சீனாவில் கலப்படப்பாலை அருந்தி 53,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது அந்நாட்டு அரசை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பால் பண்ணைகள், பால் நிறுவனங்களில் அந்நாட்டு அரசு அலுவலர்கள் நடத்திவரும் ஆய்வில் ஏகப்பட்ட கலப்படக்காரர்கள் சிக்கியிருக்கின்றனர். அவர்களுக்கான “சுருக்குக்கயிறு’கள் தயாராகிக்கொண்டிருப்பதாக பெய்ஜிங்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நம் நாட்டிலும் பெயரளவில் இத்தகைய ஆய்வுகள் அடிக்கடி நடப்பதுண்டு. இரு மாதங்களுக்கு முன் தமிழகத்திலும்கூட உணவு ஆய்வாளர்கள் குப்பைக்கிடங்குகளிலும் நீர்நிலைகளிலும் வாளி வாளியாக பாலை ஊற்றி அழித்தார்கள்.
Category: கட்டுரைகள்
கூகிள்
ஸ்டான்போர்ட் பல்கலைகழக மாணவர்கள் இருவர் Larry Page-ம் Sergey Brin-னும் தங்கள் பிஎச்டி ஆய்வுக்காக விளையாட்டாக உருவாக்கிய தேடல் இயந்திரம் தான் Backrub.துவக்கத்தில் இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர். வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில் தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கியிருந்தது. ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.
மும்பை கதவுகளில் தலை கீழாக தொங்கும் இந்திய முகம்
இந்து-முஸ்லீம் இரண்டுமே தனித்தனி அடையாளங்கள் தான். முஸ்லிம்களைச் சிறுபான்மையினர் என்று சொல்வது இன்றைய வளர்ந்து வரும் உலகமயமாதலில் அர்த்தமில்லாதது. இந்தியாவில் எப்படி முஸ்லீம்களோ அதுபோலவே உலக அரங்கில் இந்துக்களும் என்பதும் உண்மைதானே!. இந்தப் பிர்சசனைகள் குறித்து இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது?
என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்?!
அமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்று அந்த நாட்டின் பொருளாதார நிபுணர்கள் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா மட்டுமல்ல, உலக சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு, சுமார் 700 பில்லியன் டாலர்களை (அடேயப்பா, 70,000 கோடி டாலர்கள். “ரூபாய்.31 லட்சம் கோடி” – அதாவது, சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கள்ளப்பணம் ரூபாய். 64 லட்சக் கோடியில் பாதிக்கும் சற்று குறைவு) திவாலாக இருக்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வாரி…
சிந்தனையின் தேன் துளிகள்
சிந்தனையின் தேன் துளிகள் M.A.P.ரஹ்மத்துல்லாஹ், நீடூர் 1. உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் அளித்துள்ள அருட்கொடை மழையாகும். 2. இறைவன் நினைப்பு இருந்தால் பகையுணர்ச்சி பறந்துவிடும். 3. சந்தோஷம் முயற்சிக்கு ஊட்டச்சத்தாகும். 4. ஆர்பாட்டம் மறைமுக எதிரியை உருவாக்கும். 5. வாய்மை வளமானதாக இருந்தால் சாதனை எளிதாகும். 6. விமர்சனத்துக்கு ஆளாகும் தலைமைதான் நேர்மையாக நடக்கும். 7. அன்பும், பண்பும் அமையுமானால் முட்டாலும் மேன்மையாவான். 8. தன்னைத்தானே உயர்த்திப் பேசுபவன் சதியும்…
பெருமை வேண்டாம்!
பெருமை வேண்டாம்! “பெருமை எனது மேலாடையாகும். வல்லமை எனது கீழாடையாகும். இதில் எதாவதொன்றில் எவனாவது என்னோடு போட்டியிட்டால், அவனை நரகத்தில் வீசுவேன” என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்க்ள கூறினார்கள். (ராவி: அபூ ஹ¤ரைரா ரளியல்லாஹ¤ அன்ஹ¤, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்) இது நன்கு கவனித்து மனதில் நிறுத்த வேண்டிய படிப்பினைக்குரிய ஹதீஸாகும். எந்த செயலால் நரகத்தில் தூக்கி வீசப்படும் நிலை ஏற்படுமோ, அந்த விஷயம் இன்று சர்வதேச அளவில் ஒவ்வொரு…
அமெரிக்க ஆக்கிரமிப்பால் கொல்லப்பட்ட இராக்கியர்கள் 10 லட்சம் பேர்!
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பன்னாட்டு விமானநிலையத்தில், கடந்த ஜூன் 25 அன்று பரபரப்பான காலை நேரத்தில் பொதுமக்கள் செல்லும் பாதையில் கார் ஒன்று அனைத்துவிதமான பாதுகாப்புப் பரிசோதனைகளையும் முடித்து விட்டுச் செல்கிறது. அலுவலக வேலைகள் தொடங்க இன்னும் சற்று நேரமே இருக்கும் நிலையில், 8.40 மணிக்கு அமெரிக்க இராணுவ வண்டி ஒன்றில் இருந்து 9 வீரர்கள் அக்காரை நோக்கிச் சரமாரியாகச் சுடுகின்றனர். சிறிது நேரத்துக்கெல்லாம் அக்கார் தீப்பற்றி எரிந்து போகிறது. அந்தக் காரில் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளா?…
நமக்கு சொந்தமான அணைத்தும் அல்லாஹ்வின் அருட் கொடையே
நமக்கு சொந்தமான அணைத்தும் அல்லாஹ்வின் அருட் கொடையே நாம் வாழும் உலகில் அல்லாஹ் மனிதனுக்கு பல அருட்கொடைகளை வழங்கியுள்ளான். ஒவ்வொரு உயிரினத்தினதும் தேவைகள் அன்பாக பூர்த்தி செய்யப்படுகிறது. எந்த ஒரு விஷயமும் விடுபடவில்லை. நம்மை பற்றி சற்று சிந்திப்போம். நாம் காலையில் எழுந்தது முதல் நமக்கு பல பொருட்கள் தேவைப்படுகின்றன. மேலும் பல வகையான சூழ்நிலைகளை சந்திக்கிறோம். சுருக்கமாக சொல்வதானால் எம்மீது அருளப்பட்ட பல அருட்கொடைகளின் காரணமாக நாம் உயிர் வாழ்கிறோம். நாம் எழுந்தவுடன் சுவாசிக்கிறோம். இதை…
இனிய வாழ்வு தரும் இஸ்லாம்
இது வாழ்வின் நெறி முறை! இது மாற்றாருக்கு எளிதில் பிடித்துவிடுவதில்லை! பிடித்து விட்டால் எவரும் அதை விட்டு விடுவதில்லை! இது தான் கொள்கை!
அதிசய பானம்: தாய்ப்பால்
“நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே ‘நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக¢ என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (குர்ஆன் 31:14) அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட ஈடு இணையற்ற தாய்பாலானது குழந்தைகளுக்கு அவசியமான சக்தியை பூர்தி செய்யக்கூயதாகவும் குழந்தைகளை நோயிலிருந்து காப்பாற்றக்கூடியதாகவும்…