பூமியைப் போன்ற பொறுமை! மிகச்சிறந்த கட்டுரை கே.ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ [ கோபத்தின் மூலம், நன்மையா? தீமையா? என்று தனிமையில் நாம் சிந்தித்துப் பார்த்தால்… நன்மையை விட தீமையே நிறைந்து காணப்படும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், ”ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால்; ஏளனம் செய்தால்; குறைகண்டால்; பலருக்கு மத்தியில் மானபங்கப்படுத்தினால்; அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ அவமானப்படுத்தவோ வேண்டாம்! ஏனென்றால் அவன்…
Category: குண நலன்கள்
கம்யுனிகேஷன் – டாக்டர் பஜிலா ஆசாத்
கம்யுனிகேஷன் டாக்டர் பஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் நான் சொல்வதை யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை என்பதே இன்று பலரின் ஆதங்கமாக இருக்கிறது. பெரும்பாலும் பலரும் நாங்கள் என்ன சொன்னாலுமே சண்டை சச்சரவாக போய் விடுகிறது. ஒன்றுமில்லாத விஷயங்கள் கூட பூதாகரமான பிரச்னையாக போய் விடுகிறது என்று வருந்துவார்கள். இப்படி எதை சொன்னாலும் தவறாக போனால் என்ன தான் செய்வது, எப்படி தான் சொல்லி புரிய வைப்பது என்று இயலாமையில்…
சந்தர்ப்பங்கள்-Dr.ஃபஜிலா ஆசாத்
சந்தர்ப்பங்கள் dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் ஏன் அதிகம் படித்தோம். ஏன் இத்தனை திறமைகளை வளர்த்து கொண்டோம் என்றிருக்கிறதுஸ. திறமைக்கும் படிப்புக்கும் ஏற்ற வேலையும் கிடைக்காமல், கிடைக்கும் வேலையை காம்ப்ராமிஸ்டாக இறங்கி பார்க்கவும் முடியாமல் வேலையில்லா பட்டதாரி என்ற புதிய பட்டத்தோடு எங்கிருந்து மகிழ்ச்சியாக இருப்பது இப்படி புலம்புவார்கள் சிலர். கண்ணாடி முன்னால் நின்று தன்னையே பார்த்து படபடக்கும் அழகிய பறவையால் சிறகுகள் விரித்து எல்லையில்லா வானத்திலே பறக்க…
மாணவர்கள் தரும் விபரீத பாடம் – Dr. ஃபஜிலா ஆசாத்
மாணவர்கள் தரும் விபரீத பாடம் Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் [ உலகிலேயே அதிக அளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக முன்னிலை வகிக்கிறது. இங்கு 2011-2015க்குள் சுமார் 40,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்.] உங்கள் குழந்தைகள் உங்களிடமிருந்து வந்தவர்கள் அல்ல, உங்கள் மூலமாக வந்தவர்கள். அவர்களுக்கு நீங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் உங்கள் அன்பை அள்ளிக் கொடுக்கலாம். ஆனால் உங்கள் எண்ணங்களை திணித்து விடாதீர்கள்…
மௌனம் பேசும் – Dr. ஃபஜிலா ஆசாத்
மௌனம் பேசும் Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் [ உணர்ச்சி வசப்படுகிறவர்களால் உண்மையை உணர முடியாது. விழிப்புணர்ச்சியோடு செயல்பட இயலாது. எந்த சூழலிலும் தன் உணர்ச்சிகளை தன் கைவசம் வைத்துக் கொள்கிறவர்களால் மட்டுமே எதையும் திட்டமிட்டபடி செய்ய முடியும்.] பேச வேண்டிய நேரத்திலே மௌனமாக இருப்பதும் தவறு. மௌனமாக இருக்க வேண்டிய நேரத்திலே பேசுவதும் தவறு என்பார்கள். மௌனமாக இருக்க வேண்டிய நேரம் என்றால், எந்த நேரத்திலும் நியாயத்தை…
