மனிதா! பொழுது விடிந்துவிட்டது–இன்னும் உன் உறக்கம் கலையவில்லையா? உனைப் படைத்தவனை வணங்கச் செல்லவில்லையா? அழியப்போகும் அகிலத்தில் அல்லாஹ்வை நினைக்காமல் எத்தனை காலந்தான்–நீ உறங்கிக்கொண்டிருப்பாய்? எத்தனை காலம்தான் இந்த உறக்கத்தில்–நீ சுகம் காணப்போகிறாய்?
Category: கவிதைகள்
உன் மனைவியாக வேண்டும்
உன் மனைவியாக வேண்டும் உன்னை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் காலையும் மாலையும் கண் இமைக்காமல் உன்னை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்!
இதுவா வாழ்க்கை? இதுவல்லவே வாழ்க்கை!
இதுவா வாழ்க்கை? இதுவல்லவே வாழ்க்கை! நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை சவால்நிறைந்த வாழ்க்கை ஊர்ஜிதமில்லா வாழ்க்கை, நிரந்தரமில்லா வாழ்க்கை, பிரச்சனைகளுடனான வாழ்க்கை ஏற்றத்தாழ்வுள்ள வாழ்க்கை. வியாதி உடனான வாழ்க்கை, பொறாமையாளர்கள் வீழ்த்த நினைக்கும் வாழ்க்கை முடிந்துபோகும் வாழ்க்கை மொத்தத்தில் மேல்காணப்படும் ஏதாவதொன்றுடனே மடியும் வாழ்க்கை முடியும் வாழ்க்கை! ஆஹா இத்தனை பிரச்சனைகளிலும் மனிதன் தான் என்னவோ – பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரமாம் ஆண்டு வாழ்பவனை போலல்லவா அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்படியே ஓடிக்கொண்டிருக்கும் அவனது வாழ்க்கை…
இடைவிடாது உழைக்கும் தியாகிகள்!
வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் ! வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்த நடை பிணங்கள் !
கண்ணாய் கல்விகற்றால் கடமைகள் சுலபமாகும்!
கவிஞர் இக்பால் ராஜா கல்வியைக் கவச மாக்க காலமே உகந்த தம்மா! இல்லையேல் காலா காலம் இழந்தவோர் இகழ்ச்சிக் காக சொல்லால் தூற்று வார்கள் ! சோர்ந்துநீ முடங்கி டாமல் வல்லோன் அருளை யெண்ணி வாய்ப்பினை உணர்க தோழி !
எண்ணத்தை விசாலமாக்கு
ஆலங்குடி நூ. அப்துல் ஹாதி பாகவி எனக்குத் தெரிந்த ஆலிம்-எழுத்தாளர்கள் சிலர் தம் எழுதுகோலை மூடிவைத்துவிட்டு ஆன்மிகப் பாதையில் சென்றுவிட்டனர். அவர்களைத் தட்டி எழுப்பிச் சமுதாய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் அவர்கள் தம் ஆக்கங்களைத் தொடர்ந்து எழுத வேண்டும் எனத் தூண்டுவதற்கே இக்கவிதை. ஆன்மிகமும்-இஸ்லாமும் பிரிக்க முடியாத இரட்டை வித்துக்கள்தாம். ஆனால்-நீயோ ஆன்மிகம் மட்டுமே போதும்-என ஆழ்மனதில் நினைத்துக்கொண்டு அல்லாஹ்வை நினைவுகூர்வதில் அனுதினமும் ஈடுபட்டால் உன் கல்வியால் இச்சமுதாயத்துக்கு என்ன பயன்?
தாய்ப்பாசம்
ஆயிரம் கைகள் சேர்ந்து செய்த மெத்தையில் படுத்திருக்கிறேன்… உன் இருகையில் மட்டும்தான் தூங்கி இருக்கிறேன்.
அடுத்த ரமளானுக்காக சுவனம் இப்பொழுதே அலங்கரிக்கப்படுகிறது!
வார்த்தைகள் அல்ல இது, ஒரு மூளையின் இபாதத் ஒரு பேனா, குனிந்து செய்த சஜதாவின் சுவடுகள் மண்ணிலும், உங்கள் மனதிலும் முளைக்க விழும் சில குர்-ஆனிய விதைகள்.
செருப்பின் செய்தி! அல் ஜய்தி!
[ ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக‘ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் இக் கவிதை. ] நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான…
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிராதயமல்ல
தீய பார்வை நீங்காத வரை மண்டையில் கிடக்கும் கண்களில் நோன்பில்லை. தீய வார்த்தை நீங்காத வரை தாடைக்குள் கிடக்கும் நாவினில் நோன்பில்லை நன்மைகளை அள்ளாதவரை தோள்களில் முளைத்த கைகளில் நோன்பில்லை. தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்.