கிளியனூர் இஸ்மத் இளைஞனே… வாழ்க்கையை லட்சியத்தோடு வாழ்ந்து வெற்றி பெறவேண்டிய நீ சிலரது வார்தைகளில் உன்னை இழந்து விடாதே கவனமாகயிரு…
Category: கவிதைகள்
கவிதைகள் பலவிதம்
துடிக்கும்போது யாரும் கவனிக்கமாட்டார்கள் நின்றுவிட்டால் பலரும் துடிப்பார்கள் விமானங்களின் விளையாட்டு மைதானம் வானம்! ஏழைகளுக்கான இலவச மின்சாரம் நிலாவெளிச்சம்
குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே!
கவிஞர் ஆலிம் செல்வன் குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே! எங்கள் வாழ்வும், வளமும் செழித்திட மறையாய் வந்த அல்புர்கானே! திரு மறையாய் வந்த அல் குர் ஆனே! உன்னை வாழ்த்திடும் மனதினில் நிறைந்தவன் அருட் கொடை தந்த ரஹ்மானே
வல்லோனே-ரஹ்மானே
எம். முஹம்மது ஆஸாத் இறைவா ! ஒரு நொடியும் உனை மறவா இதயம் வேண்டும் ஒரு போதும் உன் கட்டளையை மீறாத வாழ்வு வேண்டும் இருப்பதில் இன்பமாக வாழவேண்டும் பொறுமை, அமைதி, சாந்தி, சமாதானம் என்னில் நிறைய வேண்டும்
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா…!
[இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்.. பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா! உன் துபாய் தேடுதலில்… தொலைந்து போனது என் வாழ்க்கையல்லவா..?] திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா… வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்! சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்! என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்! சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல… மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!…
சிந்தனையின் தேன் துளிகள்
சிந்தனையின் தேன் துளிகள் M.A.P.ரஹ்மத்துல்லாஹ், நீடூர் 1. உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் அளித்துள்ள அருட்கொடை மழையாகும். 2. இறைவன் நினைப்பு இருந்தால் பகையுணர்ச்சி பறந்துவிடும். 3. சந்தோஷம் முயற்சிக்கு ஊட்டச்சத்தாகும். 4. ஆர்பாட்டம் மறைமுக எதிரியை உருவாக்கும். 5. வாய்மை வளமானதாக இருந்தால் சாதனை எளிதாகும். 6. விமர்சனத்துக்கு ஆளாகும் தலைமைதான் நேர்மையாக நடக்கும். 7. அன்பும், பண்பும் அமையுமானால் முட்டாலும் மேன்மையாவான். 8. தன்னைத்தானே உயர்த்திப் பேசுபவன் சதியும்…
இனிய வாழ்வு தரும் இஸ்லாம்
இது வாழ்வின் நெறி முறை! இது மாற்றாருக்கு எளிதில் பிடித்துவிடுவதில்லை! பிடித்து விட்டால் எவரும் அதை விட்டு விடுவதில்லை! இது தான் கொள்கை!
வேண்டாம் முரண்பாடு!
எதனாலே உண்டாச்சு முரண்பாடு எவரோடு செய்து கொண்டாய் உடன்பாடு சமுதாயம் உங்களாலே படும்பாடு சரியில்லை..முறையில்லை.. விட்டுவிடு..! அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் பெரும்பாவம்! அறிந்திருந்தும் அத்தவறை மீண்டும் மீண்டும் செய்கின்ற கொடுமையினை நிறுத்திடாயோ? செம்மல்நபி வழி முறையில் நிலைத்திடாயோ? அருள்மறையாம் திருமறையின் தெளிவுரைகள் அழகுத் தமிழ் மொழியினிலே வந்திருந்தும் அதன் பொருள் புரிந்து பழக்கத்தில் கொள்ளாமல் – சில அண்டப்புழுகுகளின் புத்தகத்துள் புகுந்தாயோ? அலை அலையாய் இளம்பெண்கள் நிற்கின்றார்! – உன்னை விலை…
அன்னையின் மடல்
என் செல்லமே! நீ என்னை நேசிக்க விரும்பினால் இப்பொழுதே நேசி! பாசம் காட்ட விரும்பினால் இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டு! நான் இவ்வுலகை விட்டு மறைந்தபின் மீளாத்துயில் கொண்டபின், அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே, நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே, “தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது” எனும் நபி மொழியை மறந்து விட்டோமே என வருந்தும் நிலை உனக்கு வேண்டாம்.
மனிதா! வசந்தம் தரும் பூக்களை நடு!
பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்? அபூ அரீஜ் பூங்காவனம், பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்? பூமியிலே முளைத்ததெல்லாம் பூமிக்குச் சொந்தமா? பூவையர் பறிதத்தெல்லாம் கூடைக்குள் போகுமா? புயலடித்து விட்டால் பூக்களெல்லாம் பூமிக்குள் புதைந்து விடும்! ஆடவர் புயலாய் ஆடிவிட்டால் பறித்த பூவாய் பூவையர் கசங்குவர். கண் கசக்குவர்! பூக்களை வெறுக்காதீர் – எங்கோ நான் படித்த வரிகள்! எந்தப் பூக்களைப் பற்றிப் பேசுகிறார்கள்? கொடிப் பூக்களையா? கொடியிடைப் பூக்களையா? பறித்த பூக்களையா? யாரும் பறிக்கா…