நீடூர் ஃபைஜுர் ஹாதி நித்தம் நித்தம் துப்பாக்கிகளின் சத்தம், தினம் தினம் மரண அறிவிப்புகள், இன்று இருக்கும் உறவுகள், உடைமைகள் அடுத்த வினாடியே கழுகு தேசத்தின் போர் வெறிக்கு இலக்காகிடுமோ என்ற அச்சம், பல மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த பாசக்குழந்தைகள் இவ்வுலகைக் காணும்முன்னே கழுகு கூட்டத்தின் இரத்தப்பசிக்கு உணவாகிடும் கொடூரம், கண்னியமிக்க தாய்மார்களின் கற்புகள் கழுகுக்கூட்டத்தினரால் சீறழிக்கப்படும் அக்கிரமம், நாட்டின் குடிமக்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று வாய்கிழிய பேசிவிட்டு குடியும் கையுமாக இரத்தவெறிப்பிடித்த ஆதிக்கவாதிகளுடன் கைக்கோர்த்து…
Category: கட்டுரைகள்
தேவை, பாடத்திட்டத்தில் மற்றம்!
தமிழகத்தில் எந்தவொரு பட்டதாரி இளைஞரை எடுத்துக்கொண்டாலும் அவரது சான்றிதழ்களில் இருக்கும் மதிப்பெண்ணுக்கும் அவர்தம் திறனுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. இந்தத் திறன் என்று கருதப்படுவது-கருத்தை வெளிப்படுத்தும் ஆற்றல், அந்தந்த சூழலுக்கு ஏற்ப செயல்படும் அறிவு, பொதுவாக மற்றவர்களுடன் பழகும் விதம் ஆகியவைதான். கல்லூரி வளாக நேர்காணலுக்கு வரும் நிறுவனங்கள் மாணவர்களின் மதிப்பெண்களைவிட இந்த மூன்று விஷயங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றன. தகவல் தொடர்புத் துறை நிறுவனங்கள்கூட, இந்த மூன்று எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோர் எந்தப் பாடப்பிரிவு மாணவர்களாக…
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு தமிழாக்கம் – அபு இஸாரா (புற்றீசல்போல் நாளுக்கு ஒரு கட்சியை முஸ்லிம்கள் ஆரம்பிக்கும் இன்றைய சூழலில் இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்) மதசார்பற்ற அரசியில் கட்சிகளுக்கே முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் எனது செல்வாக்கை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் மதசார்பற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு செய்த துரோகம், மேற்கண்ட எனது நிலைப்பாட்டிலிருந்து மாறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ இனவாத கட்சிகளுடன் மதச்சார்பற்ற அரசியல்வாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும்…
வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்!
வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்! ஜோதிலால் கிரிஜா [ பெண்ணைத் துய்பொருளாய்க் கருதி ஊடகங்கள் வணிகம் செய்வதாய்க் குற்றம்சாட்டும் பெண்ணியவாதிகள், வம்புக்கு இழுக்கும் வாசகங்கள் கொண்ட டி – ஷர்ட்டுகளை அணியும் பெண்களை ஏன் கண்டிப்பதில்லை? மாறாக, எதையும், எப்படியும் உடுப்பது பெண்ணின் உரிமை என்றல்லவோ வக்காலத்து வாங்குகிறார்கள்? பனியன்களிலும், டி – ஷர்ட்டுகளிலும் வம்புக்கு இழுக்கும் இந்த வாசகங்களைப் படிக்கும் ஆண் அருவருப்பான முறையில் எதிரொலிக்கவே செய்வான். அவன் என்னை இடிக்காமல் விலகிப்…
திருக்குர்ஆனும் விஞ்ஞானமும் Part – 1
திருக்குர்ஆனும் விஞ்ஞானமும் Part – 1 ஹாருன் யஹ்யா அனைத்தும் நீரிலிருந்தே தோன்றின أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاء كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள்…
திருக்குர்ஆனும் விஞ்ஞானமும் – Part 2
சமுத்திர ஆழங்களில் மண்டிக்கிடக்கும் மையிருள் أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا وَمَن لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُّورٍ அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும்…
வேண்டாம் முரண்பாடு!
எதனாலே உண்டாச்சு முரண்பாடு எவரோடு செய்து கொண்டாய் உடன்பாடு சமுதாயம் உங்களாலே படும்பாடு சரியில்லை..முறையில்லை.. விட்டுவிடு..! அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் பெரும்பாவம்! அறிந்திருந்தும் அத்தவறை மீண்டும் மீண்டும் செய்கின்ற கொடுமையினை நிறுத்திடாயோ? செம்மல்நபி வழி முறையில் நிலைத்திடாயோ? அருள்மறையாம் திருமறையின் தெளிவுரைகள் அழகுத் தமிழ் மொழியினிலே வந்திருந்தும் அதன் பொருள் புரிந்து பழக்கத்தில் கொள்ளாமல் – சில அண்டப்புழுகுகளின் புத்தகத்துள் புகுந்தாயோ? அலை அலையாய் இளம்பெண்கள் நிற்கின்றார்! – உன்னை விலை…
குழந்தைகளின் சிந்தனையை சிதைக்கும் டி வி சேனல்
இந்தியா முழுவதுமே பள்ளி கோடை விடுமுறை நாள்களில், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கேபிள் இணைப்புகள் மூலம் ஒளிபரப்பப்படும் குழந்தைகளின் சேனல்களை தடை செய்ய வேண்டும் என்ற கருத்து சமூக ஆர்வலர்களிடையே மேலோங்கி வருகிறது. 3 வயது குழந்தை முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர். விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இத்தகைய சேனல்களை மட்டுமே குழந்தைகள் விரும்பிப் பார்ப்பதால்,…
இஞ்சியும் மாம்பழமும்
மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி! மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. “இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும். இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி…
பொறியியல் படிப்பின் மீது மோகம்
ஒவ்வோர் ஆண்டும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் அதில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் கூறும் செய்தி என்ன தெரியுமா? “நான் சாஃப்ட்வேர் என்ஜினீயர் ஆவேன் அல்லது டாக்டர் ஆவேன்”. இந்த இரண்டைத் தவிர, ஆசிரியர் ஆவேன் என்றோ, ஐ.ஏ.எஸ். ஆவேன் என்றோ இன்னும் மற்ற வேலைக்குச் செல்வது குறித்தோ பெரும்பாலானோர் சிந்திப்பதே இல்லை. அந்த அளவுக்கு ஐ.டி. மோகம் இளைய தலைமுறையை மையம் கொண்டுள்ளது. அதற்குத் தகுந்தாற்போல ஆண்டுக்கு ஆண்டு பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும்…