இறையன்பிற்கு நிகரேது! குழந்தையின் மீது தாயன்பை ஏற்படுத்திய இறைவனின் கருணையை கண்டு வியக்கின்றேன். அல்லாஹ் தனது படைப்பினங்கள் மீது காட்டும் கருணையில் நூறில் ஒன்றுதான் தாய் தனது குழந்தை மீது காட்டும் பாசம். அந்தப் பாசமே மாபெரும் பிணைப்பாக மறக்காத வடுவாக குழந்தையின் மனதில் பதியுமென்றால் இறையன்பை என்ன வென்பது? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். (மீதமிருக்கும்)…
Category: கட்டுரைகள்
இன்பமும் துன்பமும் சமமே!
இன்பமும் துன்பமும் சமமே! முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இரவு பகலைப்போல் ஒன்றன்பின் ஒன்றாக மாறி மாறி வருகின்றன. இது இயற்கையின் அமைப்பு; இறைவனின் நியதி. இந்த இயற்கை அமைப்பை யாராலும் மாற்ற முடியாது. அதாவது எப்போதும் இன்பமே அனுபவிக்குமாறு அல்லது எப்போதும் துன்பமே அனுபவிக்குமாறு செய்ய முடியாது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி இன்பம்-துன்பம் மாறி மாறி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்…
மிகச்சிறந்த படைப்பாளன் அழகிய வடிவமைப்பாளன்
மிகச்சிறந்த படைப்பாளன் அழகிய வடிவமைப்பாளன் கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ உறுதியாக நம்பிக்கை கொண்டோருக்கு இந்த பூமியில் பல சான்றுகள் உள்ளன. உங்களுக்குள்ளேயும் பல சான்றுகள் உள்ளன. அவற்றை நீங்கள் கவனிக்கவேண்டாமா? வானத்தில் உங்களுக்கான உணவும் உங்களுக்காக வாக்களிக்கப்பட்டவையும் உள்ளன. (குர்ஆன் 51 : 20,22) படைத்த ஒருவன் இருக்கிறான் என்பதற்கு… மேலே, வானத்திலும் கீழே, பூமியிலும் நிறைய சான்றுகள் உள்ளன. மேலே கீழே, அங்கே இங்கே என நாம் ஆராய வேண்டிய…
மனமும் மூளையும் – ரஹ்மத் ராஜகுமாரன்
மனமும் மூளையும் – ரஹ்மத் ராஜகுமாரன் உகங்ளால் முயுடிமா ? உகங்ளால் இப்பகக்த்தை பக்டிக முந்டிதால் உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம் நூறுற்க்கு 55 சவிகித மகக்ளால் மடுட்மே இ்பப்டி பக்டிக முயுடிம். நீ்கங்ள் எபப்டி இதை பக்டிகிர்றீகள் என்று உகங்ளால் நம்ப முயடிவிலைல்யா? ஆசச்ரிமாயன ஆறற்ல் கொடண்து மதனினின் மூளை ஒரு ஆய்ராச்யிசில் கேபிம்ட்ரிஜ் பல்லைகக்ககழம் இந்த உமைண்யை கடுண்பித்டிது உளள்து. எத்ழுக்துகள் எந்த வசைரியில் உளள்து எபன்து முகிக்யமல்ல முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள…
மனித வாழ்க்கையில் ஒவ்வொரு விநாடியும் மதிப்புமிக்கது, முக்கியமானது!
மனித வாழ்க்கையில் ஒவ்வொரு விநாடியும் மதிப்புமிக்கது, முக்கியமானது! மவ்லவீ மு ஹம்மது கான் பாகவி மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு விநாடியும் மதிப்புமிக்கது; முக்கியமானது. வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மானிப்பது அந்த ஒரு விநாடிதான். ஒரு நிமிடம் என்பது எவ்வளவு நீளமானது என்பதை, சாலையில் சிக்னலுக்காகக் காத்திருக்கும்போது ஒவ்வொருவரும் உணர்வார்கள். இழந்ததைத் திரும்பப் பெற்றுவிடலாம். கல்வி, ஆற்றல், செல்வம், பதவி ஆகிய எல்லாவற்றுக்கும் இரு பொருந்தும். ஆனால், இழந்த…
சாபப் பிரார்த்தனையா? சாதகப் பிரார்த்தனையா?
