இஸ்லாம் கூறும் மனித நேயம் இஸ்லாம் கூறும் மனித நேயம் மனிதனிடத்தில் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் மிக முக்கியமான பண்பு மனித நேயம். மனித நேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும். தனக்கு விரும்பும் நன்மைகளை பிறருக்கு விரும்புவதும், தான் விரும்பாததை பிறருக்கும் விரும்பாமல் இருப்பதும் மனித நேயமாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாகக் கண்டு வருகிறோம்….
Category: குண நலன்கள்
இயலாமையைத் தாண்டித் தன்னைத்தானே விரும்புதல்
இயலாமையைத் தாண்டித் தன்னைத்தானே விரும்புதல் ஒருவர் தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து வித்தியாசமான பிரதிபலிப்பை விரும்பும் நேரங்கள் உள்ளன: நான் உயரமாக, ஒல்லியாக, இன்னும் வெள்ளையாக இருக்கவேண்டும், எனது முடி அடர்த்தியாக, கண்கள் பெரிதாக இருந்திருக்க வேண்டுமென விரும்புகிறேன். இது பொதுவான எண்ணம்தான். நம்மில் பலர் இதைக் கடந்திருப்போம், குறிப்பாக வளரும் ஆண்டுகளில். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உணர்வு இன்னும் கூட்டப்படுகிறது. முழுமையற்ற உணர்வு, உடைந்த உணர்வு மற்றும் சில நிலைகளில் “சமூகத்தின் அழகு வரையறையில்” கட்டமைப்புநிலையில்…
நான்கு வகையான மனிதர்கள்
நான்கு வகையான மனிதர்கள் 1. வணக்கசாலிகள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை 2. வணக்கசாலிகள், சிரமமான வாழ்க்கை 3. பாவம்செய்பவர்; மகிழ்ச்சிகரமான வாழ்க்கை 4. பாவம் செய்பவர்; சிரமமான வாழ்க்கை
இரக்கம்
இரக்கம் எந்த ஒரு நபருடைய வாழ்வும் இந்த ஒன்று இல்லாமல் கடந்துவிட முடியாது. எந்த ஒரு சாதாரண மனிதனும், என்ன தான் கல் நெஞ்சம் கொண்டவனாக இருந்தாலும் ஏதேனும் ஒரு சூழ்நிலையில், வாழ்வின் ஏதேனும் ஒரு பகுதியில் இதன் மீதேனும் அல்லது யார் மீதேனும் இரக்கம் கொண்டிருப்பான். மனிதர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள் தான். ஆனால் வல்ல ரஹ்மான் அல்லாஹு தஆலா يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَاٰمِنُوْا بِرَسُوْلِهٖ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِنْ رَّحْمَتِهٖ وَيَجْعَلْ…
பொறாமை எனும் போதை!
