ரமளான் தூது முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ அல்ஹம்து லில்லாஹி அகிலத்துப் புகழெல்லாம் அன்பாளும் அருளாளும் ஈருலகை அரசாளும் !அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை ! அருள் தா என் நல்லவனே ! அதுதான் என்கோரிக்கை !சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு சன்மார்க்க நெறிதந்த சாந்தி நபி நாதருக்கு –ஸல்லல்லாஹு என்ற ஸலவாத்து மலர் தூவி சங்கையினை சமர்பித்து கவிதையினைப் பாடுகிறேன் !
Category: கவிதைகள்
விளக்கு ‘ரெடி’! விட்டில் பூச்சியா முஸ்லிம்?!
சாத்தானிய சட்டங்களை ஜீரணித்து முஸ்லீம் ஓதும் புதிய வேதம் . அது பிக்ஹுள் அகல்லியாத !! உயிர் வாழ்தல் என்ற என்ற காரணத்துக்காக இங்கு மார்க்கம் ‘மையத்து’ ஆக்கப்படும் !! அந்த ‘கபன்’ துணியை காட்டி இதோ இஸ்லாம் போர்த்திக்கொள் !! என தார்மீக விளக்கம் கொடுப்பார்கள் நம்ம அல்லக்கை ஆலிம்கள் !!! இந்த சமரசத்தை சரிகான வைக்கும் மதிகெட்ட பார்வையில் ….. தாக்கூதிய தர்பாரை நியாயம் கண்டு குப்ரின் சட்டங்களுக்கு இங்கு அல்ஹம்துலில்லாஹ்…
மசக்கை நான்…
மசக்கை நான்… உறுதியானதும்உறுத்துகிறது மனது;நெருக்கத்தில் நீ இல்லாதகுறையால் குடைந்தப்படிகுமட்டலுக்கான காரியத்தைஉன் காதில் கடிக்க;ஒளித்திருக்கும் வெட்கத்தைவெளிப்படுத்த -விழியோடுவிரலும் தேடியது கைப்பேசியை! சிரிப்பு வெடிக்கசிந்த வேண்டிய வார்த்தைகள்;அழுதுப் புடைத்து…உன் ஆறுதல் வார்த்தைஎன் காதில் வீழும்வரை!
கோழையாக வாழ்ந்திடாதே!
கோழையாக வாழ்ந்திடாதே! கோழையாக வாழ்ந்திடாதே எந்தகொடுமைக்கும் நீ பயந்திடாதேஏழைக்கும் கோபமுண்டு -என்பதையாரிடமும் மறந்தும் காட்டிடாதே பேச்சிலே பணிவாக இருந்தாலேபீதியில் நடுங்கிடுவார் பார்த்தாலேபிறப்பை ஏங்கி தவிக்காதே-வாழ்க்கைபெருகிடும் உனது உழைப்பாலே நேர்மையய் என்றும் மறக்காதேநெஞ்சிலே துணிவை இழக்காதேவஞ்சனையின்றி உழைத்தாலே -வாழ்க்கைவிஞ்சிடும் உனது அறத்தாலே
சுய நலம் கோடி!
சுய நலம் கோடி! பரந்து விரிந்த பூமியில் இன்னும் மனிதன் மனது விரியவில்லை தனக்கு மட்டும் என்ற எண்ணம் தன் தாழ்வு மனதில் கொள்ளை பலர் பருவ வயதில் தெரியும் குணத்தின் நிலை நன்கு புரியும் இன்னும் வளர்ந்து வந்த பிறகு சிலர் வறட்டு குணமும் அறியும்
காணாமல் போன காக்கைக் கூட்டங்கள்!
காணாமல் போன காக்கைக் கூட்டங்கள்! மழைக்காலஈசல்களாய் திருவிழாக்காலவேடந்தாங்கிகள்வேடந்தாங்கலாய்முகநூல் முழுதும்உமிழ்ந்தஎச்சிலின்எச்சங்கள்இன்னும்காயவில்லை.தோள் கொடுத்தஇஸ்லாமியர்களுக்குஇனிய தோழனாய்இருப்பார் கலைஞர்என்றனர்.
வார்த்தைக்கு அஞ்சுவதோ? ஊத்தைக் காசுக்கு கெஞ்சுவதோ?
வார்த்தைக்கு அஞ்சுவதோ? ஊத்தைக் காசுக்கு கெஞ்சுவதோ? மனித உயிர்களை மயக்கி மலிவாக்கும்மந்தத்தன மனிதர் அவர்கள்!சுடர்முகம் கருத்த ஊர்கள்!போதை மருந்தால் வயிறு வளர்ப்போர்வார்த்தைக்கு அஞ்சலாமா?ஊத்தைக் காசுக்கு கெஞ்சலாமா? கள்ளக்கடத்தலின் காதலர் – பணக்காமம் கொள்ளும் கவுசியர்! கடுங்கயமைத்தனத்தின் தோழர்கள்!குறும்பர் இவரது நன்கொடை, விருந்துகள்கொள்வது இங்கு கூடுமா? கொண்டநட்பு இறை வழியில் சேர்க்குமா?
இறுதியும் – உறுதியும்
இறுதியும் – உறுதியும் எததனை காலம் வாழப்போகிறாய் மனிதா? நீ எத்தனை காலம் வாழப்போகிறாய்? நீ வந்த பாதையை விட போகும் பாதையே வெகு அருகே ஆனாலும் அது பற்றி நீ கவலை கொள்ளவில்லை. எப்படியோ வாழ்கிறாய். அது ஒரு குறுகிய காலமே. ஆனால் நீ செல்லவிருக்கும் ஊரோ புது யுகமே. சென்றவர் அதுபற்றி உனக்கு எச்சரிக்கவில்லை. வந்தவருக்கோ அது பற்றி தெரிய நியாயமில்லை. உதித்ததை உதிர்த்தால்? உறைக்கவில்லை,
கப்பலுக்கு போன மச்சான்…
கப்பலுக்கு போன மச்சான்… கண் நிறைந்த ஆசை மச்சான் எப்பதான் வருவீங்க எதிர்பார்கிறேன்.நான் இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன் கணவன்: கண்ணுக்குள்ள வாழ்பவேளே,கல்புக்குள்ளே வாழ்பவளேஇன்சா அல்லா விரைவில் வருவேன்; உன் இஸ்டம் போல நினைத்தது எல்லாம் தருவேன். மனைவி: அக்கரைக்கு போனதுமே அக்கறையும் போயுடுச்சோ?அன்று சொன்ன வார்தைகளின் அர்தங்களும் மாறிடுச்சோ?சக்கரை மேல் கோபம் கொண்டு கட்டெரும்பும் ஓடிருச்சோ?சங்கதி தெரியலையே! மன்னன் மனம் வாடிருச்சோ?
தாய்க்கு ஒரு கவளம் சோறு!
தாய்க்கு ஒரு கவளம் சோறு! பாத்திமா நளீரா என்ஒடுங்கிப் போனநிழலுக்குள்ளே – நான்முடங்கிக் கொள்கிறேன்.மகனே…உன்னைப் பிரசவித்தவேதனையை விடநீஉதைக்கின்ற வார்த்தைகளால்உயிரில் உதிரம்கொட்டினாலும் – ஓர்உவகைதான்என்ன அழகாகபேசுகிறாய்.