கட்டுப்பாடுகளே அமைதிக்கான அடித்தளம்
கட்டுப்பாடுகளே அமைதிக்கான அடித்தளம் ஒரு வெள்ளைக் காகிதத்தில் கடிதம் அல்லது கட்டுரை எழுத முற்படுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். முதலில் கடிதத்தின் எல்லைகளை வரையறுக்க கீழும் பக்கவாட்டிலும் மார்ஜின் போட்டு ஒழுங்குபடுத்துவோம். எழுதத் துவங்கும்போது கடித வரிகள் ஒன்றன்கீழ் ஒன்று சீராக இருக்க ரூல் போடுகிறோம். எழுத நினைப்பதை வாக்கியங்களாகப் பிரிக்கிறோம். வார்த்தைகளுக்கிடையே ஒரே மாதிரியான ஸ்பேஸ் விட்டு வரிகளை எழுதுகிறோம். ஒரு கட்டுரை எழுத நினைத்தால், முன்னுரை, முக்கிய உரை, முடிவுரை என தரம் பிரித்து பத்திகள்…
வேண்டாத கனவுகள் -Dr.ஃபஜிலா ஆசாத்
வேண்டாத கனவுகள் dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் நிச்சயம் இனிமையான கனவுகளும் கடுமையான கனவுகளும் வெவ்வேறு தருணங்களில் கண்டிருப்பீர்கள். அந்த நேரங்களில் உங்கள் மன நிலை மற்றும் உடலின் செயல்பாடு எப்படி இருந்தது என்று சற்றே யோசித்துப் பாருங்கள். நல்ல கனவுகள் காணும் போது மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க உடல் இலகுவாக முகம் மலர்ந்து எழுந்திருந்திருப்பீர்கள். அதே நேரம் கண்டது ஒரு எதிர்மறையான கனவாக இருந்திருந்தால் மனம்…
மனக் காயம் – Dr. ஃபஜிலா ஆசாத்
மனக் காயம் Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் யாராவது உங்கள் கண் முன்னால் அடி பட்டு விழுந்தால் என்ன செய்வீர்கள்? உடனே ஓடிச் சென்று அடிபட்டவரை தூக்கி அவரது காயத்துக்கு வேண்டிய முதலுதவி செய்து, பின் தேவையான சிகிச்சை எடுக்கச் சொல்லி அனுப்புவீர்கள் இல்லையா. உங்களுக்கு நேர்ந்தாலும் இதைத்தானே செய்வீர்கள். அடிபட்ட காயம் ஆறும் வரை தேவையான ஓய்வு, மாத்திரை மருந்து என்று எடுத்துக் கொள்வீர்கள். அடிபட்ட இடத்தில்…
இணைந்திருங்கள் – Dr. ஃபஜிலா ஆசாத்
இணைந்திருங்கள் Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் [ பெரும்பாலும் யாரோ ஒருவரை சீராடுவதற்கும் யாரோ சிலரோடு போராடுவதற்கும் மட்டுமே ஒன்று சேர பழகி இருக்கிறோம். வெற்றி என்பது மகிழ்ச்சி என்றும், ஒருவனின் தோல்வி மற்றவனின் வெற்றி என்பதும் விளையாட்டின் விதிகளாக இருக்கலாம். வாழ்வின் விதி வேறு. அது உனக்கும் எனக்குமாக சேர்ந்து பகிர்ந்து உண்பதையே மகிழ்ச்சி என்கின்றது. விற்பவனின் இலாபம் வாங்குபவனின் ஆதாயம் எனும் win-win கொள்கையே வாழ்வின்…
மன அகராதி – Dr. ஃபஜிலா ஆசாத்
மன அகராதி Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் நம்மை அதிகம் அறியாதவர்களை விட நமக்கு மிக வேண்டியவர்களின் செயல்கள் தானே நம்மை அதிகம் உணர்ச்சி வசப்பட செய்கிறது. அதிலும் நன்றாக பழகக் கூடியவர்கள் கொஞ்சம் பாராமுகமாக இருந்தால் கூட வருத்தம், அவமானம் என மனம் வேதனையில் தவிக்கிறதே இது பலரின் புலம்பல். உண்மையில் கோபம், வருத்தம், கவலை, பயம், அவமானம், குற்ற உணர்ச்சி என எந்த உணர்ச்சியும் வெளியிலிருந்து…