அர்த்தமுள்ள அரபிப் பொன்மொழிகள் (1) 01. லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ். 02. அறிவுத்துறை ஆயிரமானாலும் ஆண்டவன் ஒருவனே. 03. அவனவன் புத்திசாலித்தனத்தில் அவனவனை திருப்திப்பட வைத்த ஆண்டவனுக்கே புகழனைத்தும். 04. அறிவைத் தேடுபவனும் செல்வத்தைத் தேடுபவனும் திருப்திப்படமாட்டான். 05. அடிமையின் ஆசை பூர்த்தியானால் சுதந்திர மனிதனாவான். சுதந்திர மனிதனோ ஆசைகளுக்கு அடிமை. 06. அறிஞன் தான் பார்த்தைச் சொல்வான். அறிவுகெட்டவன் தான் கேட்டதைச் சொல்வான். 07. அதிக மிருதுவாய் இருந்தால் பிழிந்து விடுவார்கள். கடினமாய்…
Category: கவிதைகள்
அன்பு
அன்பு மெல்லிய உணர்வுக் கயிறு மனதில் அல்லியாய்ப் பூத்து ஆனந்திக்கும். அன்பினால் புன்னகை உதட்டில் வரும் கண்களில் கண்ணீர் வரும். உண்மை அன்பு எத்தனை திண்மைத் துன்பங்களையும் தாங்கும் வலிமையுடைத்து.
சிந்திக்க மட்டும்!
சிந்திக்க மட்டும்! நீடூர் பாபு பார்க்காத சொர்க்கத்தின் மீது.. யாருகுத்தான் ஆசையில்லை.. நம்பிக்கை கொள்ளாதவருக்கும்.. சிந்திக்கின்ற நேரத்தைவிட.. சீரழிகின்ற நேரம் அதிகம்..
ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம்
ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம் பஷீரா அன்பு மகளே… ‘ஒரு மௌன அழைப்பில்’ உன் ஆதங்கம் கண்டேன் என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு. உன்னை எனது வயிற்றிலேயே கொலை செய்த பாவிதான் நான் ஏன் இந்த முடிவு?
ஒரு கருவின் மௌன அழைப்பு
கவிதை [ ஹலோ, ஹலோ, அம்மா, நான் இங்கு வானத்தில் நடக்கிறேன், தேவதைகளுடன் விளையாடுகிறேன், நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன். இருந்தாலும் உங்கள் நினைவு என்னை வாட்டுகிறது. உங்களுடைய வயிற்றிலேயே என்னை எப்படி நீங்கள் கொலை செய்யலாம்? கத்தியும், கத்திரிக்கோலும் என்னுடைய உடலைக் கீறிச் சிதைத்தன. என்னை நீங்கள் துண்டு துண்டாக்கி விட்டீர்கள். என்னை யார் குளிப்பாட்டினார்கள்? குப்பைத்தொட்டியில் அல்லவா வீசிவிட்டார்கள்!]
தாயும் சேயும் கருவறையில்…
தாயும் சேயும் கருவறையில்… அகத்தே நீ உதைக்க புறத்தே காணாத பேரின்பம் உன்னை சுமக்கும் ஒவ்வொரு துளியும் எனை வென்று சிறை மீட்பேன் என் கண்மணியே உன்னை இவை தான் உலகமென்று புறம் காண மறுக்குதம்மா உள்ளம் அகத்தே உன் அரவணைப்பில் நாற்பது வாரமாய் தவமிருந்து எம் உள்ளம் படைத்தவளே
பின் தங்கிய சிறுமியிடமிருந்து…
ஃபஹீமாஜஹான் பின் தங்கிய சிறுமியிடமிருந்து… மேசைமீது உருண்டோடும் பென்சிலை “ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் கண்ணெறிந்து தோற்கிறேன் நான், பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!
இன்னுமா கைக்கூலி?
[ “மணம்புரிந்து கொள்பவர்கள் மாநபியின் கூட்டத்தார்” எனத்தெரிந்தும் பணம்கேட்போர் இழிதகைமை என்னசொல்ல? பெற்று வளர்ப்பதற்கும் பெண்மகளைக் காப்பதற்கும் உற்றதுயர் சுமந்தவரின் உள்ளம் சபிக்காதா? சன்மார்க்கச் சேயாகி சமுதாயத் தாயாகப் பொன்வாசல் அமைப்பவளைப் பொருள்பெற்றா மணப்பார்கள்?]
பழமொழிகள் 101
பழமொழிகள் 101 o அகத்தினழகு முகத்தில் தெரியும். o அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. o அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும். o அடியாத மாடு படியாது. o அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது. o அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். o அழுத பிள்ளைதான் பால் குடிக்கும். o அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும். o அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. o அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை…
துருதுருப்பான இளைஞனே!
பரபரப்பான உலகிலே துருதுருப்பான இளைஞரே! சுறு சுறுப்பாய் உழைக்கவே விறுவிறுப்பாய் வாருங்கள்! அவன் உயர்ந்தான் இவன் சரிந்தான் என்ற பேச்சே நமக்கெதற்கு?