனும் ‘மனிதன் சுதந்திரமுள்ளவன், பொறுப்புள்ளவன், நன்மை தீமைகளை பிரித்தறியும் ஆற்றல் உள்ளவன், இறைவனுடைய சட்டங்களுக்க கீழ்படியும் இயல்புள்ளவன். அவன் செய்த பாவங்களுக்காக பிறர் பிணை நிற்க வேண்டிய அவசியமில்லை. அவனது குற்றங்களுக்காகவும், பாவங்களக்காகவும் அவனே மன்னிப்புக் கேட்க வேண்டும். அருளும், அன்பும், இரக்கமும் நிறைந்த இறைவன் அவனுடைய பாவங்களை மன்னிப்பான்’ என்கிறது திருக்குர்ஆன். ‘ஒவ்வொரு குழந்தையும் இறைவனுக்கு கீழ்படியும் சட்டத்திற்குட்பட்டு, அதாவது முஸ்லீமாகவே பிறக்கின்றது’ என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அவ்வாறு…
அல்லாஹ்வின் அருள்மொழிகள்-016
0 ”நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?”(29:2) 0 ”உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.” (67:2) 0 ”உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும்…
நயவஞ்சகத் தீர்ப்புக்கு அல்லாஹ்வின் பதில்!
0 ”தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல் குர்ஆன் 9:32) 0 ”அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரை அனுப்பினான்.)” (அல் குர்ஆன் 9:33) 0…