பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்? அபூ அரீஜ் பூங்காவனம், பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்? பூமியிலே முளைத்ததெல்லாம் பூமிக்குச் சொந்தமா? பூவையர் பறிதத்தெல்லாம் கூடைக்குள் போகுமா? புயலடித்து விட்டால் பூக்களெல்லாம் பூமிக்குள் புதைந்து விடும்! ஆடவர் புயலாய் ஆடிவிட்டால் பறித்த பூவாய் பூவையர் கசங்குவர். கண் கசக்குவர்! ‘பூக்களை வெறுக்காதீர்‘ எங்கோ நான் படித்த வரிகள்! எந்தப் பூக்களைப் பற்றிப் பேசுகிறார்கள்? கொடிப் பூக்களையா? கொடியிடைப் பூக்களையா? பறித்த பூக்களையா?…