“மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை நான் ஹராம் ஹலால்களை பேணி நடப்பேன்” நான் சிறுவனாக இருக்கும் போது என் தாய் என்னை அருகில் அழைத்து, உதடுகள் ஒட்டாமல் ‘ஹலால்’ என்று சொல் பார்ப்போம் என்றார்கள். நான் ‘ஹலால்’ என்று சொன்ன போது என் உதடுகள் ஒட்டவில்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் அம்மா என் உதடுகள் ஒட்டவில்லை என்று சொன்ன போது, என்னை கட்டியணைத்து முத்தமிட்டார்கள். மகனே! இப்பொழுது உதடுகள் ஒட்டாமல் ‘ஹராம்’ என்று சொல் பார்ப்போம் என்றார்கள். நான்…
Category: பெற்றோர்-உறவினர்
வலுவான குடும்பம் பலமான சமூகம்
வலுவான குடும்பம் பலமான சமூகம் CMN SALEEM மனிதன் கூடிவாழப் பிறந்தவன். குடும்ப மாகவும் தொடர்ந்து சமூகமாகவும் சேர்ந்து வாழ்கின்ற தேவையும் அவசியமும் உடையவன். தனிமனிதனாக இங்கு யாரும் பிறப்பதில்லை. தாய் தந்தைக்குப் பிள்ளையாக, தாத்தா பாட்டிக்குப் பேரப் பிள்ளையாக, சகோதரன் சகோதரிக்கு உடன் பிறந்தாராக, தாய்மாமன் அத்தைக்கு மருமகன் அல்லது மருமகளாக என்று ஒரு குடும்ப அமைப்பின் அங்கமாகத்தான் அனைவரும் இங்கு பிறக்கின்றனர். தனிமனிதனாக இருந்து கொண்டு இங்கு…
முதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும்
முதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும் மௌலவி M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலஃபி எம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எமது பெற்றோர் வயதுக்குச் செல்லும்போது அல்லது முதுமையை அடையும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவர்களது நிலமைகளையும் நாம் அறிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம். குழந்தையாக, சிறுவர்களாக வாலிபர்களாக நாம் இருக்கும்போது நமது பிரச்சினைகளையும் நிலவரங்களையும் நன்கு கவனித்து, நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் எமது பெற்றோர்கள். ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வகையான பிரச்சினையை…
கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை ஊக்குவிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை!
கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை ஊக்குவிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை! فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ٌ ”….அவர்களிடமிருந்து கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை கற்றுக் கொண்டார்கள்”. (அல்குர்ஆன் 2:102) குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம். ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை. ஒரு ஆணைப் பற்றியோ…
பள்ளி மாணவியின் அராஜகத்திற்குக் காரணம்..
பள்ளி மாணவியின் அராஜகத்திற்குக் காரணம்.. சமீபத்தில், என் உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கே, 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவள், தன் தாயை, ‘நான் எத்தனை முறை உன்னை கூப்பிடுறது… மரம் மாதிரி நிக்கறயே… செவுடு செவுடு… சீக்கிரம் என் தலைய பின்னி விடேன்…’ என்று கத்தினாள். அவளது தாயோ, உறவினர் முன்னிலையில் மகள் கத்தியதைக் கேட்டு, கண்கள் கலங்க, அமைதியாக இருந்தாள். அந்த தாயின் நெருங்கிய உறவினரிடம், ‘இந்த சின்ன பொண்ணு அவங்க அம்மாவ…
பெற்றோரைப் பேணாதோருக்கு நாசமே!
பெற்றோரைப் பேணாதோருக்கு நாசமே! முதியோர் இல்லம் தவிர்! நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி இது உண்மை! உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் கீழ்கண்டவாறு எச்சரிக்கிறான். இதைப் புறக்கணித்தால் உங்களுக்கு இவ்வுலகிலும் அதற்கான தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு. மறுமையிலும் நரக நெருப்பின் வேதனை உண்டு. o பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட…
‘அப்பாக்களின் வாழ்வில் நெகிழ்ச்சியான தருணங்கள்’
‘அப்பாக்களின் வாழ்வில் நெகிழ்ச்சியான தருணங்கள்’ வாழ்வில், ஆணானாலும் பெண்ணானாலும் பல பரிணாமங்களைக் கடக்கின்றனர். ஒரு பெண் மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக, தோழியாக எனப் பலவற்றைக் கூறலாம். ஆனால், நாம் யாரும் அநேகமாக பெண்ணுக்கு நிகரான ஆணின் பங்கைப் பற்றி பேசுவதில்லை. அதுவும் முக்கியமாக ஓர் ஆண் ‘அப்பா’வாக மாறுவதைப் பற்றி யாரும் உரையாடுவது இல்லை. தாய்மை பற்றியும், குழந்தைப் பேறு பற்றியும் கவிதைகள் எழுதி எழுதி, அப்பாவைப் பற்றி சற்று யோசிக்க மறந்து விட்டோம். எந்த…
அப்பாக்கள் என்றும் ஹீரோக்கள்தான்!
அப்பாக்கள் என்றும் ஹீரோக்கள்தான்! ந. ஆசிஃபா ஃபாத்திமா பாவா அப்பா! நினைத்ததும் நம் மனக் கண்ணில் தெரிவது ஒரு ஹீரோவின் பிம்பம்தான். நாம் பார்த்து, பார்த்து வியந்த ஒரு ஆளுமைதான் அப்பா. குழந்தைப் பருவத்தில் “My Daddy is the best!” எனக் கூவிக் கொண்டு அலைந்த நாட்கள் பற்பல. அப்பாவின் முதுகில் ஏறி சவாரி செய்த அன்று நமக்குத் தெரியாது, வாழ்வின் பளு. காலங்கள் உருண்டோட, சிலபல கண்டிப்புகளால் நமக்கும்…
அம்மாவும் அம்மாவைப் போன்ற பெண்களும்
அம்மாவும் அம்மாவைப் போன்ற பெண்களும் பிருந்தா ஜெயராமன் எனக்கு 27 வயது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண். பெற்றோர் இருவரும் வேலை பார்க்கிறார்கள். எனக்குத் தம்பிகள் இருவர். எனது பிரச்சினை என் அம்மாதான். எனது ஏழு வயதிலிருந்தே என் அம்மா என்னிடம் மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறார். அவருக்கு நான் உதவவில்லை என்றும், அவர் இழிவாகக் கருதும் உறவினர்களுடன் பழகுகிறேன் என்று கூறியும் என்னை அடிக்கிறார். தந்தையுடன் சண்டை என்றாலும் எனக்கு அடிதான்…
மரம்போல் இருங்கள்..!
மரம்போல் இருங்கள்..! மனிதன் கேட்டு மரம் நிழல் தரவில்லை கணவன் பொருளீட்டாது ஊர் சுற்றி வர குடும்பப் பாரத்தை தான் தாங்க பணிக்குச் செல்லும் மனைவியர்! கணவனுடைய வருமானம் போதாமையால், வீட்டையே தொழில் கூடமாக மாற்றும் பெண்கள்! உடன் பிறந்தவனின் தினப்படி குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்யாததால் பணிக்குக் கிளம்பும் திருமணம் ஆகாத உடன் பிறந்த சகோதரிகள். பெற்ற மகன் சோறு தராததால், தமது தேவைகளுக்குரிய செலவுகளுக்கு வழியில்லாமையால் வாட்ச்மேன் வேலைகள், விடுகளில் பாத்திரம் கழுவி, துணி…