பொறாமை எனும் போதை! மனிதன் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் அவன் படைக்கப்பட்ட காலத்திஇருந்த தீய குணங்கள் இன்று வரை மாறாமல் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. அதிலேயும் மிகுந்த நாசத்தை விளைவிக்கக் கூடிய ஒரு பண்பு தான் பொறாமை. இது தொன்றுதொட்டு நமது முன்னோர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மதங்கள் மொழிகள் காலங்கள் வேறுபாடு கிடையாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் சென்று சமுதாயத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொறாமை வெறுப்பு என்ற நோய் உங்களுக்கும்…
தேவையற்றவைகளை விட்டுவிடுவது இஸ்லாமின் அழகிய பண்பாகும்
தேவையற்றவைகளை விட்டுவிடுவது இஸ்லாமின் அழகிய பண்பாகும் இஸ்லாம் மனித குலத்திற்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சத்திய மார்க்கமாகும். இம்மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல! மாறாக உலகில் வாழும் அனைத்து மக்களுக்குமானதாகும். இதன்படி உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும், நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றது. இதில் யாரும் விதிவிலக்கு இல்லை! என்றாலும் பெருவாரியான மக்கள் தங்களின் மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டு, வேதனைக்குரிய வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன! அக்காரணங்களை கண்டறிந்து கலைந்து விட்டோமெனில் அனைவரும் மகிழ்ச்சியான, பொருளுள்ள…
வானை விஷமாக்கும் வதந்திகள்
வானை விஷமாக்கும் வதந்திகள் இன்று இ-மெயில்களிலும், எஸ்.எம்.எஸ்.-களிலும் பொழிகின்ற வதந்தி மழை – வசந்த மழையை மிஞ்சி விட்டது. அதனால் வானம் விஷப்பட்டு விட்டது என்று தெளிவாகச் சொல்லலாம். அரிவாள் முதல் அணு சக்தி வரை உள்ள ஆற்றல்கள் அனைத்தும் ஆக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவது போன்று அழிவிற்கும் பயன்படுத்தப் படுகின்றன. இரண்டில் எது அதிகம் என்று பார்த்தால், அழிவிற்குப் பயன்படுவது தான் அதிகம் என்று அடித்துச் சொல்லலாம். அது போன்று தான் இந்த அதி நவீன தகவல் தொடர்பு…
விஷப்பார்வை
விஷப்பார்வை ஹாஃபிஸ் S.E.M. ஷெய்கப்துல் காதர் மிஸ்பாஹி ‘மேலும் (நபியே) நிராகரிப்போர் (குர்ஆனுயை) உபதேசத்தைக் கேட்கும் பொழுது, அவர்கள் தங்களுடைய பார்வையைக் கொண்டே உம்மை வீழ்த்திவிட நெருங்குகின்றனர். (உம்மைப்பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர் (தாம்) என்றும் கூறுகின்றனர்.’ (அல்குர்ஆன் 68:51) பிறரின் வளர்ச்சியையும் அவர் பெற்ற புகழையும் எண்ணி ஏக்கப் பெருமூச்சு விட்டு, வயிறெரியும் துர்க்குணம் கொண்டோர், குறைப்பிரசவத்தில் வெளிவந்த பிண்டங்கள். மனித சமுதாயத்தில் செல்லறிக்கும் புற்றீசல்கள், நிம்மதியை எங்கோ தொலைத்துவிட்ட…
நம்மில் எத்தனைப் பேருக்கு இந்த வரலாறு தெ(பு)ரியும்?
நம்மில் எத்தனைப் பேருக்கு இந்த வரலாறு தெ(பு)ரியும்? அன்னையின் ரோஷம்…..! காதிர் மீரான் மஸ்லஹி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓரு துணைவியரின் இல்லத்தில் அன்று இருந்து கொண்டிருக்கின்றர்கள். அப்போது மற்றொரு மனைவியின் இல்லத்திலிருந்து ஓரு தட்டைப் பாத்திரம் வருகின்றது. அதிலே சுவை மிக்க உணவும் இருந்தது. அந்த அன்னை தமது வீட்டில் சமைத்திருந்த உணவை நபி ஸல்லல்லாஹு…
இதற்கெல்லாம் வெட்கப்படக் கூடாது…!
இதற்கெல்லாம் வெட்கப்படக் கூடாது…! கல்வியைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது பொதுவாகவே எந்த ஒன்றையும் கற்றுக் கொள்வதற்கு வெட்கம் தடையாக இருக்கவே கூடாது. கல்வியைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கப்படுகிற ஒருவனால் ஒருக்காலும் முன்னேறவே முடியாது. அதேபோன்று எனக்குத்தான் எல்லாமே தெரியும் என்று எண்ணுபவன் ஒருக்காலும் முன்னேறவே முடியாது. நம்மில் பலர் சிறுவயதில் குர்ஆனை நன்றாக அரபியில் ஓதக் கற்றிருப்பார்கள். நாளடைவில் அறவே ஓதத் தெரியாதளவிற்கு மறந்தவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இவர்கள் நம்மை யாரும்…