கவிஞர் நபிநேசன் பொறாமைக் காரிருளில் முன்னேற்றப் பாதை தெரியாமல் முழிப்பவர்களே ! கைகளில் – ஒற்றுமைவிளக்கை ஏந்துங்கள் ! பகைத்துக்கொண்டு பிரிந்து நின்றால் உங்களை – கொசுகூட வசைபாடும் !
Category: கவிதைகள்
ரமளானே… வருக!
நன்மை பூக்கள் பூத்துக் குலுங்கும் ரமளானே… வருக! பூந் தாது வாரி வரும்… சுவனமலை தென்றல் காற்றே…. வருக! வருக!
முஸ்லிம் பெண்ணே!
அல்லாமா இக்பால் உனது திரையானது எங்கள் கௌரவத்தின் கோட்டையாகும். மனித வர்க்கமென்னும் தீபஜோதிக்கு நீதான் வெளிச்சத்தை அளித்து வருகிறாய்… தீனுடைய ஆவேசம் உனது உயிர்க்குளேதான் உறைந்து கிடக்கிறது. ஆனால் நவின காலம் தேக சுகத்தையே லட்சியமாகக் கொண்டுள்ளது. தேகத்தை விற்று விடவும் துணிவு கொண்டுள்ளது.
பணமோ பணம்!
பணம் பொருளாதார மின்சாரம் அரசாங்கத்தின் அலாவுதீன் விளக்கு
முடிச்சு அவிழ்கின்றது…
நினைவில் நின்றவை… இறைவன் எங்கென்று என் குருவிடம் – கேட்டேன் இதயத்துள் புகுந்து பாரென்று – சொன்னான் உலகத்தை இறைவன் படைத்ததேன் – என்றேன் அறியும் பொருட்டு தனைதான் – என்றான் ஆதம் ஏன் குற்றம் செய்தார் – என்றேன் இறைவன் அருளுக்கது வழிகோல – என்றான்
வெற்றியின் ரகசியம்!
நிஸார் பானு அன்பு காட்டுங்கள் ஆனால் அடிமையாகி விடாதீர்கள் இரக்கம் காட்டுங்கள் ஆனால் ஏமாந்து போகாதீர்கள் பணிவாய் இருங்கள் ஆனால் துணிவை இழந்து விடாதீர்கள்
புன்னகை!
செடியின் புன்னகை மலர் காற்றின் புன்னகை தென்றல் குயிலின் புன்னகை கூவல் தடாகத்தின் புன்னகை தாமரை
முல்லா – சிறுகதை
”முல்லா மிகவும் புத்திசாலி ” என்று அரசசபையில் இருந்த பலரும் புகழ்வதைக் கேட்ட மன்னர், முல்லாவின் அறிவைச் சோதிக்க எண்ணினார். ஒரு நாள் அரச சபை கூடியபோது, அரச சபையில் இருந்த முல்லாவை மன்னர் அழைத்து, முல்லா, ” உங்கள் அறிவைச் சோதனை செய்து பார்க்க எண்ணுகிறேன். நீங்கள் ஏதேனும் ஒன்று கூறுங்கள். நீங்கள் கூறுவது உண்மையாயின் உங்கள் தலை வெட்டப்படும்; பொய்யாயின், உங்களைத் தூக்கிலிடுவேன் , எங்கே ஏதாவது ஒன்று கூறுங்கள் ” என்றார்.
திருக்குர்ஆன்
திருக்குர்ஆன் தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் திருக்குர்ஆன் இதன் வருகை வானத்திலிருந்து! இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து ! இது பூத்தபின்தான் மானுடம் தன் மணத்தை நுகர்ந்தது ! மவுனம் வாய் திறந்து தன் மனத்தைப் பகர்ந்தது.
இறைவா உன்னருள் வேண்டும்
மண்ணும் விண்ணும் ஆளும் வல்ல இறைவா மாந்தரெம்மின் பிழைகள் பொறுத்தருள்வாய் இறைவா உன்னருள் வேண்டும் இனிதாய் நலம் வேண்டும் வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…