இரத்த உறவை துண்டித்தவரா நீங்கள்? எச்சரிக்கை! சய்யிது ஷம்சுத்தீன் சாதிக்.ஃபாழில் மன்பஈ இன்று இறை பக்தி கொண்ட நல்லடியார்களை காண்பது இரு கொம்புள்ள குதிரையைக் காண்பதைப் போன்றுள்ளது.நல்லடியார் என்ற பெயரை நாளடைவில் கொள்ளைக்காரனுக்கும் சூட்ட நம் சமுதாயம் துணிந்து விடும் என்பதைப் போன்றுள்ளது. ஏனெனில் இறை நம்பிக்கை நீரைப் போல வற்றிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது. இழந்த நீரை மீண்டும் பெற மேற்கொள்ளப்படும் முயற்சி கூட, இழந்த இறை நம்பிக்கையை திரும்பப் பெற நம்மில் பலர்…
Category: பெற்றோர்-உறவினர்
பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்
பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள் அ. முஹம்மது கான் பாகவி முன்பெல்லாம் பெற்றோர்கள் ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்துவந்தார்கள். பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்த அதேநேரத்தில், கண்டிப்பும் அவர்களது வளர்ப்பில் இருந்தது. பல பிள்ளைகளிடையே பாசம் பகிர்ந்துபோனதாலோ என்னவோ, அளவுக்கதிகமாகச் செல்லம் காட்டியதில்லை. இதனால், பொறுப்புள்ளவர்களாக அவர்களின் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால், இன்று -நாடு பொருளாதார வளர்ச்சி கண்டுவிட்டதாகச் சொல்லப்படும் இந்நாளில்- நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலோர் இரண்டு…
அந்த உன்னதமான தாய்….?
அந்த உன்னதமான தாய்….? கருவில் சுமந்தவள். கண் விழித்தவள். பெற்றெடுப்பவள். பேணி வளர்ப்பவள். உதிரப் பாலூட்டி உருவாக்கும் தாயவளுக்கு தனயன்கள் மீது தெவிட்டாத பற்றுண்டு. மூன்று குணநலப்பண்புகளையுடைய தாயினர் இருக்கின்றனர். தீன் கல்வி முழுமையுடனோ, முழுமையற்றோ இருப்பினும் வருத்தம் ஒன்றுமில்லை தாயினத்திற்கு. அவர்கள் மனம் பிரதானப் படுத்துவது உலகக் கல்வி. பிள்ளைகளுக்கு எவ்வகையிலேனும் அதனைப் பெற்றுத்தர வெறித்தனமுடன் பள்ளிகளை நோக்கி பயணிக்கின்றனர். திருக்குர்ஆன் விரிவுரைக்குத் திறக்காத இமைகள். ஏற்காத செவிகள் எல்.கே.ஜி விண்ணப்பம் பெற முதல் நாள்…
தாய் தந்தையரின் முக்கியத்துவம்
தாய் தந்தையரின் முக்கியத்துவம் [ இன்று பெரும்பான்மையான இளைஞர்களின் பெற்றோருடைய தொடர்பு மிக ஒரு மோசமான நிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகிறார்கள். காரணம், மார்க்க விஷயங்களில் அவர்கள் அக்கறை காட்டாததினாலே இந்நிலை அமைகிறது. இறைக் கட்டளைகளை அறிந்து, அதன்படி நடக்க வேண்டும், மேலும் அதில் தான் வெற்றியிருக்கிறது என்று நினைத்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து இருந்தால், இந்நிலைகளை அடைய வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதைத் தவிர்த்துத் தங்களின் மனோ இச்சைகளின்படி இறைவனுடையக் கட்டளைகளை…
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி….?
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி….? உன் வம்சம் நீட்டிக்க உனக்கு மகன் பிறந்திருக்கிறான். சொல்கேட்டு பிரசவத்திருக்கும் மகனையும் மனைவியையும் காண ஓடோடி வருகிறான். கட்டிலில் துயில் கொண்டிருக்கும் மகனைக் காண்கிறான். பால் போதாமல் வீறிட்டழுது உறங்குகிறான். உரைக்கிறாள் மனைவி. நடு இரவு. மகன் அழும் சத்தம் கேட்டு எழுகிறான். மனைவி கைகளில் வைத்து அழுகையை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். ”ஏங்க! பால் ஜீரணமாகலை மருந்து கடை திறந்திருந்தால் கிரேப் வாட்டர் வாங்கி வாங்க.” 24 மணி நேரம்…
பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்!
பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள் ஃபாத்திமா நளீரா [ வயது போய் முதுமையை அணைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள், குழந்தைப் பருவத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதனை குழந்தைகளாக இருந்து பெரியவர்களான இந்தப் பிள்ளைகளுக்கு ஏன் புரியாமல் போகிறது? தன்னை அள்ளியணைத்துக் கொஞ்சி மகிழந்த நினைவுகள் ஏன் அகன்று விடுகின்றன? சமுதாயத்தில் தலை தெரிய ஆரம்பித்தவுடன் அல்லது தனக்கென்று ஒரு குடும்பம் உருவானவுடன் பாசமெல்லாம்…
மிரளும் அம்மாக்கள்!
மிரளும் அம்மாக்கள்! காலை நான்கு மணிக்கு சென்னை, சென்ட்ரலில் அந்த ரயில் வந்து நிற்கிறது. பயணிகள் அனைவரும் இறங்கிக் கலைந்த பின்பும், அங்கேயே நிற்கிறார்கள் இரண்டு பதின்பருவச் சிறுவர்கள். கையில் பையும் இல்லை; காசும் இல்லை. கண்களில் களேபரம். எங்கே போவது? எப்படிப் போவது? சென்னை, எக்மோரில் தென் தமிழகத்திலிருந்து வரும் அந்த ரயில் வந்து நிற்கிறது. ஏதோ சாதித்துவிட்ட ஆசையில் ஒரு சிறு பெண் இறங்குகிறாள். ஆனால், தான் ஆசையுடன் பார்க்க வந்த சினிமா…
பெற்றோர்களே! இணையத்தில் மேயும் உங்கள் பிள்ளைகள் மேல் கண் வையுங்கள்!
பெற்றோர்களே! இணையத்தில் மேயும் உங்கள் பிள்ளைகள் மேல் கண் வையுங்கள்! உண்மையில் உலக நாடுகளோடு ஒப்பிடும் போது இணையத்தில் அதிகளவாக வெளிவரும் REALITY SEX SCANDAL வீடியோக்களில் இந்திய- இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் முதன்மை பெறுகின்றார்கள். இந்திய இலங்கைப் பகுதிகளில் தான் பூங்காக்களிலும், பஸ்களிலும், ஏனைய விடுதிகளிலும் இடம் பெறும் உறவுகளைத் திருட்டுத் தனமாகப் படம் பிடித்து இணையத்தில் ஏற்றிக் காசு பார்க்கும் வேலை முனைப்புடன் இடம் பெற்று வருகின்றது. நாம் எங்கே போகின்றோம்? ஆசிய…
”அறிவின் திறவுகோல்” அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்…!
”அறிவின் திறவுகோல்” அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்! குழந்தைகள் பிறந்த அடுத்த நொடியிலிருந்து நல்ல தந்தைகள் அவர்களுக்கான வாழ்க்கையை விட்டுவிட்டு குழந்தைகளுக்கு என்று வாழ தொடங்கிறார்கள். அவர்களுக்கான பிடித்தது பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு குழந்தைகளுக்கு பிடித்தது, பிடிக்காதது எல்லாம் அவர்களுக்கும் பிடித்தது. பிடிக்காததாக ஆக்கி கொள்வாரகள். தந்தையர்கள் எப்போதும் பாசத்தை வெளியே காண்பிக்காமல் கண்டிப்பு என்னும் வேஷம் போடுவதில் வல்லவர்கள். இளம் வயதுபிள்ளைகளுக்கு அப்பாவின் இந்த கண்டிப்பு கசந்தாலும் நன்கு வளர்ந்தபின் தான் அப்பாவின் கண்டிப்பால்…
குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம்
குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம் இன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உண்மை தான் என்றாலும் ஒரு சில குடும்பங்கள் இதுப் போன்ற எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் தனித்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் ஆச்சரியம் தான்! அவ்வாறு அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது என்று பார்த்தால் அவர்கள் தங்கள் குடும்பங்களில் எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் எந்த…