[ அருமையான கட்டுரை ] அறிவைத் தேடுவோம்! மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி இறைவனின் படைப்புகளில் எத்தனை விதமான அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிகழ்கின்றன. விலங்குகள், பறவைகளை ஐந்தறிவாகவும், மனிதனை பகுத்தறிவென்னும் ஓர் அறிவை அதிகப்படுத்தி ஆறறிவு படைப்பாகவும் படைத்துள்ள இறைவன் அறிவையும், அனுபவத்தையும் தேடும் விஷயத்தில் மட்டும் மனிதனை விட விலங்குகள், பறவைகளை சிறப்பித்தே வைத்திருக்கிறான். மனிதன் பிறந்து வளர்ந்து வரும் பருவத்திலேதான் கொஞ்சம், கொஞ்சமாய் அறிவையும், அனுபவத்தையும் பெறுகிறான். அதுவும்…
Category: சமூக அக்கரை
சிங்கார(ரி)ச் சென்னை!!!
[ நாடு முன்னேற வேண்டும் என்பது முக்கியம் தான். ஆனால், எவற்றிலெல்லாம் முன்னேற்றம் வேண்டும், எவற்றிலெல்லாம் சீர்திருத்தம் வேண்டும் என்ற தெளிவும் திட்டமும் நாட்டை ஆள்வோரிடம் வேண்டும். இல்லையேல், சிங்கார சென்னை என்பது எதிர்காலத்தில் சிங்காரிகளின் சென்னை என்ற பெயரைப் பெற வைத்துவிடும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பல்வேறு வடிவங்களில் பரவி வரும் விபச்சாரத்தை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறியாவிடில் ‘குடி’மகன்களுக்கு ”TASMAC’ சாராயத்தை அரசே விற்க தொடங்கியது போல் விபச்சார ஏரியாக்களையும் அரசே ஆரம்பிக்க வேண்டிய…
இடம் பொருள் ஏவல்
டாடாவின் டைட்டானியம் ஆலை முதல் ஹெல்மெட் சட்டம் வரை அனைத்திலும் அரசு மக்களின் மனோநிலையை புரிந்தே செயல்பட்டது என்று சொல்வது மிகையல்ல, ஹெல்மெட் விவகாரத்தில் கட்டாயமாக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல, நீதிமன்ற தீர்ப்புக்கு பணிய வேண்டிய (அ) கட்டுபடவேண்டிய நிர்பந்தம் தான். சட்டம் என்பது மக்களுக்குதான். மக்கள் சட்டத்துக்கு அல்ல என்பதை ஒவ்வொரு அரசும் புரிந்து நடந்து கொண்டாலே அரசு – மக்கள் என்ற இணைப்பு எப்போதும் உடையாமல் பாதுகாக்கலாம். இது அரசுக்கு மட்டும் தானா…
அடையாளங்களை இழப்பது ஆபத்து!
அடையாளங்களை இழப்பது ஆபத்து! [ ஒருவரின் விருப்பு, வெறுப்புகள், ஆர்வங்கள், ஈர்ப்புகள் ஆகியவற்றைக் கொண்டுதான் ஒருவருடைய ஆளுமை எடை போடப்படுகின்றது. அவற்றைக் கொண்டுதான் ஒருவர் அடையாளம் காணப்படுகின்றார்.] இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பிற சமூகத்தைப் பின்பற்றி நடக்கின்றவர் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராகி விடுகின்றார். நூல்: அஹ்மத், அபூதாவூத். பல்வேறு சமூகங்கள், இனங்கள், பண்பாடுகள், மதங்களைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து வாழும் போது ஒரு முஸ்லிம் எப்படி…
எழுந்து கொண்டிருக்கும் பள்ளிவாசல்களும், விழுந்து கொண்டிருக்கும் பள்ளிக்கூடங்களும்!
எழுந்து கொண்டிருக்கும் பள்ளிவாசல்களும், விழுந்து கொண்டிருக்கும் பள்ளிக்கூடங்களும்! அஜீஸ் நிஸாருத்தீன் பள்ளிவாசல்கள் பளிங்குக் கற்களால் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றன. பலமாடிக்கட்டிடங்களாய் விண்ணை எட்ட வளர்ந்து கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களின் வளர்ச்சி முஸ்லிம்கள் மனதில் ஆனந்தத்தை அள்ளி விதைத்துக் கொண்டிருக்கின்றது. தனவந்தர்கள் பள்ளிவாசல்கள் கட்ட வாரி வாரி வழங்குகிறார்கள். பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு வெளிநாட்டு பணம் கூட கோடிக்கணக்கில் வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது. தெருவிற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அல்லது மூன்று பள்ளிவாசல்கள் என்றும் முளைத்துக் கொண்டிருக்கின்றன். இது நகரத்தின் நிலை. கிராமமப் புறங்களிலும்…
யாரை அடிப்பது?
யாரை அடிப்பது? சுஜாதாவின் ஒரு நாவலில் நடுத்தர வயதுப் பெண்ணை ஒரு டீன் ஏஜ் சிறுவன் பாலியல் வன்முறை செய்கிறான். அவன் பிடிபட்டபிறகு அரசியல் செல்வாக்கினால் விடுதலையாகிறான். இதை சகித்துக் கொள்ள முடியாத போலீஸ் அதிகாரி, அந்தப் பெண்ணை அழைத்து லாக்கப்பில் இருக்கும் சிறுவனை விடுவிப்பதற்கு முன்னால் அவள் கையால் நாலு செருப்படியாவது தரும்படி சொல்கிறார். லாக்கப்புக்குள் சென்று அவனைப் பார்க்கும் அந்தப் பெண், அவனை அடிக்காமல் திரும்பி வந்துவிடுகிறார். ஏன் அடிக்கவில்லை என்று அதிகாரி கேட்கிறார்….
அழைப்புப் பணியாளர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
அழைப்புப் பணியாளர்களுக்கு அன்பான வேண்டுகோள்! [ உண்மையான இஸ்லாமை மக்களிடம் சொன்னாலே மக்கள் சாரை சாரையாக வருவார்கள். அதன் ஏகத்துவ இறைக் கொள்கை ஒன்றே போதும். “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” வை பிரச்சாரம் செய்தாலே நமக்கு போதுமானது. அதற்கு இருக்கும் வசீகரத் தன்மை வேறு எந்த வாக்கியத்திற்கும் கிடையாது.] நமது கோளாறு அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்து லில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி…