பணவேட்டையை முடித்துவைக்கும் புதைகுழி! நமது வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல மின்னி மறையக்கூடியது என்ற உண்மையை மறந்து கண்ணைமூடிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள். வியபாரமானாலும் சரி தொழிலானாலும் சரி. எப்படியாவது நிறைய சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டும், வங்கிக்கணக்கில் இருப்புத் தொகை அதிகரிக்க வேண்டும், நான்கைந்து தலைமுறைகளுக்கும் தேவையான சொத்துக்கள் தன்வசம் இருக்க வேண்டும் என்னும் குறிக்கோளோடு இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்களில் பலர்! பொருளாசை என்ற இந்த வெறி பலரிடமும் பல்வேறு வீரியத்தில்…
Category: இம்மை மறுமை
மறுமை வாழ்க்கை உண்டு என்பதை எப்படி நிரூபிப்பது?
டாக்டர் ஜாகிர் நாயக் 1. மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கை கண்மூடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. 2. மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியான நம்பிக்கையாகும். 3. ஒரு முஸ்லிம் சமுதாயத்தில் பலம் வாய்ந்த, செல்வாக்கு மிகுந்த குற்றவாளியை, அவன் செய்வது குற்றம் என்று எளிதாக நம்ப வைக்க முடியும். 4. எல்லா மனிதர்களும் நீதி நிலை நிறுத்தப்படுவதை விரும்புகிறவர்களே! 5. இறைவன், என்னை தண்டிக்கவில்லை. ஏன்? 6. யாரெல்லாம் அநியாயம்…
ஆவி அடங்கிவிட்டால்….
ஆவி அடங்கிவிட்டால்…. சுகம் தரும் சுவனமா? கொதிக்கும் நரகமா? ஆவி அடங்கிவிட்டால் எவ்வளவு பெரிய நபராயிருந்தாலும், அவனுடைய புகழோ, செல்வமோ, சந்ததிகளோ எந்த பயனும் அளிக்காது. அவனுடைய உடலை மூட கஃபன் துணி தயாராக இருக்கும். புதை குழியில் வைத்துவிட்டு அனைவரும் போய் விடுவார்கள். அங்கு மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்கு அவன் பதில் சொல்லியாக வேண்டும். இறைக்கட்டளைக்கு அடி பணிந்து உண்மை முஸ்லிமாக வாழ்ந்தவன் தக்க பதிலைக் கூறி புது மாப்பிள்ளை போல கியாம…
கப்ருடைய வேதனை என்பது ஒரு திரை மறைவு வாழ்க்கை
கப்ருடைய வேதனை என்பது ஒரு திரை மறைவு வாழ்க்கை கப்ரு வேதனை கடல் பயணத்தில் இறந்தவர்கள், உடலை எரித்துச் சாம்பலாக்கி பல பகுதிகளில் தூவி விடப்பட்டவர்கள், மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப் போனவர்கள், ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு? இவர்களுக்குக் கப்ரே கிடையாது எனும் போது கப்ரு வேதனை எவ்வாறு இருக்கும்? என்ற சந்தேகம் பரவலாக இருக்கின்றது. கப்ரு வேதனையைக் குறிப்பிடும் போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கூறுவது பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகின்றது. மண்ணுக்குள்ளே…
மனிதனின் ஆயுட்காலம், வாழ்வாதாரம், வாழ்க்கைச் சூழ்நிலை எப்படி அமைய வேண்டும் என அல்லாஹ்வால் தீர்மானிப்பட்டு விட்டது!
ஒரு உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். உறுதியாக நம்பவும் வேண்டும். அது அல்லாஹ் இந்த உலகை ஓர் நிர்ணயத்தின் அடிப்படையில் இயக்கிக் கொண்டிருக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: ”நிச்சயமாக! நாம் ஒவ்வொரு பொருட்களையும் ஒரு குறிப்பிட்ட நிர்ணயத்தின் படி இயங்குவதாகவே படைத்திருக்கின்றோம்.” உலகின் அத்துனை படைப்புகளும் அதனதன் நிர்ணயத்தின் மீது செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அது ஏற்கனவே முடிவும் செய்யப்பட்டு விட்டது. மனித வாழ்வும் அப்படித்தான். ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒருவர் வந்தார். வந்தவர், ”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்…
பர்ஸக் என்னும் திரை!
பர்ஸக் என்னும் திரை! “அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.” (அல்குர்ஆன் 23 : 99-100) இந்த வசனத்தின் மூலம் நாம் பெற வேண்டிய தெளிவுகளும், படிப்பினைகளும் ஏராளம் இருக்கின்றன. இந்த வசனத்தில், இறந்து…
இவர்களை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்!
இவர்களை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்! அல்லாஹ் மறுமை நாளில் இவர்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய நபர்கள் யாரென்றால்… கணவனுக்கு நன்றி செலுத்தாத மனைவியை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். (நூல்: பைஹகி 7 : 294) ============= 1 ) மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான்.2 ) பெற்றோர்களுக்கு மாறு செய்பவன்.3 ) மது அருந்துபவன்.4 ) கொடுத்ததை சொல்லிக்காட்டுபவன். (நூல்: ஹாகிம்…
“மண்ணறை வேதனை” பற்றிய சில ”நபிமொழிகள்”
‘மண்ணறை வேதனை’ பற்றிய சில ‘நபிமொழிகள்’ [ தலைப்பைப் பார்த்தவுடன் இதில் நுழைய அச்சப்பட்டு தாண்டிச்செல்லும் சகோதரர்களே, நாம் செல்லுமிடம் எப்படிப்பட்ட ஆபத்துகள் நிறைந்தது என்பதை தெரிந்து கொண்டால் தானே அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும்? எச்சரிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள், அதுதான் நாம் ஆபத்தை கடக்க சிறந்த நேர்வழி யாக இருக்க முடியும். இன் ஷா அல்லாஹ் ஆபத்தை கடக்க அல்லாஹ் உதவிபுறிவான்.] மனிதன் இறந்தபின் அவனை மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டு. பிறகு அவனுக்கு அங்கே…
இம்மையின் நன்மை
ربنا آتنا في الدنيا حَسنة وفي الآخرة حَسنة இம்மையின் நன்மை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இவ்வுலகில் அதிகம் கேட்ட இன்னும் நம்மை கேட்க சொன்ன ஒரு துஆ தான், رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!”…
ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை சிந்தனை!
ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை சிந்தனை! எனது பெயர் ஜனாஸா! நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர். என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன். எனது நிலைமை மோசமாவதைக் கண்ட சிலர் யாசீன் சூராவை ஓத ஆரம்பித்தனர். மூச்சு…