ஒரு பிள்ளை போதுமா? மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் சீனா ஓர் மோசமான முன்னுதாரணம்! சீனஅரசின் ஒரு குழந்தைக் கொள்கை சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும் என்று தோன்றுகிறது. முன்னதாக 13-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போதைய சீனப் பொருளாதாரத் தேக்கம் அதற்கு முன்னதாகவே, அந்த அறிவிப்பு வெளியாவதற்கான சாத்தியங்களைக் கட்டியம் கூறுகிறது. பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவருவது எனும் தாமஸ் ராபர்ட் மால்துஸின் மக்கள்தொகைக் கொள்கை பெரும்பாலான நாடுகளால்…
Category: குழந்தைகள்
தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை!
தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை! ரெஹானா சுல்தானா சொத்துக்கள் உறவினர்களுக்குச் சென்று விடாதிருக்க முஸ்லிம்கள் தங்களுக்கு பெற்ற பிள்ளையில்லாத நிலையில் தத்தெடுத்து வளர்க்கின்றனர். குழந்தை இல்லாதவர்களின் சொத்து அவர்களுடைய இரத்த உறவுகளில் எவர் எவருக்கு எவ்வளவு பங்கு என்று இறையால் நிர்ணயிக்கப் பெற்றிருக்க இறை நியதிக்கு மாறாக ஏமாற்றுத்தனம் புரிதல் சமூகத்தில் இருக்கிறது. இதற்கு தத்து என்ற சொல் உதவுகிறது. “சுவீகாரம், தத்தெடுத்தல்’’ குறித்து குர்ஆன் அத் 3, வசனங்கள் 4,5 கூறுவதைக்…
அமெரிக்காவில் எனது பேத்தி வளரும் முறை!
அமெரிக்காவில் எனது பேத்தி வளரும் முறை! [ இதே அடிப்படையில் எல்லா தாய்மார்களும், தன் குழந்தைகளை வளர்த்தால் அந்தக் குழந்தைகள் ஒழுக்கமான, இறையச்சம் உள்ளவர்களாக வளர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி. ] நான் சமீபத்தில் எனது குடும்பத்தாரை பார்ப்பதற்கு அமெரிக்கா சென்று இரண்டு மாதங்கள் ரெட்மென்ட் (REDMAND) நகரில் தங்கி வந்தேன். அங்கே உழைப்பிற்கு சென்ற முஸ்லிம்கள் அனைவரும் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதுமட்டுமின்றி இறையச்சத்தோடு முறையாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த நாட்டில் எனக்கு நான்கு…
இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு
இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு o குழந்தை பாக்கியத்தை கேட்க வேண்டும். o பெண்குழந்தைகளை வெறுக்கக்கூடாது. o குழந்தைகளை கொல்வது மாபெரும் குற்றம். o குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா? o குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா? o தஹ்னீக். o பெயர் சூட்டுதல். o அகீகா. o முடியின் எடைக்கு நிகரான வெள்ளியை கொடுக்க வேண்டுமா? o பால்புகட்டுதல். o கத்னா செய்தல். o பிள்ளைகளைக் கொஞ்ச வேண்டும். o குழந்தை பாசம் பெற்றோர்களை வழிகெடுத்துவிடக் கூடாது.
குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்
குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள் மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுப்பது என்பது இந்த நவீன யுகத்தில் பாரிய பொறுப்பு வாய்ந்த பணியாகவே திகழ்கின்றது. குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தும் வெளி சக்திகளின் ஊடுருவலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் ரொம்ப சிரமமான பணியாகவே திகழ்கின்றது. இந்த ஆக்கத்தில் குழந்தைகளை நெறிப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்படுகின்றது. இஸ்லாத்தின் அடிப்படையான ‘லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற கலிமாவை உங்கள்…
பச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை
பச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை. அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது. இப்படிப்பட்ட ‘வளர்ந்த பிள்ளைகள்’ எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை…
குழந்தைகளை கொல்ல சொட்டு மருந்து, தடுப்பூசி!
