மகிழ்ச்சியான குடும்ப வாழ்வும், மார்க்கப்பற்றுள்ள தம்பதியும் ஷப்னா கலீல் கணவன் மனைவி அல்லாஹ் மனித இனத்தை ஆண் பெண் என ஜோடியாக படைத்ததே அவர்கள் இரு சாராரும் இன்பமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கே ஆகும். ”அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள்….
Category: இல்லறம்
ஆணும் பெண்ணும்…
ஆணும் பெண்ணும்… முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. மனித இனத்தை ஆண்-பெண் என அல்லாஹ் ஈரினமாகப் படைத்தான். அந்த ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்து வாழ சில நிபந்தனைகள் விதித்தான். அதுவரை அவ்விருவரும் ஒருவரையொருவர் சந்திக்கத் தடைவிதித்தான். அந்தத் தடையை மனிதன் உடைத்தான். அதனால் பல்வேறு கேடுகளும் தீமைகளும் உண்டாயின; உண்டாகிக்கொண்டே இருக்கின்றன. ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலந்து இறைவனை வணங்குவதையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்…
இல்லறத்தின் இயக்குனர்கள் ஆண்கள்! இல்லறத்தின் இதயங்கள் பெண்கள்!
இல்லறத்தின் இயக்குனர்கள் ஆண்கள்! இல்லறத்தின் இதயங்கள் பெண்கள்! [ வாழ்க்கை என்பது நிலவு! சிலசமயம் இருட்டும், சிலசமயம் முழுமையான ஒளியைத்தரும். இருட்டைக்கண்டு இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டால் வாழ்க்கையில் முழுமையான ஒளியைக் காணமுடியாது. வாழ்க்கை என்பது ஒரு இருட்டறை! அதில் அன்பும், காதலும் இரண்டு ஒளி விளக்குகள். இந்த விளக்குகள் இல்லையானால் அந்த வாழ்க்கையில் பயன் இல்லை, ஒளியில்லை. வாழ்க்கை என்பது விளைநிலமாகும். மண்வளத்தையும், அது பராமறிக்கப்படும் விதத்தைப் பொருத்தே பயிர்கள் வளர்ந்து பலன் தருவதுபோல் மணவளத்தைப் பொருத்தே…
”மனைவி கணவனை விடத் தாழ்ந்தவள்” எனும் கண்ணோட்டம் மாறவேண்டும்
”மனைவி கணவனை விடத் தாழ்ந்தவள்” எனும் கண்ணோட்டம் மாறவேண்டும் ஆணாதிக்கம் குறைந்துவரும் இந்தக் கால கட்டத்தில் கூட, பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறையவில்லையே! கொட்டிக்கொடுத்துப் பெண்ணைக் கட்டிக்கொடுத்த பின்னும் பிணந்தின்னிக் கழுகுகளாய் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தும் ‘உத்தம’க் கணவர்கள் நாளும் பெருகிக்கொண்டுதானே இருக்கிறார்கள். பிறந்தது பெண்ணாக இருந்துவிட்டால் இறந்துதான் தீர வேண்டும் எனக் கள்ளிப் பாலும் கையுமாக அலையும் கயமை நெஞ்சங்கள் தாம் எத்தனை எத்தனை! இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்!
இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும்
இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும் இஸ்லாமியப் பார்வையில் திருமணமென்பது மனதில் அமைதியையும் இதயத்தில் உறுதியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகும். அது ஆண், பெண்ணிடையே அன்பையும், நேசத்தையும், கருணையையும் நிலைத்தோங்கச் செய்கிறது. இதன்மூலம் கணவன் மனைவிக்கிடையில் அன்பான, அமைதியான குடும்ப வாழ்வு ஏற்பட்டு ஒரு தூய்மையான இஸ்லாமிய சந்ததி உருவாக வழி பிறக்கிறது. ஆண், பெண்ணிடையே அமைந்த இந்த இயற்கையான தொடர்பை மிக அழகிய முறையில் திருமறை அல்குர்ஆன் வர்ணித்துக் காட்டுகிறது. இருவருக்குமிடையே புரிந்துணர்வையும் பரஸ்பர அன்பையும் மன…
இறைவன் அருளிய இல்லற வசனங்கள்
இறைவன் அருளிய இல்லற வசனங்கள் [ அறத்துப்பாலில் மட்டுமே பொருள் கொள்ளப்படும் பாலியல் வசனமும்! இன்பத்துப் பாலில் மட்டுமே பொருள் கொள்ளப்படும் அறத்துப்பால் வசனமும்!] அறத்துப்பாலில் மட்டுமே பொருள் கொள்ளப்படும் பாலியல் வசனம்.. ”நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;…
வாழ்க இல்லறம்!
வாழ்க இல்லறம்! கண்ணதாசன் தகராறு இல்லாத குடும்பம் இல்லை..வீட்டுக்கு வீடு வாசப் படி..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.. யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை.. ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால் பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை.. காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும்…
இல்லற ஜோடிக்கு ஓர் இலக்கணம் ALI – FATHIMA
இல்லற ஜோடிக்கு ஓர் இலக்கணம் ALI – FATHIMA நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு விதத்தில் சகோதரராகவும், நபியின் மகளை திருமணம் செய்ததினால் மருமகனாகவும் இருந்த அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குடும்ப வாழ்வில் மிகவும் இனினையாக வாழ்ந்தவர் என்றே சொல்ல முடியும். மனைவி ஏதாவது குற்றம் செய்துவிட்டால் மாட்டை அடிப்பது போல், அல்லது அதைவிடக் கேவலமான முறையில் நடந்து கொள்ளும் கணவர்களை இன்று நாம் காண்கிறோம். ஆனால் அலி பின் அபீதாலிப் அவர்களோ…
மலடாவது நிலம் மட்டுமல்ல..!
மலடாவது நிலம் மட்டுமல்ல..! [ 90% குடும்பங்கள் குழந்தையின்மை காரணத்திற்கு பெண்களிடம் இருக்கும் குறைதான் காரணம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக 60-70% குறைபாடு ஆண்களிடம்தான் உள்ளது என்று கூறுகிறது. உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, உயிர் அணுவின் உருவ அமைப்பில் குறைபாடு என இன்னும் சில குறைபாடுகள் உள்ளன. அய்யயோ! என்னப்பா இப்படி சொல்ற, என்று பதற வேண்டாம். இன்றைய தலைமுறைக்கு இருக்கும் பெரும் பிரச்சனையான உணவு மற்றும் கலாச்சார மாற்றத்தின் விளைவே…
கணவன் மனைவி உறவு மதிக்கப்பட வேண்டும்!
கணவன் மனைவி உறவு மதிக்கப்பட வேண்டும்! டாக்டர். ஷர்மிளா [ பெண்மையானது நத்தை மாதிரி. தனக்கு பிடிக்காவிட்டால், தனது உடலை கூட்டுக்குள் இழுத்துக்கொள்ளும் நத்தை போல் ஆசையை உள்வாங்கிக் கொண்டு வெளிக்காட்டாமல் இருந்து விடுவார்கள். ஆண்கள் கட்டாயப்படுத்தினாலும், அது ஒரு உணர்ச்சியற்ற ஜடம் போல் தான் உணர்ச்சிகள் இருக்குமே தவிர, மனப்பூர்வமான ஆசை எதுவும் இருப்பதில்லை. எனக்கு தெரிந்தவரையில் அறுபது சதவீத குடும்பங்களில் தங்களது பெண்களுக்கு…