ஆணினம் உலகில் அழிந்து கொண்டு வருகிறதா? Are men going extinct? எஸ்.ஹலரத் அலி,- திருச்சி [ இனி வருங்காலத்தில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவித்ததை நவீன அறிவியல் இன்று உறுதிப்படுத்துகிறது.] அல்லாஹ் படைத்த பெரும்படைப்புகளில் மனிதப்படைப்பு ஒன்றாகும்.எல்லா படைப்புகளையும் படைத்து இறுதியில் களிமண் சத்திலிருந்து ஆதி தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்தான். அவர்களிலிருந்து ஹவ்வா…
Category: ஆண்கள்
பெண்களைக் குறை கூறும் ஆண்களே…
பெண்களைக் குறை கூறும் ஆண்களே… [ ”தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்” என்று தனது திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் – பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள் கவனிக்கவும்.] ”உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்” என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை…
எனது மகளை நீங்கள் மனைவியாக ஏற்று ஐந்து மணி நேரம் கடந்துவிட்டன..
எனது மகளை நீங்கள் மனைவியாக ஏற்று ஐந்து மணி நேரம் கடந்துவிட்டன.. சமுத்திரக்கனி அன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார் எழுதிக்கொள்வது,. எனது மகளை நீங்கள் மனைவியாக ஏற்று ஐந்து மணி நேரம் கடந்துவிட்டன. இத்தனை காலமும் எனது நெஞ்சிலும் தோளிலும் சுமந்த எனது மகளை உங்களின் பொறுப்பில் இனி விட்டுவிட்டேன். ஒரு தந்தை என்ற ரீதியில் எனது கடமையை நான் சரியாகச் செய்து முடித்திருக்கிறேன் என நம்புகிறேன். ஒரு கணவனாக…
குடும்பத்தில் ஆண்களின் பங்கு
குடும்பத்தில் ஆண்களின் பங்கு அஹமது பாகவி [ சமுதாயக் காவலர்களாய் அல்லாஹ்வின் அழகிய அரிய பிரதி நிதிகளாய் படைக்கப்பட்ட நம் இஸ்லாமிய ஆண்கள் கடமை பொறுப்புணர்ந்து செயல்பட்டால் குடும்பம் ஒரு மார்க்க பூஞ்சோலையாகும். ஒரு மனிதன் மகனுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது அதிகமாக தான் தருமம் செய்வதை விட சிறந்ததாகும்.” நபிமொழி. ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கை நடத்தும் ஒருவன் தனது மனைவிக்கும், தாய் தந்தை, சகோதரர், சகோதரி…
ஆண்களுக்கு விஞ்ஞானிகளின் எச்சரிக்கை!
ஆண்களுக்கு விஞ்ஞானிகளின் எச்சரிக்கை! மனிதகுலம் அழிய ஆரம்பிக்கப்போகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். சமீபத்தில் பிரான்சில் நடத்தப்பட்ட ஆராட்சிகள் பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. உடலுறவின்போது ஆண்களில் இருந்து வெளியாகும் விந்தணுக்கள், பெண்ணின் சூல் பையை அடைந்து கர்ப்பம் தரிக்கிறது. அப்படி அது நீந்திச் சென்று, கர்ப்பம் தரிக்கவில்லை என்றால், விந்தணுக்களை எடுத்து, வயிற்றில் உள்ள பெண்களின் கருப்பையில் போட்டு கருக்கட்ட முடியும். இதேபோல பிற விதத்திலும் கருக்கட்ட முடியும். ஆனால் விந்தணுக்கள் இல்லாமல் என்ன செய்ய முடியும்?…
அப்பா என்றாலே… ஏன் தப்பான பார்வை?
அப்பா என்றாலே… ஏன் தப்பான பார்வை? ‘தமிழ்மாமணி’ மு. ஹிதாயத்துல்லாஹ் அம்மா… என்றால் அன்பு!அப்பா என்றாலும் அன்புதானே…ஏனிதை நாம் கற்பிக்க மறந்தோம்? பெரும்பாலும் அப்பாவைத் தப்பாகப் புரிந்து கொள்ளும் நிலையில் சிலர் இருக்கிறார்கள்? குடும்பத்தில் ஆடம்பரச் செலவை கட்டுப்படுத்தும் ஆடிட்டராகத் தெரிவதால் அவர் மீது ஒரு எரிச்சல் ஏவுகணை! மீசை யரும்பும் பருவத்தில் டீன் ஏஜ் பையன்களோடு லூட்டி அடிக்கும் போது அதைப் பார்க்கும் தந்தை துடித்துப்போய் வீட்டுக்குப் போடா… ராஸ்கல்…
மனைவிகளுக்காக தாடியை எடுக்கும் ஆண்களும், ஆண்களாக மாறிவரும் மனைவிகளும்!
மனைவிகளுக்காக தாடியை எடுக்கும் ஆண்களும், ஆண்களாக மாறிவரும் மனைவிகளும்! தாடி வழித்தல் தொடர்பாகப் பழைய புதிய 11 உலமாக்களின் கருத்துக்கள் [ வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம்எனும் கேடு உள்ளது. (அல்குர்ஆன் 38:27) ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வன்னம் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக வழித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தாடி வழித்துக் கொள்வதற்குறிய ஒன்றாக…
இதிலென்ன வெட்கம்?
இதிலென்ன வெட்கம்? திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது; திருமண நாளும் நெருங்கிவிட்டது. மணமகளின் அண்ணன் சில உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அஸர் தொழுகைக்காக ஒரு பள்ளியில் நுழைகிறான். அந்நகரின் அந்த மஹல்லாவில்தான் மணமகனின் வீடும் இருக்கிறது. தொழுது முடித்து, துஆ செய்துவிட்டுத் திரும்பும்போது முகத்துக்கெதிரில் மணமகனே நிற்கிறார்.ஸலாம் சொல்கிறார். பரஸ்பரம் கைகொடுத்துக் கொள்கிறார்கள். “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்கிறார் மணமகன். அவரது முகத்தில் தேங்கிக் கிடக்கும் சோகத்தை அவர் பெரும் முயற்சி செய்து பிரதிபலிக்கும் புன்னகையால்…
அதிகரிக்கும் முதிர் இளைஞர்கள்!
அதிகரிக்கும் முதிர் இளைஞர்கள்! கடந்த காலங்களில் குழந்தைகள் விடுமுறை விட்டால் தாத்தா வீட்டுக்கு சென்று தாத்தா, பாட்டியோடு ஆட்டம் பாட்டத்துடன் இருப்பார்கள் இனி வரும் காலங்களில் பேரக்குழந்தைகளோடு கொஞ்சி குழாவி மகிழ வருங்கால தாத்தாக்கள் அந்த உடல் நலத்தோடு இருப்பார்களா என்றால் நிச்சயம் சந்தேகம் தான்… இதற்கு முந்தைய தலைமுறையினர் அதிகபட்சம் 25 வயதில் திருமணம் செய்து கொண்டனர் இதனால் தங்களது மகனுக்க 25 ஆகும் போது அவர்களுக்கு 50 வயதாகி இருக்கும். தன் மகனுக்கு 26…
மாதவிடாய்: இது ஆண்களுக்கான பெண்களின் படம்
மாதவிடாய்: இது ஆண்களுக்கான பெண்களின் படம் இரா.உமா! மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்திருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங்களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனைகளையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது….