நல்ல மனையாளின் நேசம்! அதிகாலை விடியலிலும் அஸ்தமன முடிவினிலும்அதிஅழகாய் மின்னுமந்த அடிவான வடிவினிலும்அதிமதுர அழகியலை அணிவித்த அரசனவன்அதிபதியாம் அருளாளன் அளித்திட்ட அன்பவள் ஆகாய வீதியிலே அலைபாயும் மழைமுகிலும்ஆதாய மேதுமின்றி அவனிதனில் பெய்வதுபோல்ஆராய ஏதுமின்றி அழுக்கில்லா அன்பாலேஆணான கணவர்க்கு அவதரித்த அழகவள்
Category: கவிதைகள்
வார்த்தைக்கு அஞ்சுவதோ? ஊத்தைக் காசுக்கு கெஞ்சுவதோ?
வார்த்தைக்கு அஞ்சுவதோ? ஊத்தைக் காசுக்கு கெஞ்சுவதோ? மனித உயிர்களை மயக்கி மலிவாக்கும்மந்தத்தன மனிதர் அவர்கள்!சுடர்முகம் கருத்த ஊர்கள்!போதை மருந்தால் வயிறு வளர்ப்போர்வார்த்தைக்கு அஞ்சலாமா?ஊத்தைக் காசுக்கு கெஞ்சலாமா?
வாழ்க்கையின் வலக்கரம்!
சொக்க வைக்கும் வாழ்க்கையின் வலக்கரம்! புன்னகைத்துக் கொண்டேபுலர்ந்தது பொன்நாள் – தன்னைஅலங்கரித்துத் தானேஅலர்ந்தது அந்நாள்! கண்டு வந்த கனவுகளெல்லாம்கைகூடிய சுபவேளைகல்யாணச் சேலையில் நீகற்கண்டு ஆலை துப்பட்டி முக்காட்டில்தூயவள் உன்முகம்மல்லிகைப் பூவுக்குள்ரோஜாப்பூப் புதையல்
….வெறுஞ்சடங்கில் குடியமர்த்தினோம்!
….வெறுஞ்சடங்கில் குடியமர்த்தினோம்! யோகப் பெருவாழ்வில்யுகம் யுகமாய்த் தேன் உண்டார்இமை மூடுதலும் ‘ஷரிஅத்’ தாய்க்கண்ட சாதனையாளரே வாருங்கள்! வாக்கில் ஒளி! வல்லமையில் துணிவுஎண்ணங்களில் ‘ஸாலிஹீன்’சமய வாழ்வில் சாதித்து முடித்துசோபித்த மனிதரே வாருங்கள்! வேராக வேண்டிய ‘புர்ஹான்’வெறுஞ்சடங்கில் குடியமர்த்தினார்மணக்க வந்த மாமறையைத்திறக்க மறுத்தோரே வாருங்கள்!
உயர் கலிமாவின் பொருள் உலகெங்கும் கேட்க ஓதுவோம் வாருங்கள்!
உயர் கலிமாவின் பொருள் உலகெங்கும் கேட்க ஓதுவோம் வாருங்கள்! ஓதுவோம் வாருங்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் உயர் கலிமாவின் பொருள் உலகெங்கும் கேட்க ஓதுவோம் வாருங்கள்! ஆதம் ஹவ்வா முதல் அன்றே அறிந்து விளம்பிய கீதம் போதகம் தன்மையில் யாரும் சாகசம் பேசிய போதும் மாற்றம் தவழும் இறைக் கருணை உண்டாகும் (ஓதுவோம்)
படைத்தவன் மேல் பயமுள்ள எவர்க்கும் தனிமை என்றொரு இருப்பே இல்லை!
சுத்திகரிப்புச் சோதனை! சுத்திகரிப்புச் சோதனைசெய்து கொண்டாயிற்றா? படைப்பின் இயல்பாம்இச்சைகள் தலைதூக்கபடைத்தவன் வழிகொண்டுஅடக்கியாண்டு விட்டீரா? சுயநலக் கிருமிகள்தொற்றுவது இயல்புபொதுநல தடுப்பூசியால்புத்துணர்வு பெற்றீரா?
தூயோனின் தூதரகம்..!
தூயோனின் தூதரகம்..! படைத்தவனை வணங்குவதற்காகபடைப்பினங்கள் ஒன்றுகூடும்பயிற்சி பாசறை! அல்லாஹ்வின் பெயர்தனை – ஐவேளை தினம் கூறி அனைவரையும் வரவேற்கும் அருளால் அலங்கரிக்கப்பட்டஆன்மிக ஆபரணம்… இபாதத்தோடு இணக்கத்தையும்சலாத்தோடு சகிப்புத்தன்மையும்மனித மனங்களில்இறுகக் கட்டும்இறைவனின் இல்லம்…!
ஷர்மிளா செய்யித் – தலை நீட்டிய தளிர்
ஷர்மிளா செய்யித் – தலை நீட்டிய தளிர் ஷர்மிளா செய்யித் இலங்கை மட்ட களப்பைச் சேர்ந்தவர். பெண் விழிப்புணர்வு சார்ந்த சமூகக் செயற்பாட்டளர் நவீன சிந்தனையுடைய பெண்கள் தங்கள் தளைகளை உணரும்போது அதற்கெதிரான அவர்களின் குரல் கவிதைகளில் பிரதிபலிக்கிறது. ‘விழுது’ என்ற கவிதையின் பகுதி: “நான் கட்டுக்களைத் தகர்ந்தெரிந்தவள் வரம்புகளைக் கடந்து தெரிக்கும் காற்று வானம் முழுவதும் பவனியாகும் மேகம் முற்றிலும் புதிய உணர்வுகளுடன் காலையில் இறங்கி நடக்கிறேன் சேலை முந்தானையைச் சரிப்படுத்துவதிலும் இழுத்து இழுத்து இகுப்பை…
நாம் யார்..?
நாம் யார்..? தொழ நேரமில்லை… ஓத நேரமில்லை.. பசியார நேரமில்லை.. படிக்க நேரமில்லை.. தூங்க நேரமில்லை.. பர பரவென்று வேலைக்காக பறந்து கொண்டிருக்கிறோம்… பணமுண்டு பையில்..! மதிய உணவு இல்லை கடையில்..! வேளைக்கு சாப்பிட நேரமில்லை… நிம்மதியாக துயில நேரமில்லை…! பணிவாக பேச நேரமில்லை….! படைத்தவனை நினைக்க நேரமில்லை.. பண்பாக இருக்க நேரமில்லை.. பழகியவர்களைப் பார்க்க நேரமில்லை..
குமர்கள் குப்பைகளா?
குமர்கள் குப்பைகளா? ஆலிம் கவிஞர் தேங்கை ஷரஃபுத்தீன் மிஸ்பாஹி குமர்கள் எல்லோரும் குப்பைகளா?கூளங்களா?படைத்தவனே! எம்மிறைவா!பாவையர்கள் ஆடவரின்‘பயிர்நிலம்’ என்றல்லவாபகர்ந்திட்டாய் உன்மறையில்;விவசாயிகள் தாமே விளைநிலங்களைவிலைக்கு வாங்கிடுவர்.திருமணச் சந்தையில்…விளைநிலங்கள் அல்லவா விவசாயிகளைவிலைக்கு வாங்கும் விபரீதம் நடக்கிறது!’