என் செல்லமே! நீ என்னை நேசிக்க விரும்பினால் இப்பொழுதே நேசி! பாசம் காட்ட விரும்பினால் இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டு! நான் இவ்வுலகை விட்டு மறைந்தபின் மீளாத்துயில் கொண்டபின், அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே, நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே, “தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது” எனும் நபி மொழியை மறந்து விட்டோமே என வருந்தும் நிலை உனக்கு வேண்டாம்.
Category: கட்டுரைகள்
மனிதா! வசந்தம் தரும் பூக்களை நடு!
பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்? அபூ அரீஜ் பூங்காவனம், பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்? பூமியிலே முளைத்ததெல்லாம் பூமிக்குச் சொந்தமா? பூவையர் பறிதத்தெல்லாம் கூடைக்குள் போகுமா? புயலடித்து விட்டால் பூக்களெல்லாம் பூமிக்குள் புதைந்து விடும்! ஆடவர் புயலாய் ஆடிவிட்டால் பறித்த பூவாய் பூவையர் கசங்குவர். கண் கசக்குவர்! பூக்களை வெறுக்காதீர் – எங்கோ நான் படித்த வரிகள்! எந்தப் பூக்களைப் பற்றிப் பேசுகிறார்கள்? கொடிப் பூக்களையா? கொடியிடைப் பூக்களையா? பறித்த பூக்களையா? யாரும் பறிக்கா…
தோலின் உணர்ச்சிகள்
தோலின் உணர்ச்சிகள் டாக்டர் டிகாடட் டிஜாஸன் (Dr.Tagatat Tejasen) இந்த மனிதர் இஸ்லாத்தின் கொள்கையைக் (ஷஹாதா) மொழிந்து அவர் இஸ்லாமியர் ஆகுவதை வெளிபடுத்துகிறார். இந்த சம்பவம் நடந்தது ரியாத்தில் நடந்த “எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில்” ஆகும். அவர் தாய்லாந்தில் உள்ள ஷியாங் மாய் பல்கலைகலத்தின் உடற்கூறு மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் “தெஜாதத் டிஜாஸன்” ஆகும். அவர் முன்பு அதே பல்கலைகழகத்தில் மருத்துவத் துறைத் தலைவராக இருந்தார்….
ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்
ஹார்ட் அட்டாக்கும், முதல் உதவிகளும் டாக்டர் A.ஷேக் அலாவுதீன் MD,(Alt.Med)ATCM(CHINA) ஹார்ட் அட்டாக் இந்த வார்த்தையே பயத்தை உண்டாக்கும், இதனால் ஏற்படும் பதட்டமோ பிரச்சனையை அதிகமாக்கும். நிதானமாக இக்கட்டுரையில் இருப்பது போல் செயல்பட்டால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து மிகவும் எளிதாக விடுபடலாம். (இன்ஷா அல்லாஹ்). இதயம் இதன் அழகிய துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம் அதுதான் மரணம். இறைவன் நம்உடல் இயக்கத்திற்காக அளித்த ஓர் அற்புத தொழிற்சாலை….
