பெண்ணிய கண்ணியம் பேணுவோம் SNR ஷவ்கத்அலி மஸ்லஹி இன்றைக்கு பெண் குழந்தைகள் பாதிக்கப்படுதல் அல்லது நசுக்கப்படுதல் என்பது சர்வசாதாரணமான ஒன்றாகிப் போய்விட்டது. அப்படி அவர்கள் செய்து விட்ட பாவம் தான் என்ன? கிராமங்களில் கள்ளிப்பால் புகட்டப்பட்டும், பெருநகரங்களில் அவர்கள் தாய் வயிற்றுக்குள் சின்னஞ்சிறு சிசுவாக இருக்கும்போதே நன்கு “ஸ்கேனிங்” செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்படுவதும் ஏன்? பண்டைய சவூதிய அரபுச் சமூகத்தில் பெண் குழந்தைகள் பாலைவன மணலில் குழி தோண்டிப்…
Category: பெண்கள்
பெண்களும் நறுமணம் பூசிக்கொள்வதும்
பெண்களும் நறுமணம் பூசிக்கொள்வதும் P. ஜெய்னுல் ஆபிதீன் நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன. தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு. ஆட்களை தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு. முதல் வகையான நறுமணம் அருகில் நெருங்கி வருவோருக்கும் மட்டுமே உணர முடியும். இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும். பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது…
பெண்ணின் வலிமை!
பெண்ணின் வலிமை! [ வலி ஏற்பதில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆனால் ஒரு வித்தியாசம். பெண் மன வலியைப் பொறுப்பாள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருப்பாள். ஆண் உடல் வலியைப் பொறுப்பான். பெண் அதைப் பார்த்து பதறிப்போவாள். ஒரு பெண் ஆணுக்கு நிகராக மட்டுமல்ல அவனைவிடவும் அறிவு பெற்றிருப்பது சிறப்பு. ஆண் ஆலோசனை கேட்பதில் மிகவும் விருப்பம் உள்ளவன். அது அவன் மனைவியிடமிருந்து கிடைத்தால் அதைவிட பாக்கியம் வேறில்லை. குழந்தைகள் 24 மணி நேரமும் தாயைத்…
ஆண்-பெண் சம உரிமை ஒரு மாயத்தோற்றமே
ஆண்-பெண் சம உரிமை ஒரு மாயத்தோற்றமே யாசிர் B.E., இவ்வுலகில் ஆண் பெண் என பிறப்பு வேறுபாடு இயற்கையாக நிகழும் நிகழ்வு. ஒரு ஆண் வேலைக்கு செல்லும்போது தான் பல்வேறு பிரச்சனைகளையும், இன்னல்களையும் சந்திக்கிறான். ஆனால் பெண் என்பவள் பிறப்பதற்கு முன்பிருந்தே பல பிரச்சனைகளையும், இன்னல்களையும் சந்திக்கிறாள். ஆண், பெண் இருவருமே மனிதர்கள் தான். ஆனால் ஒரு பெண்ணிற்கு மட்டும் ஏன் இத்தனை இடற்பாடுகள்? ஒரு பெண் தனக்கு ஆணுக்கு…
பெண்களின் பெயருக்கு முன்பாக “ஜனாபா” என்று குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும்!
பெண்களின் பெயருக்கு முன்பாக “ஜனாபா” என்று குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும்! கேள்வி: நம்மவர்கள் திருமண அழைப்பிதழ்களிலும், கடிதங்கள் எழுதும்போதும் ‘ஜனாப் – ஜனாபா’ என்று பெயருக்கு முன்னால் எழுதுகின்றனரே! இது சரியா? இதன் அர்த்தம் என்ன? பதில்: ஜனாப் என்பது ஃபாரசீகச் சொல். அது அரபு மொழியிலும் பயன்படுத்தப்படுள்ளது. ஜனாப் என்ற சொல்லுக்கு சமூகம் என்று பொருள். இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இறைவனின் சமூகம் என்பதற்கு ‘இலா ஜனாபிஹி’ என்ற பதத்தைப்…
நோக்கங்களும் இலக்குகளும்
நோக்கங்களும் இலக்குகளும் அல்லாஹுத் தஆலா பெண்ணை ஆணுக்காகப் படைக்கவில்லை. மனிதனை எந்த நோக்கத்திற்காகப் படைத்தானோ அதே நோக்கத்திற்காகத் தான் பெண்ணையும் படைத்தான். அல்லாஹுத் தஆலா மனிதனது அடிப்படையான பணியைப் பற்றி பேசும் போது இரு சாராரும் பரஸ்பர ஒத்துழைப்புடன் நிறைவேற்ற வேண்டிய பணியாகவே அப்பணியை எடுத்து காட்டினான். விசுவாசம் கொண்ட ஆண்களும் விசுவாசம் கொண்ட பெண்களும் ஒருவருக்கொருவர் நேசமாக நடந்து கொள்வார்கள், நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியையும் செய்வார்கள்.
முகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே
முகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே அதிகமான முஸ்லிம்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வசனங்களில் இவ்வசனமும் (33:53) ஒன்றாகும். இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு பெண்கள் முகத்தை மறைப்பது அவசியம் என அவர்கள் வாதிடுகின்றனர். இது குறித்து விபரமாக அறிந்து கொள்வோம். பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்பதை 472வது குறிப்பில் நாம் விளக்கியுள்ளோம். அதற்கான ஆதாரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளோம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்காமல் இருந்துள்ளனர் என்பதற்கு நாம்…
“இத்தா”வின் வகைகள்
“இத்தா”வின் வகைகள் இத்தா நான்கு வகைகளாக உள்ளது : 1. கற்பிணியின் ‘இத்தா’ இது குழந்தை பிரசவத்துடன் முடிவடைகிறது. உயிரோடு இருக்கும்போது வாழ்க்கை யில் பிரிவு ஏற்பட்டாலோ, கணவன் இறந்த பெண்ணாக இருந்தாலோ இந்த இத்தா நிகழ்கிறது. ”கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தாவின் தவணை அவர்கள் பிரசவமாகும் வரையிலாகும்.” (அல்குர்ஆன் 65:4) 2. மாதவிடாய்வந்து கொண்டிருக்கும் பெண் தலாக் சொல்லப்பட்டால் அவளுடைய ‘இத்தா’ மூன்று மாதவிடாய்களாகும். ”தலாக்’ கூறப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும் வரை…
ஹிஜாபின் நோக்கங்கள் முழுமையாக உணரப்பட வேண்டும்
ஹிஜாபின் நோக்கங்கள் முழுமையாக உணரப்பட வேண்டும் அலங்காரங்கள் நிறைந்த பர்தாவை அணிவதற்குப் பதிலாக, எளிமையான (முழு உடலையும் மறைக்கும்) மற்ற உடைகள் பலமடங்கு சிறந்தவை. எல்லாம் அப்பட்டமாக வெளியே தெரியும் வண்ணம் நம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வீதிகளில் பவனி வருவதென்பது மறுக்க முடியாத உண்மை. பல்வேறு டிசைன்களில் பர்தாக்களை வாங்கி, அதனை உடலுக்குத் தக்கவாறு பிடித்துத் தைத்துக்கொள்வது, அணியும் ஹிஜாபின் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறது. இது ஒருபுறம் இருக்க, பெண்களின் ஹிஜாப் பற்றியே மேடைகளிலும் பிரச்சாரங்களிலும்…
மங்கையர்களே! உங்களைதான்!
மங்கையர்களே! உங்களைதான்! [ (மேலும்,) உங்கள் ஆடைகள் கண்ணியமானதாக இருக்கட்டும். ரொம்ப ‘டைட்டா’கவும் இல்லாமல் அதிக ‘லூசா’கவும் இல்லாமல், கண்களை உறுத்தாமல் கச்சிதமாக இருக்கட்டும்…. உடலை முழுக்க மூடும் ‘புர்கா’ அல்லது ‘அப்பாயா’ போடுவது உடை விஷயத்தை எளிதாக்கிவிடும். அப்படியில்லையென்றால், முழுக்கை ‘சல்வார்’ அல்லது முழுக்கை ‘குர்தா’ போன்றவை அணிந்து தலையை மூடும் scarf போட்டுக் கொள்ளலாம்….. அதிக அலங்காரத்தையோ வாசணை திரவியங்களையோ முடிந்தளவு தவிர்க்கப் பாருங்கள்…. யாரேனும் தங்களிடம் நட்பின் பேரில் உரிமை எடுத்துக் கொள்ள…