சென்னையில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்: சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள சறுக்கலையடுத்து, தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 354 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு பொறியியல் கல்லூரிகள் 8 சதவீதத்துக்கும் குறைவே. பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சராசரியாக 1.20 லட்சம் மாணவர்கள் பி.இ. பட்டத்துடன் வெளியேறுகின்றனர். இவர்களில் 75,000 முதல் 80,000 பேர் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளைச் சேர்ந்தவர்கள். இந்த 3…
Category: செய்திகள்
உலக மக்கள் தொகை – ஒரு பார்வை
1987ம் ஆண்டு ஜூலை 11ம் நாளன்று உலக மக்கள் தொகை 5 பில்லியன் அதாவது 500 கோடியை தொட்டது. அந்நாளான ஜூலை 11ம் நாளை உலக மக்கள் தொகை நாளாக அறிவித்து, உலக மக்கள் தொகையின் மாற்றம் மற்றும் போக்கை அறிந்துகொள்ளவும், அதன் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை ஆய்வு சேய்யவும் ஐ.நா மக்கள் தொகை நிதியம் முடிவெடுத்தது. தற்போது உலக மக்கள் தொகை சுமார் 650 கோடி. ஆண்டுதோறும் 1.14 விழுக்காடு இத்தொகை அதிகரித்து வருகிறது. 1804-ல்…
ஷூ வின் விலை 1 கோடி டாலர்
பாக்தாத்: இராக்கின் தொலைக்காட்சி நிருபர் முன்தஜர் அல் ஜைதி (வயது 29) அமெரிக்க வரலாற்றில் மகா மோசமான அதிபராக உலக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புஷ்ஷை செருப்பால் அடித்தாலும் அடித்தார் ஒரே நாளில் அவர் அரபுலக ஹீரோவாக ஆனதில் ஆச்சர்யமில்லை. ஆனால்; அதற்கு அவர் பயன்படுத்திய செருப்புமல்லவா வரலாறு படைக்க போகிறது! ஆம்! சவூதியிலுள்ள ஒருவர் அதை 1 கோடி அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூபாய் 48 கோடிக்கு) வாங்குவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன….
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக இந்தியாவும் சைனாவும்!
அமெரிக்காவின் உலக ஆதிக்கம் வீழ்கிறது அமெரிக்க உளவுத்துறை தகவல் வாஷிங்டன்: அமெரிக்காவின் உலக ஆதிக்கம் விழத்தொடங்கி விட்டது என்றும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக இந்தியாவும் சீனாவும் 2025-ம் ஆண்டு உருவாகும் என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து உள்ளது. 2-ம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்கா உலக அரங்கில் எழுச்சி பெறத் தொடங்கியது. அமெரிக்காவும், ரஷியாவும் இரு துருவங்களாக உலக நாடுகளில் செல்வாக்கு செலுத்த தொடங்கின. ரஷியாவில் கம்ïனிஸ்டு ஆட்சி கவிழ்ந்ததும், உலக அரங்கில் தனிப்பெரும் கதாநாயகனாக அமெரிக்கா…
100 வயதைக்கடந்த ஜப்பானியர்கள் 36,000 பேர்!
டோக்கியோ: ஜப்பானில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நூற்றாண்டைக் கடந்த ஜப்பானியர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 276-ஐ எட்டியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சத்தான உணவு வகைகள், தினசரி உணவில் அதிக காய்கனிகளை சேர்த்துக் கொள்வது உள்ளிட்ட காரணங்களால் ஜப்பானியர்களின் ஆயுள்காலம் அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக சரிந்துள்ளது. இளம் தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை மாற்ற விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள…
நீடூர் நெய்வாசல் புதிய ஜாமிஆ மஸ்ஜித் திறப்பு விழா
அல்லாஹ்வின் அருளால், நீடூர் நெய்வாசல் புதிய ஜாÁ¢ஆ மஸ்ஜித் திறப்புவிழா, ஊர் முதவல்லி அல்ஹாஜ் எஸ்.கலீல் ரஹ்மான் அவர்கள் தலைமையில், ஜமாஅத்தார்கள் முன்னிலையில், பெங்கéர் ஷபீலுர்ரஷாத் அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி முஃப்தி, ஷைகுல் ஹதீஸ், முஹம்மது அஷ்ரஃப் அலீ ஹஜ்ரத் அவர்களால் ஜூலை 25, 2008 அன்று திறந்து வைக்கப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)
கல்விச் செய்திகள்: இன்ஜினீயரிங் படிப்பு – ECE யில் 92 சதவீதம் பேர்
எலெக்ட்ரானிக்ஸ்- கம்யூனிகேஷனில் 92 சதவீதம் பேர் சென்னை, ஆக. 25: வழக்கம்போல், இந்த ஆண்டும் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்பில் அதிகமானோர் சேர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 18,624 இடங்களில் 17,527 பேர் சேர்ந்துவிட்டனர். இது 92.17 சதவீதம் ஆகும். படிப்பு வாரியாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை விவரம் (அடைப்புக் குறியில் சதவீதம்): எலெக்ட்ரானிக்ஸ்-கம்யூனி.லி 1,7166 (92.17) கம்ப்யூட்டர் சயன்ஸ்லி 1,5397 (87.85) ஐ.டிலி11097 (80.59) எலெக்ட்ரிகல்-எலெக்ட்ரானிக்ஸ்லி 9649 (79.25) இந்த ஆண்டு பி.இ. காலியிடங்கள் குறைகின்றன சென்னை,…
கல்வி உதவித்தொகை பெற!
மருத்துவக் கல்விக்கு இலவச கல்வி உதவித்தொகை அறிவிப்பு தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இயங்கிவரும் ராஜகிரி தாவூத் பாஷா கலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனர், முனைவர் எம்.ஏ. தாவூத் பாஷா வெளியட்டுள்ள அறிவிப்பு: ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, தகுதி அடிப்படையில் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி கிடைத்தும் பொருளாதார வசதியின்மை காரணமாக மருத்துவக் கல்லூரியில் சேர இயலாத அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் அறக்கட்டளையின் சார்பில் கல்வி உதவித்தொகை…