எங்கிருந்து வந்தேன்? எனக்குத் தெரியாது! மவ்லவீ, அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் நளீமி எனக்குத் தெரியாது நான் வந்தேன் எங்கிருந்து என்பது எனக்குத் தெரியாது ஆனாலும் வந்தேன் என் முன்னால் ஒரு பாதையைக் கண்டேன் அதில் நடக்கலானேன் நான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான் நடந்து கொண்டே இருப்பேன். எப்படி வந்தேன்? எனது பாதையை எப்படி கண்டேன்? எனக்குத் தெரியாது.
Category: கவிதைகள்
அன்று இவ்வுலகில் உனக்கு இறுதி நாள்…
அன்று நீ…! அன்று இவ்வுலகில் உனக்கு இறுதி நாள் ! அதுதான் உன் மரணநாள் அன்று நீ நினைத்திருக்கமாட்டாய் உன் முந்திய வேளை உணவு உனக்கு கடைசியென்று! அன்று நீ கண்மூடும் முன் பார்த்த பார்வையும் உன் இறுதிப் பார்வையென எண்ணியிருக்கமாட்டாய்! அன்று உன் உறவினர்களும் நண்பர்களும் அழுதாலும் உன்னைக் காப்பாற்ற யாராலும் இயலாது!
இல்லாளே இனியவளே!
இல்லாளே இனியவளே! மனதினில் பூத்த மல்லிகை நீ மாலையில் மனக்கும் மலர்மாலை நீ இரவில் மயங்கும் அல்லி நீ இதயத்தில் ஒளிரும் இன்ப வாழ்வு நீ வாழும் காலம் முதல் வாழ்க்கை துணை நீ வாழ்க்கை எல்லாம் உன்னோடுதான் உயிரோடு கலந்த உறவு நீ உறவாடு! கனிந்த இதயத்தோடு
வாழ்க்கையின் இரகசியம்!
வாழ்க்கையின் இரகசியம்! நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்! யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்! பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
கவிதைக்கு கருத்து முக்கியம்
கரீம்கனி வசை, திட்டு, புகழ், அழகியல் பாடுதல் சாதாரண விஷயங்கள். அவை கவிதையாகாது. அல்லாஹ் குழந்தையை பிறக்க வைக்கிறான். கணவன் இல்லாமலேயே கரு உருவாக்க தன்னால் முடியும் என்று உலகுக்கு நிரூபித்துக் காட்டினான். நேற்றுவரை வெறுமனே தெரிந்த நிலத்தில் இன்று செடி, பயிர், மரம் வளர வைக்கிறான். பட்டுப்போன மரத்தைத் துளிர்க்க வைக்கிறான். ஏதுமில்லாத மரத்தில் எண்ணற்ற காய்கள், பழங்கள் வெளிக்கொணர்கிறான். இது அல்லாஹ் தன் சக்தியால் உருவாக்கும் படைப்பாற்றல். நேரடியாக உணரக்கூடியவை. நேரடியாக உணரமுடியாத ஒன்றை…
அம்மா என்றொரு அழகான தேவதை
அம்மா என்றொரு அழகான தேவதை நீ தான் எனக்கு முதல் சொந்தம் உலகில் நீ சொல்லி தெரிந்து கொண்டேன் பின்னாளில் மிச்சம் உன்னிடம் நான் பெற்ற உயிர் மூச்சு ஒவ்வொன்றும் எனைவிட்டுப் போகாதம்மா உயிர் உள்ளவரைக்கும் பாலூட்டி சோறூட்டி பாசமாய் வளர்த்தவளே தாலாட்டி சீராட்டி தாங்கி வளர்த்தவளே அன்பாய் ஆதரவாய் அணைத்து வளர்த்தவளே பண்பாய் பாசமாய் பார்த்து வளர்த்தவளே கத்தி அழுது தொண்டை வற்றி போனாலும் கதைக்க முடியாமல் ஏங்கித் தவித்தாலும் உன்னை கண்டுவிட்டால்…
அழகில்லை…. இது அழகில்லை!
அழகில்லை…. இது அழகில்லை! MUST READ 1. ஏழைகளுக்கு பெருமை அழகில்லை 2. உலமாக்களுக்கு பேராசை அழகில்லை 3. அரசர்களுக்கு அவசரம் அழகில்லை 4. சீமான்களுக்கு கஞ்சத்தனம் அழகில்லை 5. மேதைகளுக்கு மாண்பற்ற செயல் அழகில்லை 6. உயர் வம்சத்தினருக்கு வஞ்சிப்பது அழகில்லை 7. கணவனுக்கு சந்தேகம் அழகில்லை.
எனக்குப் பிடிக்கும்…! உங்களுக்கு….?
தாயின் முகம் பார்க்கப் பிடிக்கும் அவள் பொழியும் பாசம் பிடிக்கும் மனைவியின் கண்களை நேராக பார்த்துப்பேச பிடிக்கும் அவள் பேசுவதே கண்களால் என்றால் ரொம்ப பிடிக்கும் இதழ் பிரியாத புன்னகை பிடிக்கும் புன்னகையில் மறைந்திருக்கும் நிஜமான நேசம் பிடிக்கும் அதிர்ந்து பேசாத வார்த்தைகள் பிடிக்கும் வார்த்தைகளற்ற மெளனம் பிடிக்கும் அதிகாலையில் அவள் புரிந்திடும் காதல் பிடிக்கும் மழலையின் மொழி பிடிக்கும் பல சமயங்களில் குழந்தையாய் மாறிட பிடிக்கும்.
ஆளப் பிறந்த கூட்டமா? அடங்கி வாழப் பிறந்த கூட்டமா?
ஆளப் பிறந்த கூட்டமா? அடங்கி வாழப் பிறந்த கூட்டமா? ஆளப் பிறந்த கூட்டமா இல்லை அடங்கி வாழப் பிறந்த கூட்டமா? எழப் பிறந்த கூட்டமா இல்லை அழப் பிறந்த கூட்டமா? வாழப் பிறந்த கூட்டமா இல்லை வீழப் பிறந்த கூட்டமா? வேதத்தைப் பற்றிக் கொள்ளுங்கள் என்றான் இறைவன் இவர்கள் பேதத்தைப் பற்றிக் கொள்கிறாகள் மார்க்கத்தைப் பேணுங்கள் என்றால் மூர்க்கத்தைப் பேணுகிறார்கள் ஒட்டிக் கொண்டு வாழுங்கள் என்றால் வெட்டிக் கொண்டு சாகிறேன் என்கிறார்கள்
இல்லறக் காவியம்
ஃபாத்திமுத்து ஸித்தீக் மண்ணுக்கு மழையாய் உணவுக்கு உப்பாய் ஜாடிக்கு மூடியாய் ஜோடி சேரும் இல்லறத் தென்றலின் இதத்தில் மகரந்தங்கள் சங்கமித்து சந்தோஷிக்கும் உளம் மலர்ந்தது! கருத்து வேற்றுமை கற்களும் வாக்குவாத முட்களும் கணக்கற்றிருப்பினும் வாழ்க்கைப்பயண வண்டியை ஒன்றிணைத்து இழுக்கும் இரட்டை மாடுகள் விட்டுக்கொடுத்து ஓடுவதில் முரண்படலாகாது!