குழந்தைகளை கொல்ல சொட்டு மருந்து, தடுப்பூசி! பிறந்த குழந்தைக்கு பெரிய அட்டவணை வைத்து கொண்டு ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடையே சொட்டுமருந்துகள் வேறு! இதுவெல்லாம் உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க என்று நம்பியே நாம் செய்கிறோம். இருந்தும் ஏன் மாதம் மாதம் ஜுரம், வைரஸ் ஜுரம், வாந்தி, பேதி, மலேரியா என்று மருத்துவ மனைக்கு நடையா நடக்கிறோமே ஏன்? நாம் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று நம்பி போட்ட தடுப்பூசி, சொட்டு மருந்து ஆகியவற்றின்…
குழந்தைகளைப் பாதுகாப்போம், அடுத்துக் கெடுப்பவர்களிடமிருந்து!
குழந்தைகளைப் பாதுகாப்போம், அடுத்துக் கெடுப்பவர்களிடமிருந்து! ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் நாளை குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவதற்கு எதிரான நாளாக அறிவித்துள்ளன உலகநாடுகள். இந்த ஆண்டும் நவம்பர் 19ஆம் நாளை அப்படியே அறிவித்துள்ளன உலக நாடுகள். இப்படி ஆண்டில் ஒரு நாளை அறிவிப்பதால் என்ன பயன்? இந்தக் கேள்விக்கு இன்றளவும் தெளிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு விதத்தில் இந்த நாள் பயன்படுகின்றது. அது, குழந்தைகளுக்கெதிராக நடக்கும் கொடுமைகளைப் பகிரங்கப்படுத்துகின்றது. இப்படிக் குழந்தைகளுக்கெதிராக நடக்கும் கொடுமைகளைப் பகிரங்கப்படுத்து வதால் மக்களிடையே…
பள்ளிகளில் இருந்தே பண்பியல் தொடங்குவோம்!
பள்ளிகளில் இருந்தே பண்பியல் தொடங்குவோம்! இரவும் பகலும் இன்று பெற்றோர்கள் உழைப்பது எதற்காக? என்று கேட்டால் வரும் பதில் நம் அனைவருக்கும் தெரிந்ததே… ஆம், தமது பிள்ளைகளைப் போற்றி வளர்ப்பதற்கே என்பதே! ஆனால் அந்தப் பிள்ளைகள் நாளை இவர்களை சற்றும் மதிக்காமல் அந்நியர்களோடு ஓடிப்போவதையும், இவர்களது வயதான காலத்தில் இவர்களைப் பராமரிக்காமல் முதியோர் இல்லங்களில் சேர்ப்பதையும், (வட இந்தியாவில்) காசியில் கொண்டுபோய் விட்டு விடுவதையும், கருணைக் கொலை என்ற பெயரில் கொன்று விடுவதையும் அன்றாட நிகழ்வுகளாகக் கண்டு…
மல்லுக்கட்டும் பதின் வயது!
மல்லுக்கட்டும் பதின் வயது! “என் பொண்ணு முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தா. சொன்ன பேச்சைக் கேப்பா, ஒழுங்கா படிப்பா… யார் கண்ணு பட்டுச்சுன்னே தெரியல. இப்பல்லாம் யார் பேச்சையும் கேட்கறதே இல்லை. எதுக்கெடுத்தாலும் எதுத்துப் பேசறா. அப்பா, அம்மாங்கற மரியாதையே சுத்தமா இல்லாம போச்சு! என்ன பண்றதுன்னே தெரியலை” இப்படி யாராச்சும் பேசினா, உங்க பொண்ணுக்கு பதின் வயதான்னு கேளுங்க. பெரும்பாலும் “ஆமாம்” என்பது தான் பதிலா இருக்கும். அப்படியானால், இது ஒரு வீட்டுப் பிரச்சினையில்லை. இந்தியாவில் சுமார் 25…