சாபப் பிரார்த்தனையா? சாதகப் பிரார்த்தனையா? நூ. அப்துல் ஹாதி பாகவி சாலையில் செல்லும்போது ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருக்கலாம். சில இடங்களில் கழிவுநீர் தனது ஓடுதளத்தைத் தாண்டி நாம் செல்லும் சாலையில் நம்மோடு ஓடி வரலாம். சில இடங்களுக்குச் செல்லும்போது நமக்குப் பிடிக்காத அலுவலர்களைச் சந்திக்க நேரிடலாம். நமக்குப் பிடிக்காத ஆள்களை நாள்தோறும் தாண்டிச் செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான நிகழ்வை நாள்தோறும் எதிர்கொள்ளலாம்….
மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம்
மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம் முதலாவதாக இஸ்லாம் கூறுகின்றது, “லா இக்ராஹ ஃபித்தீன்” மார்க்கத்தில் நிர்ப்பந்தமே இல்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி பிரிந்து முற்றிலும் தெளிவாகிவிட்டது. அன்று மீனாட்சிபுரம் போன்ற இடங்களில் மாற்றத்துக்கும் நாட்டுப் பணம்தான் காரணம் என்று சொல்லும் மாற்று மதத்தவர் இஸ்லாத்தில் உள்ள இத்தகைய உண்மை நிலையை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். பணத்தையோ, பதவியையோ அல்லது வேறு எதையும் விலையாகக் கொடுத்து மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. அவ்வாறு இஸ்லாத்திற்கும், இவர்களுக்கும், அவ்வாறு…
பிரச்சினைக்குத் தீர்வு சுன்னாவிலா பித்ஆவிலா?
பிரச்சினைக்குத் தீர்வு சுன்னாவிலா பித்ஆவிலா? அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் 3 கூற்றுகள்; 1. முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை அவர்களை யார் வணங்கினார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும். யார் அல்லாஹ்வை வணங்கினார்களோ அவன் உயிருடனே உள்ளான். 2.அல்லாஹ்வின் மீது சத்தியமாக கொடிய மிருகங்கள் என்னைத் தாக்கினாலும் உஸாமாவின் படையை அனுப்பியே தீருவேன். 3. அல்லாஹ்வின் மீது ஆணையாக தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்து நோக்குவோருடன் போர்செய்தே தீருவேன். மேற்கூறிய அபூபக்ர் ரளியல்லாஹு…
நவ யுகத்தின் அறைகூவலும் நமது இளைஞர்களும்
நவ யுகத்தின் அறைகூவலும் நமது இளைஞர்களும் மௌலான அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) நவயுகம் என்றால் என்ன? இதைப்பற்றி முதலில் நீங்கள் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்து வந்த மனிதன் தனது காலத்தை நவயுகம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறான். சென்று போக யுகம் பூர்வீகம். அதில் மனித சமுதாயத்திற்கு எத்தகைய நன்மையும் விளையவிலலை என்றே கருதி வந்தான். அக்கால மக்கள் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிப் போயிருந்தனர். தெளிவான சிந்தனையுள்ளவர்கள், கல்வி கலைகளில்…
இவர்களை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்!
இவர்களை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்! அல்லாஹ் மறுமை நாளில் இவர்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய நபர்கள் யாரென்றால்… கணவனுக்கு நன்றி செலுத்தாத மனைவியை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். (நூல்: பைஹகி 7 : 294) ============= 1 ) மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான்.2 ) பெற்றோர்களுக்கு மாறு செய்பவன்.3 ) மது அருந்துபவன்.4 ) கொடுத்ததை சொல்லிக்காட்டுபவன். (நூல்: ஹாகிம்…