உலகின் முதல் மாதவிடாய் பிரச்சனை Rahmath Rajakumaran “நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) “ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர்களாவீர்கள்” என்று கூறினோம் ” (குர்ஆன் : 2:35) இப்லீஸ் அவர்களிடம் வந்தான்….
Category: குடும்பம்
சரித்திரத்தின் சிகரத்தில்: பெண்களும் புரட்சியும்!
சரித்திரத்தின் சிகரத்தில்: பெண்களும் புரட்சியும்! [ புரட்சி வரலாற்றில் “பிரான்ஸியப் புரட்சி” பெற்றிருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எகிப்தியப் புரட்சி விஞ்சிவிட்டது என்றால், அது மிகையில்லை. இங்கு பெண்கள், இந்த மாபெரும் அரசியல் புரட்சியின் போது வீடுகளுக்குள் முடங்கி இருக்கவில்லை. இளம் பெண்களாகட்டும், தாய்மார்களாகட்டும் அவர்களில் யாருமே பின்தங்கி விடவில்லை. தாய்மார்கள் தத்தமது குழந்தைகளோடும் குடும்பத்தோடும் தஹ்ரீர் சதுக்கத்துக்குப் போனார்கள். ஒட்டுமொத்த மக்களின் நன்மைக்காய் அர்ப்பணிப்போடு செயற்பட்டார்கள். மிகமிக நேர்த்தியாய்…
பெண்ணுரிமையும் ஆணாதிக்க எதிர்ப்பும்!
பெண்ணுரிமையும் ஆணாதிக்க எதிர்ப்பும்! [ ஒரு கணவனிடம் சந்தோஷம் இல்லையெனில் அவனிடமிருந்து விலகி, வேறொரு கணவனைத் திருமணம் முடித்துக் கொண்டு செல்வதுதான் சரியான வழிமுறை. தற்போது வாழ்கிற கணவனின் மூலம் சந்தோஷம் கிடைக்கவில்லையெனில் அந்த அநியாயத்தை சகித்துக் கொண்டு வாழவேண்டும் என்றெல்லாம் இஸ்லாம் சொல்லவில்லை. அதற்கு மாற்று வழி முதலாவது திருமணத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு கணவனை மணப்பதுதான் அந்தப் பெண்ணுக்கான சரியான உரிமை. இஸ்லாமல்லாத மதங்களில் பெண்களுக்கு இந்த உரிமை வழங்கப்படாததால் அந்த உரிமையைக் கேட்டுப்…
பெண்மணிகள் பேதையரல்லர்
பெண்மணிகள் பேதையரல்லர் ஜுனைரா இஸ்லாத்தின் பண்டைச் சரிதையைப் புரட்டிப் பார்க்கின், அக்காலப் பெண்களின் அரிய செயல்களை அதிகம் நாம் காணலாம். அவர்கள் போர்க்களம் புக்குப் பெரிய பெரிய அரிய காரியங்களையெல்லாம் சாதித்துப் புகழ் மாலை பெற்று விளங்கினார்கள். அப்பெண்மணிகள் தங்கள் கணவர்களுடனே சரிசமமாய் நின்று வில்லேந்திச் சண்டை செய்வார்கள்; நபிபெருமானின் அத்தையான – ஜுபைரின் மாதா – ஸபிய்யா அம்மாள் அகழ் யுத்தத்தின் போழ்து ஒரு கூடார முளையைக்…
(அரசியல்வாதி!!!) ரஜினியுடன் ஜமாஅத்துல் உலமா ஆலிம்களின் சந்திப்பு – அரசியல் அப்பாவிகள்!
