நான்! நானே தான்! மவ்லவி, ஹாஃபிஸ், எம்.எஸ்.மீரான் ஃபைஜி ‘நான்’ என்னும் சொல் அகந்தையின் அடையாளம்! ‘நான் என்பது பெருமையின் பிறப்பிடம்! ‘நான்’ ஆணவத்தின் அறிகுறி! ‘நான்’ இறைவனை மறந்தவனின் தேசிய கீதம்! ‘நான்’ தலை, கால் புரியாத பித்துப் பிடித்தவனின் பிதற்றல்! ‘நான் செய்தேன், நான் சொன்னேன், நான் சம்பாதித்தேன் என தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கூறும் கூற்று தன்னலத்தின் வெளிப்பாடு. அது சுயநலத்தின் முகவரி!…
Category: குண நலன்கள்
மறதி ஒரு வெகுமதி!
மறதி ஒரு வெகுமதி! முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. மறதி என்பது மனித இயல்பாகும். அதனால்தான், “மக்களுள் முதலாமவர் மறதியில் முதல்வர்” என்று ஓர் அரபுப் பழமொழி உண்டு. முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தாம் அல்லாஹ்வின் கட்டளையை மறந்து, தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து உண்டுவிட்டார். அதனால்தான் அவர் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது வரலாறு. ஆக, மறதி என்பது முதல் மனிதரிடமிருந்தே தொடங்குகிறது என்பதை அறியும்போது மறதி…
மனிதாபிமானம் ஓர் இபாதத்
மனிதாபிமானம் ஓர் இபாதத் [ ஒரு மனிதன் மறுமையை மிக ஆழமாக விசுவாசிக்கின்றான் என்றால் அவனது உள்ளத்திலே இரக்க உணர்வு வரும். நீதி வரும். சமூகத்திலே பாதிக்கப்பட்டவர்களையும் ஆளாக்க வேண்டும், அவர்களையும் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை வரும். அவர்களை கவனிக்க வேண்டும், அவர்களுக்குரிய உரிமைகளைக் கொடுக்க வெண்டும் என்றெல்லாம் சிந்திக்கின்ற அந்தத் தன்மைகளை மறுமை பற்றிய நம்பிக்கை உருவாக்குகின்றது. தொழுகையை நிறைவேற்றிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அல்லாஹுத்தஆலா அற்புதமாக கூறுகின்றான், வாழ்க்கையை நீங்கள் கூறுபோட்டு…
தூய உள்ளம் கொண்டவர்களாக வாழ்வதே மேல்!
தூய உள்ளம் கொண்டவர்களாக வாழ்வதே மேல்! rasminmisc “தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது.” இறைவன் மனிதனை பலவிதமான குணங்களும் கொண்டவனாக படைத்திருக்கின்றான். நல்ல குணங்களுடன் சிறப்பாக வாழும் சிறந்த மனிதர்கள் இருப்பதைப் போல, பலவிதமான தீய குணங்களுடன் தீமைகளுடன் இணைந்தே வாழும் பல கெட்ட மனிதர்களும் இவ்வுலகில் வாழத்தான் செய்கின்றார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்தல், நல்ல முறையில் பேசிப்…
நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம்
நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம் நன்றியுணர்வை வெளிப்படுத்துகிற பண்பும், குணமும் அது இறைவனின் நல்லடியார்களின் சிறப்பான இயல்புகளாகும். வானவர்களின் வணக்கமாகும். நபிமார்களின் அடையாளமாகும். ஒட்டு மொத்தத்தில் அது சுவனவாசிகளின் தன்மையாகும். நன்றியுணர்வோடு நடக்கின்ற ஒரு மனிதன் இப் பூமியில் மதிக்கப்படுகின்றான், பாராட்டப்படுகின்றான், வாழ்த்துக்கள் பலதிற்கு சொந்தக்காரனாகின்றான். நன்றியுணர்வு இல்லாத ஒரு மனிதன் அவன் வையகத்தில் உள்ளவரை இகழப்படுகின்றான், மக்களால் வெறுக்கப்படுகின்றான், சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்றான். காரணம் ஆறறிவு இல்லாத மிருகங்களும், பறவைகளும் கூட அந்த இயல்பை வெளிப்படுத்துவதால்.. இந்த நன்றியுணர்வை படைத்த…
நாம் எந்த மரத்தின் கிளையைப் பிடிப்போம்?
நாம் எந்த மரத்தின் கிளையைப் பிடிப்போம்? ஒரு ஊரில் ஈரோட்டு ஜமுக்காளத்தில் வடி கட்டிய கஞ்சன் ஒருவன் இருந்தான். இவனது முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்தில் இருந்து கணிசமான வருமானம் வந்தும், அவற்றில் இருந்து செலவு செய்து தனது சொந்தத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள மாட்டான். இல்லாதோர்க்கு ஈய மாட்டான். இவனது இந்த கருமித்தனம் ஊர் அறிந்த கதை. இவனது கஞ்சத்தனம், இமயமலையின் கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு ஈடானதாக இருந்தது. தன்னிடம் இருக்கும் பணத்தை ஒரு மண்…
நேசம்
நேசம் முஹம்மத் ஜுபைர் அல்புஹாரி உண்மையில் சிலர் மீது அன்பு ஏற்படுவது இயற்கையானது அதற்கு எந்த காரணமும் தேவையில்லை. ஒரு தாய், தந்தை தன் குழந்தை மீது கொண்டுள்ள நேசம்! குழந்தைகள் தாய், தந்தை மீது கொண்டுள்ள நேசம்! கணவன் மனைவிக்கு இடையே உள்ள நேசம்! சகோதரன் சகோதரி ஆகியருக்கிடையே உள்ள நேசம்! உறவினர் மீது ஏற்படும் நேசம்! இன்னும் சொல்லப்போனால் சொந்த ஊர், சொந்த நாடு மீதுள்ள நேசம்! இவைகளுக்கெல்லாம்…
படிப்பினைத் தரும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம்!
படிப்பினைத் தரும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம்! கோபம் என்றதும் திருக்குர்ஆனைப் புரட்டக் கூடியவர்களுக்கு யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சம்பவம் நினைவுக்கு வரும். யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாயத்து மக்கள் சத்தியத்தை ஏற்க மறுத்து இறுதியாக அவர்கள்அழிக்கப்படும் நேரம் நெருங்கியதும் அவர்களை விட்டு யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விலகிச் சென்று விடுகிறார்கள். சிறிது நாட்கள் கழிந்து நகருக்குள் திரும்பிவந்து பார்த்தபொழுது அவர்களில் யாரும் அழிக்கப்படாததுக் கண்டு இறைவன் மீது கோபம் ஏற்பட்டுவிடுகிறது, யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு. இறைவன்…
“கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்!”
“கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்!” “மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்”. என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள் அறிவித்தார்கள். (நூல்: புகாரி 6114) கோபத்தை கட்டுப் படுத்துபவர்களை சிறந்த வீரன் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இன்றுக் கோபத்தைக் காட்டுவதே வீரத்தின் வெளிப்பாடு என்று…
ஒழுக்கத்தை இழந்தவனே அநாதை
ஒழுக்கத்தை இழந்தவனே அநாதை அ. செய்யது அலி மஸ்லஹி ஃபாஜில் அநாதை என்பதற்கு தமிழ் அகராதியில் வரும் பொருள். திக்கற்றவன், ஆதரவற்றவன் ஆகும். ‘ஆதரிப்பார் அற்றவன் அநாதை’ ‘ஆதரிக்கும் பெற்றோரை இழப்பவன் அனாதை ஆவான்’ என இஸ்லாம் கூறுகிறது. ஒரு குழந்தை தன் பெற்றோரின் அரவணைப்பிலும், ஆதரவிலும், அன்பிலும், அக்கறையிலும், பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் வளர்கிறது. பெற்றோரில் இருவரோ, அல்லது ஒருவரோ தவறிவிட்டால், இருவரையோ, அல்லது ஒருவரையோ இழந்துவிட்ட குழந்தை ‘அனாதை குழந்தை’…