ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பு வெளியிடப்படும்போதும், “மனிதன் விஞ்ஞானத்தின் துணையோடு இயற்கையை வென்று விட்டான்’ என்று எக்காளமிடுவதும், அடுத்த இருபது முப்பது வருடங்களில் அந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை வேறு வழியில்லாமல் நமது சந்ததியினருக்குத் தத்துக் கொடுத்து அசடு வழிவதும் கடந்த எழுபது ஆண்டுகளாகத் தொடர்கிறது. மனிதனின் அனைத்து நோய்களுக்கும் விஞ்ஞானம் தந்திருக்கும் அதி அற்புதத் தீர்வு என்று கூறப்பட்ட பென்சிலின்இ இப்போது அதிக கவனத்துடன் உபயோகிக்கப்பட வேண்டிய மருந்தாகி விட்டது. காரணம், அதன்…
Category: பொது
மேலைநாட்டு பெண்கள் பெற்றிருப்பது சுதந்திரமா?
o பெண்களும் மதங்களும் o பெண்களின் விடுதலை இயக்கங்கள் வளர்ந்த வரலாறு சமீபத்தில் இணையச் செய்தி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில் இஸ்லாமும் மற்ற மதங்களைப் போலவே பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது என்று மக்கள் கலை இலக்கியக் குழவைச் சேர்ந்த நண்பர்கள் விமர்சனம் எழுதி இருந்தார்கள். அவர்களது விமர்சனத்திற்குப் பதில் கூறுமுகமாகவும், இஸ்லாத்தில் உள்ள பெண்களின் உரிமைகள் பற்றியும், அந்த உரிமைகள் யாவும் அவர்கள் கேட்டுப் பெற்றதோ அல்லது போராடிப் பெற்றதோ அல்ல என்றும், ஆனால் 1400…