கற்பைக் காத்துக்கொள்ள சிறந்தவழி திருமணமே! [ மனித வாழ்வில் பெண்மை, சுவனத்து ரோஜா மலர்களைப் பின்னிப் பிணைந்து தொடுக்கின்றது. பெண்மைதான் நம்மை அன்புத்தலைகளால் பிணைக்கிறது. ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் அணுகுவது பஞ்சும் நெருப்பும்… இல்லையில்லை… பெட்ரோலும் நெருப்பும் ஒன்றையொன்று அணுகுவதற்கு ஒப்பாகுமேயன்றி வேறில்லை. கற்பிற்கு மதிப்பளிக்காது தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ள பல்லைக்காட்டி பசப்பித் திரியும் ஆண்களிடத்தில் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், ஆண்களின் இதயத்தைவிடப் பெண்களின் இதயம் காதலால் அதிகம் பாதிக்கப்பெறுகிறது. ஒருபெண் தன்னுடைய…
Category: இல்லறம்
தாம்பத்தியத்தின் இணக்கமே இல்லறத்தை இனிமையாக்கும்
தாம்பத்தியத்தின் இணக்கமே இல்லறத்தை இனிமையாக்கும் எதிர்பார்ப்பும், விருப்பமுமே தாம்பத்தியத்தை திருப்திகரமானதாக மாற்றும். எனவே விருப்பத்தை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதே நேரத்தில் ஒத்துழைப்பை துணைவர் வழங்க வேண்டும். தாம்பத்தியத்தின் இணக்கமே இல்லறத்தை இனிமையாக்கும் “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” என்ற பழமொழி குடும்ப வாழ்க்கைக்குப் பொருந்திப் போனால் வருத்தமே மிஞ்சும். தாம்பத்ய ஆசை நாளாக நாளாக அலுத்துப் போகக் காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் “ஆசை அனுதினமும், மோகம் முழு இரவும்” என்று புதுமொழி…
குடும்ப வாழ்க்கையின் வெற்றி ரொம்ப சின்ன விஷயங்களில் தான் இருக்கிறது!
குடும்ப வாழ்க்கையின் வெற்றி ரொம்ப சின்ன விஷயங்களில் தான் இருக்கிறது! [ திருமண வாழ்க்கையின் வெற்றி என்பது கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான புரிதலிலும், நெருக்கத்திலும் தான் இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சொந்தக்காரங்க, வருமானம், குழந்தைகள், வேலை, பொழுதுபோக்கு, இத்யாதி இத்யாதி எல்லாமே இரண்டாம் பட்சம் தான்! முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும்! இந்தப் பிணைப்பை இறுக்கமாக்க என்ன செய்யவேண்டும்? சிம்பிள்! அதிக நேரம் கணவன் மனைவி, தனிமையில் நேரம் செலவிட வேண்டும்!…
யார் மணப்பெண்?
யார் மணப்பெண்? அப்துல் கரீம் மனிதன் ஒரு கூட்டுப் பிராணி. சமூகத்துடன் கூட்டாக வாழ்வதையே விரும்புபவன். மற்ற மனிதர்களின் தொடர்பில்லாமல் தனிமையில் வாழ வேண்டும் என எந்த ஒரு மனிதனும் எண்ணுவதில்லை. தனது தனிமையை தவிர்ப்பதற்காக திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று சமூகத்துடன் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்கிறான். அனைத்து மனிதர்களும் திருமணத்தை விரும்பவே செய்கிறார்கள் என்றிருந்தாலும் துறவறம் என்ற பெயரில் யாரும் திருமணம் செய்யாமல் இருக்கக் கூடாது என…
கவனிக்காதீர்கள், கோணலை!
