மனைவியின் அருமை அவளின் மறைவிற்குப் பின்பே பலருக்குப் புரியும்! நீரின் அருமை பயிரில் தெரியும்! நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும்! கல்வியின் அருமை பதவியில் தெரியும்! காசின் அருமை வறுமையில் தெரியும்! தாயின் அருமை அன்பிலே தெரியும்! தந்தையின் அருமை அறிவினில் தெரியும்! நண்பனின் அருமை உதவியில் தெரியும்!
Category: கவிதைகள்
மழலை மொழி
மழலை மொழி மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) இனிய மொழிஎன் சின்னக் குழந்தைகளின்மழலை மொழி! இலக்கியம் இல்லா இன்னிசை!இலக்கணமற்ற தேன் மழை!அறுந்தறுந்து விழும் அழகிய கவிதை! எல்லோரும் விரும்பும் கவிதைஅது – சின்னஞ் சிறுசுகளின்சிங்காரச் சரிதை!
பொட்டச்சி
பொட்டச்சி பெண்சிசுகள் கருக்கலைப்பு பெண்குழந்தைகள் கற்பழிப்பு பெண்மானம் அவமதிப்பு பெண்மன எண்ணம் நிராகரிப்புபெண் ஆணுக்கொரு பொழுதுபோக்கென கண்ணெதிரே அநியாயங்கள் கண்ணிமைக்கும் கொடுஞ்செயல்கள்கண்டும் காணாததுபோல்என்னுடலைமட்டும் நகர்த்துகிறேனே என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!
அடிமைப்போக்கு மாறாமல் அகத்தில் அன்பு பிறக்காது!
அடிமைப்போக்கு மாறாமல் அகத்தில் அன்பு பிறக்காது! மண வாழ்வை ஏற்று மச்சானாக ஒப்புக் கொண்டீர்மழைக்கு குரல் பெருக்கும் தவளையாகி மகிழ்ந்தேன்!மணநாள் குறித்தார் மணமேடையில் அமர்ந்தேன்! முத்தவல்லியும் சாட்சிகளும் நோட்டு தூக்கி வந்தனர்மூன்று சம்மதம் வேண்டுமென்றார்; மூன்று கிராம் தங்கத்துக்குகையப்பம் தா என்றார்; தலையெழுத்தை தான் தாவென்றார்! மலர் முகத்துடன் வந்த மாப்பிள்ளை உறவினர் கை ஜாடையால்கைச்செயின் கனமாக இல்லையென்றார், என் அன்னையிடம்!முல்லைப் பல்காட்டிக் கொண்டிருந்த மாமியார் முகம் மாறியது! என்முடியைத் தூக்கி கழுத்தைப் பார்த்து வெறித்தன அவர்…
இதுதான் உலகம்!
இதுதான் உலகம்! அபிவிர்த்தீஸ்வரம் தாஜுத்தீன் காற்றுவழி தென்றலதே காலமதின் பூங்காற்று!நாற்றுவழி பயிரதுவே நற்கால உணர்வூற்று! ஏற்றமதின் எழிலுருவே எதிர்கால வழிகாட்டு!ஆற்றுப்பெருக்காலே அரும்விடும் வளவாழ்வு! சோற்றுப் பெருக்கால் தான் சுடர்காம் சுகவாழ்வு!ஆற்றல் அனைத்துமே அடங்கிவிடும் இதனுள்ளே! மனிதன் மாண்புபெற மனஒழுக்கம் வழிவாழ்வு!புனிதம் புவனம்பெற பொற்காலம் அதன்வரவு! இனிதாய் வாழ்வதெல்லாம் இதயத்தின் வளர் வாழ்வு!அணிசேர் அமைவதற்கு அடிப்படை அறவாழ்வு! கணிசமாய் முன்னேற முன்ப்பின் நினை வாழ்வு!நனிசேர் நலம்பெறவே நம்புவதே இதன் ஆக்கம்!
வேறு எதற்காக…?
வேறு எதற்காக…? கூத்தாநல்லூர் ஜின்னா சென்னை குளமான போது உங்களை மீட்டவர்கள் சென்னை குப்பையான போதும் உங்களை மீட்கிறார்கள்… பயங்கரவாதிகள் என்றீர்கள் பயங்கர வெள்ளத்தில் உங்களோடு நின்றோம்.தீவிரவாதிகள் என்று திட்டினீர்கள் தீவிரமாய் உங்கள் தெருக்களை கூட்டினோம். குண்டு வைப்பவர்கள் என்றீர்கள் உங்களை எங்கள் தோளில் சுமந்து தொண்டு செய்து காட்டினோம்.உயிர் பலி கொடுப்பவர்கள் என்றீர்கள் எங்கள் உயிரை துட்சமென நினைத்து உங்கள் உயிர் காக்க ஓடி வந்தோம்.
