பதினெட்டில் வளையாதது இருபத்தொன்றில் வளையப்போகிறதா? கான் பாகவி பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தி சட்டமியற்றத் துடிக்கிறது ஒன்றிய அரசு. பொதுவாக இந்த அரசுக்கு இப்படி சர்ச்சைக்குரிய வேண்டாத வேலைகளைச் செய்வதே வேலையாகிப்போனது. சரி! என்னதான் காரணம் சொல்கிறார்கள்? பாலின சமத்துவம் வேண்டுமாம்!ஆணுக்குத் திருமண வயதாக 21 இருக்கும்போது பெண்ணுக்கு மட்டும் 18 என்பது பாலினப் பாகுபாடு அல்லவா? இரு பாலினருக்கும் இயற்கையிலேயே பருவ வேறுபாடுகள் இருக்கும்போது அதைப் புறம் தள்ளிவிட்டு கல்யாண வயதைக் கூட்டுவது எவ்வளவு…
Category: குடும்பம்
தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை!
சவுதி அரேபியாவில் தப்லீக் மற்றும் தாஃவா குழு உள்ளிட்ட குழுக்களுக்கு தடை! சன்னி இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது! தப்லீக் அமைப்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று எனவும் சமூகத்துக்கு ஆபத்தானது என்றும் சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது. மேலும் தப்லீக் அமைப்புக்கு எதிராக மக்களை எச்சரிப்பதற்காக அடுத்த வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்யுமாறு பள்ளிவாசல் போதகர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரத் துறை வெளியிட்டுள்ள ட்விட்டர்…
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் அல்லாஹுதஆலா உலகில் அனைத்து படைப்புகளையும் இரட்டை இரட்டையாக படைத்துள்ளான். அதே போன்று ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்களை திருமணம் என்ற அமைப்பில் ஜோடி சேர்த்து ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ வைக்கின்றான். அந்த திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளையும் இடுகின்றான். அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் செய்யப்படும் திருமணங்களுக்கு ரஹ்மத்தும், பரக்கத்தும் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் இன்று எமது முஸ்லிம்…
பேண மறந்த உறவுகள்
பேண மறந்த உறவுகள் எம்.எஸ்.எம்.ஹில்மி(ஸலாமி)- -BA(Reading),Dip.in.Library & information science இஸ்லாமிய மார்க்கம் பூரணமானது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தூதுத்துவப்பணியைப் பரிபூரணப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு எத்தனையோ விடயங்கள் எமக்கு சான்று பகர்கின்றன. அந்த வகையில், இஸ்லாம் அயலவர் உறவைப்பற்றிக் கூறவும் தவரவில்லை. ஒவ்வொரு மனிதனும் தனது அன்றாட செயற்பாடுகளின் போது, பல்வேறு விதமான தொடர்புகளைப் பேணுகிறான். அவ்வாறு பேணப்படுகின்ற உறவுகளில் ஒன்று தான் எம்மை அண்டியுள்ள அண்டை வீட்டாரின் அற்புதமான உறவு. எமக்கு எத்தனையோ…
தாயோ தந்தையோ உயிருடன் இருக்கும்போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை
தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு, மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. “பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.” இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள…
படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? உண்டாகும் தீய விளைவுகள்!
படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? உண்டாகும் தீய விளைவுகள்! திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம். 1. நெருக்கம் குறைகிறது கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும்…
மணமக்களுக்கான பிரார்த்தனை
மணமக்களுக்கான பிரார்த்தனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது; ”பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்” பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி…
பெண்பாலின் நிஜமுகம் !
பெண்பாலின் நிஜமுகம்! டாக்டர் ஷாலினி உலகெங்கும் இருக்கும் சர்வ ஜீவராசிகளின் பெண் பாலினத்தை கூர்ந்து கவனித்தால் வெட்டவெளிச்சமாக தெரிந்துபோகும் உண்மை, the female of the species is deadlier than the male அதாகப்பட்டது எல்லா உயிரிலும் பெண்பாலே மிக ஆபத்தானது. காரணம் பெண்பாலுக்கு தான் ஆணைவிட அதிகபட்ச வேட்டுவகுணமும், பிழைக்கும் திறனும் இருக்கிறது. இப்படி இருந்தாகவும் வேண்டும், காரணம், குட்டிகளுக்கு இரை தேடுவதும், அவற்றுக்கு வேட்டையை கற்றுத்தருவதும் பெண்ணின் வேலை தானேஸ.இவள் சிறந்த வேட்டுவச்சியாக…
கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்…
கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்… AN IMPORTANT ARTICLE [ உடலுறவின் போது ஓதும் ‘துஆ’ சேர்க்கப்பட்டுள்ளது.] [ ஒருவர் தனது பிள்ளையை எப்படி பொத்தி பொத்தி வளர்த்தாலும் சிலசமயம் அதுகூட தவறான பாதையில் சென்றுவிடுவதைக் காணத்தான் செய்கிறோம். மனித முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எவரும் நிர்ணயிக்க முடியாது. அதே சமயம் கணவன் – மனைவி உடலுறவு கொள்கின்ற அந்த இனிமையான நேரத்தில் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடிக்கொண்டால் பிறக்கின்ற குழந்தை ஸாலிஹான பிள்ளைகளாகத் திகழும் என்பதில் எவருக்கேனும் சந்தேகமுண்டா என்ன! கணவன்-மனைவி உடலுறவு கொள்கின்ற…
உறவினரின் உறவே அல்லாஹ்வின் உறவு
உறவினரின் உறவே அல்லாஹ்வின் உறவு ஷம்சுல் லுஹா ரஹ்மானி [ உறவைப் பேணுதல் என்ற பாதையில் எட்ட வேண்டிய இலக்கு உறவினருக்காக உறுப்புகளை தானம் செய்வதாகும். அதுதான் உண்மையான உறவு பாராட்டலாகும். அது காலத்தின் கட்டாயமாகும். இத்தகைய கட்டாயத்தை அறிவியல் உலகம் நம்மீது திணித்திருக்கின்றது. நாமோ உணவு, உடை போன்ற பொருளாதார ரீதியிலான உதவிகள் மூலம் உறவைப் பேணுகின்ற விஷயத்தில் அரிச்சுவடி பாடத்தைக்…