கவனிக்காதீர்கள், கோணலை! ”பெண்களிடம் நீங்கள் மிகவும் மென்மையாக நடந்து கொள்ளுங்கள், ஏனெனில் நிச்சயமாக அவர்கள் கோணலான எலும்பினால் படைக்கப்பட்டுள்ளார்கள்” (நூல்: புகாரி, முஸ்லிம்) இவ்வாறு கூறிய கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தக் கோணல் எப்படிப் பிரதிபலிக்கும் என்பதையும் மற்றொரு சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தினார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவிக்காகக் காலமெல்லாம் கடுமையாக உழைத்துக் கஷ்டபட்டுக் காப்பாற்றி வருவார். ஆனால் ஒரு தடவை அவளது கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால், உடனே அவள் சொல்லிவிடுவாள் ‘உனக்கு வாழ்க்கைப்பட்டு நான்…
இணைந்து வாழ்வதே சிறந்தது
இணைந்து வாழ்வதே சிறந்தது மு.அ. அபுல் அமீன் இஸ்லாத்தில் விவாகரத்து தவிர்க்க முடியாத நிலைகளில் மட்டுமே பயன்படுத்தும் நிபந்தனைகள் நிறைந்த உரிமை. பொறுப்பைத் தட்டிக் கழித்துத் தப்பித்துப் பதுங்கிக் கொள்ள, ஒதுங்கிக்கொள்ள ஒத்துழைக்கும் சட்டமல்ல. தம்பதிகளைப் பிரிக்கும் சாதாரண சம்பிரதாய சட்டமல்ல. கட்டம் கட்டமாக பல படிகளைக் கடந்து கால அவகாசத்தோடு அவசரமின்றி பின்னுள்ள வாழ்வின் பிரயோசனத்தையும் கருத்தில்கொண்டு பிரயோகிக்கும், பிரிவினையைக் கடுமையாக்கும் கடுஞ்சட்டம். ஆணுக்கு மனைவியை விவாகரத்து…
நான் உங்கள் மனைவி! உங்களை காதலிக்கின்றேன்!!
நான் உங்கள் மனைவி! உங்களை காதலிக்கின்றேன்!! [ காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.] பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள். இப்படிதான் ஒருநாள். ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்!…
அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் கருதும் உலகம்
அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் கருதும் உலகம் பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் ? என்று ஒரு கல்லூரி மாணவி ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட முக்கிய தொழிலதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். என் வயது 25…. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன்….
ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழக முடியுமா?
ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழக முடியுமா? அபூ அனூத் ஸலஃபி எமது அன்றாட வாழ்க்கையிலே கிடைக்கக் கூடிய மென்மையான உறவே நட்பு. இந்த நட்பு ஆண்-பெண் இருபாலாரிடத்தில் மலர முடியுமா? என்ற கேள்வி எழுகின்ற போது, இதற்கு பலர் கூடும் என்றும், சிலர் கூடாது என்றும் கூறுவர். இரு பாலாரிடத்தில் தளிர்விடும் நட்பு, மலரும் முன்னரே விபரீதமாகிவிடுகிறது என்பதை நாம் அன்றாடம் அவதானிக்கிறோம். மனித உறவு என்ற வகையில்…
திருமணம் தாண்டிய உறவுகள்!
திருமணம் தாண்டிய உறவுகள்! – என்ன காரணம்..? எப்படித் தடுப்பது..? தோழமை என்பது தோள்கொடுத்து உதவுவது. ஆனால் நட்பு பாராட்டி நெருங்கிய பெண்ணால் சிதைந்துபோன குடும்பத்து வேதனையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இதை எழுதுகிறேன்… நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்டில் வசித்த அந்தக் குடும்பம், அன்பால் கட்டப்பட்டது! அந்தக் குடும்பத்தலைவனுடன் அலுவலக ரீதியாக தொடர்பு கொண்ட ஒரு பெண், நாளடைவில் அவருக்கு நெருக்கமானவராகவும் ஆகிவிட்டாள். அதுவரை மனைவி, குடும்பம் என்று இருந்தவர், அந்தப் புது வரவால் தலைகீழாக மாறிவிட்டார். அந்தப்…