முஸ்லிம் தலைவர்களும் இஸ்லாமிய தலைமையும் பின்வரும் இறை வசனத்தை ஓர் ஆட்சித்தலைவர் தன் இலட்சியமாகக் கொள்ளவேண்டும். ”அவர்கள் எத்தகையவர்களெனில், நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் வழங்குவார்கள். மேலும், நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள்.” (சூரா அல் ஹஜ் 22:41) இன்று ‘மஹல்லா” ‘முத்தவல்லி” அமைப்பில் இருந்து துவங்கி உலக அரங்கில் பல்வேறு முஸ்லிம் நாடுகளின் ஆட்சித்தலைமை வரை எல்லா மட்டங்களிலும் முஸ்லிம்களுக்குத் தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவாகத்…
Category: கட்டுரைகள்
கிறிஸ்தவர்களின் திரித்துவம் ( Trinity )
நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், ‘ஒருவர்’ தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், ‘கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்’ (Triune God) என்று கூறுவார்கள். கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற ‘திரித்துவம்’ (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை பைபிளில் கூறப்படாத கடவுள் கொள்கையாகும். இது பைபிளின் பல்வேறு வசனங்களுக்கு முற்றிலும் முரண்பாடுடையதாக இருக்கிறது. மேலும் ஒரே ஒரு கடவுள்…
காஃபிர் என்பது கேவலமான சொல்லா?
காஃபிர் என்பது கேவலமான சொல்லா? திருக்குர்ஆனில் சொல்லப்படும் ‘காஃபிர்’ (Kaafir/كَافِر ) என்ற அரபிச் சொல்லை மாற்று மத சகோதரர்கள் தம்மைக் குறிப்பிடும் கேவலமான சொல்லாகக் கருதுகிறார்கள். திருக்குர்ஆன் ‘காஃபிர்’ என்று தங்களை ஏசுவதாக எண்ணுகிறார்கள். அப்படியொரு தவறானப் பிரச்சாரம், திருக்குர்ஆன் பற்றி விளங்காதவர்களால் அல்லது விளங்கியிருந்தும் உள்நோக்கத்துடன் இஸ்லாத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்படுபவர்களால் முடுக்கி விடப்படுகிறது. இந்து மதத்தைப் பின்பற்றுபவரை ‘இந்து’ என்கிறோம்; கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவரை ‘கிறிஸ்தவர்’ என்கிறோம். அதேபோல்தான் இஸ்லாத்தைப் பின்பற்றுபரைக் குறிக்க ‘முஸ்லிம்’…
பத்து கட்டளைகள்
குர்ஆனில் பத்து கட்டளைகள் திருக் குர்ஆனின் வசனம் 6:151,152 முன்வந்த வேதங்களில் வரும் பத்து கட்டளைகளை பின் வருமாறு உறுதிப்படுத்துகிறது: ”வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்தவற்றைக் கூறுகிறேன்’ என்று (முஹம்மதே) கூறுவீராக! அவை: 1. அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது. 2. பெற்றோருக்கு உதவுங்கள். 3. வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும்,அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.
அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் – 01
வழிபாடுகளில் முகஸ்துதி நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை முகஸ்துதியை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடனும் நபிவழியைப் பின்பற்றியும் செய்யப்பட்டிருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டும் மெச்ச வேண்டும் என்பதற்காக எவன் வழிபாடு செய்கிறானோ அவன் சிறிய இணைவைப்பைச் செய்தவன் ஆவான். அவனுடைய செயல் அழிந்து விடும். உதாரணமாக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் தொழுவதைப் போல. அல்லாஹ் கூறுகிறான்: “இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள். (உண்மையில்) அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். இவர்கள்…
பெருநாள் தொழுகை
முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட இஸ்லாம் வருடத்தில் இரண்டு பெருநாட்களை வழங்கியுள்ளது. இந்த நாட்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா நகருக்கு வருகை தந்த போது மதீனாவாழ் மக்களுக்கு இரண்டு (திரு)நாட்கள் இருந்தன. அவ்விரண்டு நாட்களிலே மக்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”இவ்விரண்டு நாளை விடச்சிறந்த (இரண்டு) நாள்களை உங்களுக்கு இறைவன் ஏற்படுத்தியுள்ளான். அவை குர்பானி…
சுவனத்தின் இன்பங்கள்
சுவனத்தின் இன்பங்கள் சொர்க்கத்தின் உண்மைத் தன்மையை, அதில் நுழையாதவரை, மக்கள் அதைப் பற்றி எப்போதும் உணர்ந்த்து கொள்ள முடியாது. அல்லாஹ்தஆலா சொர்க்கத்தைப் பற்றி சொல்லும் போது, அது படைக்கப்பட்டதன் நோக்கம், அங்கே மக்கள் அனுபவிக்கக் கூடிய மட்டற்ற மகிழ்ச்சி எல்லாம் தற்போது வாழக் கூடிய வாழ்க்கையில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது என விவரிக்கிறான். மேலும், மனிதர்களுக்கு இறைவன் அளிக்கக்கூடிய சொர்க்கத்தைப் பற்றியும் அதன் அருட் கொடைகளைப் பற்றியும், அதன் அழகைப் பற்றியும் குர்ஆன் கூறிக் கொண்டு இருகிறது….
வணிகம் என்றொரு வணக்கம்!
வணிகம் என்றொரு வணக்கம்! மனிதர்கள் அனைவரும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொழில், வணிகம், உத்தியோகம் ஆகியவை பொருளீட்ட நாம் மேற்கொள்ளும் சில வழிமுறைகள். இம்மூன்றில் நாம் எதை தேர்ந்தெடுத்தாலும் அதிலிருந்து நமக்கு வருமானம் கிடைக்கிறது. சிலவற்றில் அதிகம் கிடைக்கும். சிலவற்றில் குறிப்பிட்ட தொகையே கிடைக்கும். சிலவற்றில் சில நேரங்களில் நட்டம் கூட ஏற்படலாம். வருமானம் பெற்றுத்தரும் வழிமுறைகள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் இவற்றுக்கிடையில் வேறு வித்தியாசங்கள் அதிகம் இல்லை. ஆனால்…
அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள்
சூனியம் செய்வது, ஜோசியம் பார்ப்பது, குறி கேட்பது சூனியம் செய்வது இறை நிராகரிப்பு (குஃப்ர்) ஆகும். இது அழிவை ஏற்படுத்தும் ஏழு பாவங்களில் ஒன்றாகும். இது மனிதர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காமல் இடையூறைத்தான் எற்படுத்தும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلا يَنْفَعُهُمْ 2.102 …. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்…. (அல்குர்அன் 2:102) மேலும் கூறுகிறான்: وَلا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ…
அருளப்பட்ட நிலையிலேயே இன்றளவும் உள்ள வேத நூல்!
அருளப்பட்ட நிலையிலேயே இன்றளவும் உள்ள வேத நூல்! திருமறைக்குர்ஆன் இன்றளவும் அது மனிதக் கரங்கள் ஊடுருவாமல் இறக்கி அருளப்பட்ட நிலையிலேயே இருப்பதும அது வாழும் அற்புதம் என்பதற்கு உண்மையான சான்றாகும். உலக பிரசித்திப்பெற்ற 100 தலைவர்களுடைய சாதனைகளை பட்டியலிட்ட மைக்கேல் ஹார்ட் அவர்கள் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முதன்மை படுத்தியதற்கு அவருடைய வாசகர்கள் எழுப்பிய ஆட்பேனைக்கு அளித்த பதிலில் அல்குர்ஆனும் – நபிகளாருடைய வாழ்வும் 14 நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்படும் பொக்கிஷமாக இருப்பதை ஒரு காரணமாகக்…