(அரசியல்வாதி!!!) ரஜினியுடன் ஜமாஅத்துல் உலமா ஆலிம்களின் சந்திப்பு – அரசியல் அப்பாவிகள்! வெளுத்ததெல்லாம் பாலென்று நினைக்கும் ஜமாஅத் உலமா சபையின் “ஹிக்மத்” இல்லாத அணுகுமுறை! கூழாங்கல்லை வைரமென்று நினைத்து ஏமாறும், மதிப்புமிக்க ஆலிம்களின் நிலை இந்தளவு கீழிறங்கியிருக்க வேண்டாம். ஆலிம்கள் அரசியலில் இன்னும் அப்பாவிகளாகவே இருப்பது வேதனையான விஷயமே! ரஜினி அரசியல்வாதி அல்ல, நடிகர் மட்டுமே! அரசியல்வாதியாக (வாழ்க்கையில்) நடிக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டவர், அவ்வளவே! ரஜினி, அரசியலில் மாட்டிக்கொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிப்பது போன்ற நிலை…
அவர்கள் தங்கள் நெஞ்சில் சுமந்திருப்பது ‘இஸ்லாம்’
அவர்கள் தங்கள் நெஞ்சில் சுமந்திருப்பது ‘இஸ்லாம்’ இஸ்லாமியப் பெண்கள் டெல்லி ஷாஹின் பாகில் காவல் துறையின் உத்தரவை புறம் தள்ளிவிட்டு தொடர் போராட்டத்திலிருந்து சற்றும் பின்வாங்காமல் சொற்போர் புரிந்து கொண்டிருக்கும்போது அவர்கள் கோரசாக எழுப்பிய கோஷத்தைக்கண்டு காவல் அதிகாரிகள் திகைத்து நிற்கும் கணொளி காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. அப்படி என்ன முழக்கத்தை ஓங்கி ஒலித்தார்கள் என்று கேட்கிறீர்களா…? “அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர்…” விண்ணைமுட்டும் இப்பேரொலிக்கு எந்த எதிராளியும் பயப்படுவதில் ஆச்சரியமில்லைதான். இஸ்லாமிய பெண்கள் மற்ற பெண்களோடு…
டீன்ஏஜ் பெண்களுக்கு விழிப்புணர்வு! தாயின் கடமை!
டீன்ஏஜ் பெண்களுக்கு விழிப்புணர்வு! தாயின் கடமை! Dr. ஷ ர் மி ளா [ o பெண் குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள். o இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன…
கவனம் இல்லாத தொழுகை; கவனம் இல்லாத பாலுறவு – இரண்டிலும் எந்தப் பயனும் இல்லை!
கவனம் இல்லாத தொழுகை; கவனம் இல்லாத பாலுறவு – இரண்டிலும் எந்தப் பயனும் இல்லை! நீடூர் S.A.மன்சூர் அலீ திருமறையின் 23 வது அத்தியாயத்தின் முதல் 11 வசனங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கீழே தந்துள்ளோம் உங்கள் சிந்தனைக்கு. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள். ஸகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள். மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத்…
திருமண பயமா? திருமணம் என்பது சிக்கலா?
திருமண பயமா? திருமணம் என்பது சிக்கலா? கேள்வி : என் மனதில் திருமணம் என்பது ஒருவித மீளமுடியாத பொறுப்பில் சிக்கிக்கொள்வது என்று தோன்றுகிறது. நாம் செய்தே ஆக வேண்டிய கடமைகளும், எதிர்பார்ப்பும் இந்த உறவில் இருக்கிறது. இப்படி எதிர்பார்ப்பு இல்லாத உறவு அமைய முடியாதா? பதில்: எங்கே உறவு இருந்தாலும், அங்கே ஒரு எதிர்பார்ப்பு இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஏதோ ஒரு தேவை இருப்பதால் தானே எந்த உறவும் அமைகிறது? எந்தத் தேவையும் இல்லாத நிலை இருந்தால், அடுத்தவரை…
மனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல்
மனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல் (அல்குர்ஆன் விளக்கம்) மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ‘தமது மனைவியருடன் உறவு கொள்வதில்லை என சத்தியம் செய்வோருக்கு நான்கு மாதங்கள் அவகாசமுண்டு. (அதற்குள்) அவர்கள் திரும்பிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன்.’ ‘அவர்கள் விவாகரத்து செய்வதையே தீர்மானமாகக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்ளூ நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 2:226-227) மனைவி மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லது மனைவியைத் திருத்துவதற்காக உன்னைத் தீண்ட மாட்டேன் என…