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் A.சிக்கந்தர் M.Sc., M.Phil., விருத்நகர். நான் மழைத்துளி பேசுகிறேன்…!மானிடனே! உன்னைப்பார்த்து…!தண்ணீரில் தத்தளிக்கிறது சென்னை!நிறைய நிறைய யோசிக்கச் செய்கிறதா உன்னை? யோசிக்க நேரமில்லாமல் ஓடித் திரிந்தாயே! கொஞ்சம் நின்று யோசி!இனியாவது இயற்கையை நேசி! நான் ஆட்சி புரிய வேண்டிய தண்ணீரின் தேசத்தை நீ ஆக்கிரமித்தாய்!ஆண்டாண்டு காலமாக அபகரித்தாய்!அழித்துத் தீர்த்தாய்!பராமரிக்க மறுத்தாய்! மறந்தாய்! நான்கைந்து நாட்கள்தானேநான் உன்னை ஆக்கிரமித்தேன்?ஆவேசத்தில் கொட்டித் தீர்த்தேன்!எனது சொந்த மண்ணை காண வந்தேன்!
கப்பலே நாங்கள்தான்..!!
மழை… மழை… மழையோ மழை…!! தண்ணீருக்கு அலைந்தவன் மழைக்கு ஏரியை உடைக்கிறான் ஏரிக்குள் வீடு..!! வராமல் அடம் பிடித்தது போகவும் அடம் பிடிக்கிறது மழை..!! தமிழில் குளிரும் சொல் மழை! விண்ணிலிருந்து விழும் ஈட்டி வானத்தையும் பூமியையும் கட்டப்பார்க்கும் நீர் நூல். மின்னல் கத்தி வெட்டியதில் மேகப்பழத்தில் வடியும் சாறு சில்லிடத்தெரிக்கும் பன்னீர் நதியிதழ்களுக்காய் வழியும் தேன்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும் – சல்மாவின் கவிதை நூல் விமர்சனம்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும் – சல்மாவின் கவிதை நூல் விமர்சனம் [ சொல்லப்போனால் அந்த ஒரே ஒரு கவிதைக்காகத்தான் வாங்கியதே இந்தப் புத்தகம். பெண்ணின் உடலை, தனக்கான ஒரு மதுக்கோப்பையாய் மட்டுமே ரசிக்கத்தெரிந்த ஆணுக்கு, அந்தக் கோப்பையின் மேலுள்ள விரிசல்களும், கறைகளும், கீறல்களும் உறுத்துவது மிகப்பெரும் துரோகம். பெண்ணின் மீதான ஆணின் பார்வையின் துரோகம். வக்கிரம். பெரும்பாலான ஆண்களின் எல்லாப்போர்வைகளிலும் ஒளிந்துள்ள எண்ணத்தையே இந்தக் கவிதை சுட்டிக்காட்டியது. ஆயிரமாயிரம் புரட்சிக் கவிதைகள் வாசிக்கும், உணர்ச்சிக்கனல்கள் பொங்கும் உரைகளை…
மறைந்த தன் தாயார் குறித்து டாக்டர் அப்துல் கலாம் எழுதிய கவிதை….
அன்னை பற்றி அப்துல் கலாம் கடல் அலைகள், பொன் மணல்புனித யாத்ரீகர்களின் நம்பிக்கைஇராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருஇவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீஎன் அன்னையே! சுவர்க்கத்தின் ஆதரவுக் கரங்களாய்எனக்கு நீ வாய்த்தாய்போர்க்கால நாட்கள் என் நினைவிற்கு வருகின்றனவாழ்க்கை ஒரு அறைகூவலாய் அமைந்தகொந்தளிப்பான காலம் அது. கதிரவன் உதிப்பதற்குப் பல மணி நேரம் முன்பேஎழுந்து நடக்க வேண்டும் வெகுதூரம்கோயிலடியில் குடியிருந்த ஞானாசிரியரிடம்பாடம் கற்கச் செல்லவேண்டும்.மீண்டும் அரபுப் பள்ளிக்குப் பல மைல் தூரம்