இஸ்லாமிய பேங்க் – எதிகால தீர்வு
சவுதி அரேபியாவின் –கிங் அப்துல் அஜீஸ் பல்கலைகழகத்தில்– இஸ்லாமிய பொருளாதார ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் சகோதரர் டாக்டர் நஜாதுல்லாஹ் சித்திகீ அவர்களின் ஆய்வில் இஸ்லாமிய வங்கியியல் பற்றிய சிறப்புக் கட்டுரை.வங்கிகள் எதற்கு? வங்கிகள் ஏன் ஆதவைப்பெறுகின்றன? இஸ்லாமிய வங்கியியலை விவாதிப்பதற்கு முன் இந்தக் கேள்விகளுக்கு விடைக்காண்பது முக்கியமாகும். பணத்தை சேமிக்க விரும்புகிறவர்களுக்கும் முதலீடு செய்ய பணம் தேவைப்படுகிறவர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவதுதான் வங்கி. அன்றாட செலவுகள் போல மீதமான பணத்தை சேமித்து வைக்க விரும்புபவர்கள்…
இணையதளம் மூலம் தொந்தரவு
அனாமேதய அழைப்புகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது இணையதளம் மூலம் இத் தொந்தரவு அதிகரித்து வருகிறது என்பது நடைமுறை உண்மை. இணையதள சேவையில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், யுவதிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சேவை என்பது அரட்டை அரங்கமே (சாட்டிங்). இதில் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் பல வகை மனிதர்கள், பல வகையான உரையாடல் வகைகள் என தனித்தனியாக பல்வேறு அறைகள் தரப்படுகின்றன. அதில் நமக்கு வேண்டிய ஊரை, நபரை, உரையாடலைத் தேர்ந்தெடுத்து யாருடனும்…
விஞ்ஞான தொழில்நுட்ப புரட்சி
எதுவுமேயில்லாமல் வந்தவன் ஒரு கஃபன் துணியை சுருட்டிக் கொண்டு போய் விடுகிறான். இந்தக் கஃபனுக்கு முன்னால் எதையெல்லாமோ தன்னுடன் இணைத்துக் கொள்கிறான். இந்த ஒட்டுதல் அரைஞாண் கயிற்றில் ஆரம்பமாகிறது. அரை டவுசர், மேலாடை, உள்ளாடை, கைக்கடிகாரம், வளையல், மோதிரம், காதணி, கழுத்தணி என எதெல்லாமோ அவனோடு-அவளோடு இணைந்து விடுகிறது. இந்த வகையான ஒட்டுதலில் செல்போன் அட்டையாய் அவனோடு ஒட்டிக்கொண்டு விட்டது. செல்லின்ன்றிச் செல்வதில்லை. அவன் சொல்லெல்லாம் செல்லிலே! கழிப்பறையில் கூட ‘ஹலோ” சொல்லுகிறான். உங்கள் பெயரென்ன? என்பதை…
விண்வெளி
(விஞ்ஞானக்கட்டுரை) விண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளது. சுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு “உண்மை வரலாறுகள் (True Histories)” என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார். அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது. கதிரவனுக்கும், நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது. அடுத்து வந்த பல நூற்றாண்டுகளில், விண்வெளி…
ஆபாசத்துக்கு அச்சாரம் கொடுக்கும் முயற்சி!
காத்திருக்கும் பேராபத்து! ஆட்சிகள் மாறுகிறதே தவிர, அன்னிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு மூலதனத்துடன் காத்திருப்போருக்கான சலுகைகளை வாரி வழங்கும் காட்சிகளில் எந்தவித மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருபுறம் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமும், மறுபுறம் விலைவாசி உயர்வுப் பிரச்னையும் ஆட்சியாளர்களையும், பொதுமக்களையும் அலட்டும் நேரத்தில் சந்தடி சாக்கில், விவாதத்திற்கும் பிரச்னைக்கும் உரிய விஷயங்களை அவசர அவசரமாக நடத்திக் கொள்ள மன்மோகன் சிங் அரசு முனைப்புடன் செயல்படுவது வேதனையாக இருக்கிறது. கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மத்திய…
மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்?
மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்? [ இஸ்லாத்தைப் பற்றி ஆயிரமாயிரம் ஆராய்ச்சிகளைச் செய்யும் அமெரிக்காவுக்கோ, ஐரொப்பாவுக்கோ தெரியாததல்ல. அப்படி அமெரிக்கா அறியாமலிருந்தாலும் அதற்குப் புரியும் வகையில் இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்துச் சொல்லியே இருக்கின்றார்கள். ஒவ்வொரு நிகழ்வின் போதும் தெளிவுபடுத்தியே வருகின்றார்கள். இத்தனையும் அறிந்தும் தெரிந்தும் அமெரிக்காவும் ஐரொப்பிய நாடுகளும் இஸ்லாம் சொல்லும் ஜிஹாதையும் இஸ்லாத்தையும் தீவிரவாதத்தோடு இணைக்கின்றனவே ஏன்? காரணமிருக்கின்றது! அமெரிக்காவுக்கு முஸ்லிம் நாடுகளைப் பற்றி அச்சம் அறவே இல்லை என்பது உண்மை தான். ஆனால்…