யாசர் அராஃபத் அன்னை இருக்கிறாள் , தந்தை இருக்கிறார், மனைவி இருக்கிறாள் – நானும் இருக்கிறேன் வெகு தொலைவில்! அள்ளி முத்தமிடவேண்டிய என் பிஞ்சு குழந்தையை தொட்டு தடவி பார்த்தேன் புகைப்படத்தில்! மழலையின் குரலை கைபேசியில் கேட்டு கதறி அழுதது என் மனம் கண்களின் வழியாக சத்தமே இல்லாமல்!
Category: கவிதைகள்
உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்……
உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்… அஸ்ஸலாமு அலைக்கும், குறை கண்டதில் கறை கண்டவனாக! வரிகளில் வலி உண்டு; வழி இல்லை! அனைத்திற்கும் பெயரோ இஸ்லாமிய இயக்கம் – வார்த்தையில் மட்டும்தான் வாழ்க்கையில் இல்லை!
இதுதான் நிஜம்!
கனவுகளோடு தான் படித்தேன்…கல்லூரில் , கடன் இன்னமும் இருக்கிறது, என்றார் …என் அப்பா, அம்மாவிடம் …
இளமைப் பருவம்
இளமைப் பருவம் இஃதொரு பைத்தியக்காரப் பருவம். கெட்டதை நல்லதாகவும் நல்லதைக் கெட்டதாகவும் கற்பனை செய்து காட்டும்.
எது உண்மைக்காதல்?
காதல் எனும் வார்த்தையையே களங்கப்படுத்திய காதலர்தின இளவல்களே! உங்கள் காதல் உண்மைக் காதலன்று.
மீண்டும் ஒரு முறை சொல்லிப்பார்த்தேன்…
தந்தை சொன்னார் அப்போதே, படித்து விடுடா – இல்லை என்றால் வாழ்க்கை உன்னை படுத்தி விடும்! என் தலை முறையினருக்கு எப்போதுமே ஒரு நினைப்பு – பாஸ்போர்ட் கிடைத்துவிடும் 18 இல் – படிப்பு எதற்கு பிறகு!!! சூழ்ச்சி காரர்களும் சூழ்ந்து கொண்டு திரும்ப திரும்ப காதில் ஊதினார்கள் – பாய் பசங்களுக்கு படிப்பு எதற்கு? – ஆசிரியர் வடிவில் …
ஈமானின் ஃபர்ளுகள்
ஷாஹா ஈமான் பொருளைக் கூறிடுவேன் இதமாய் அதனைக் கேட்டிடுவீர் ஈமான் பொருளாம் நம்பிக்கை என்று மனத்தில் வைத்திடுவீர்! கண்ணால் பார்க்கும் பொருளெல்லாம் ஈமானதிலே சேர்வதில்லை எண்ணமதிலே வேரூன்றி ஏந்தி வளர்வதே ஈமானாம்! ஆறு கிளைகள் அதற்குண்டு அடுக்கடுக்காகச் சொல்லுகிறேன் அதையும் மனத்தில் அன்போடு அடக்கி வைப்பீர் மானிடரே!
மனதின் மறுபக்கம்
எம்.அப்துர்ரஹிம், கோவை. மனதின் வலிமை மனிதனுக்குத் தெரியுமா! மனதின் மௌனஒலி மற்றவர்க்குப் புரியுமா? மனதின் ஆழத்தை மனித மனம் அறியுமா? மனதின் சக்தியை மாற்ற அதற்கு முடியுமா? இப்படி…………. வினாடிக்கு வினாடி வினாக்களைத் தொடுக்கலாம்! விடை எங்கே என்று தேடி அதை நாம் கொடுக்கலாம்! மனதின் மறுபக்கத்தைக் காண மனம் துடிக்கலாம்! கண்டபின் மனம் மாறி வாழ்ந்தும் முடிக்கலாம்! மனம் கிளைக்குக்கிளை எப்போதும் தாவுமா? இத்தத்துவம் பொய்யென்றால் அது மேவுமா? மானுடம் மெய்த்தன்மை காணாமல்…
வினோத விபரீதம்
இயற்கையைமீறிய இச்சைகளின் கிளர்ச்சி இதில் ஈடுபாடுகொண்ட பலமனம் அதனைநோக்கி இறைவனின் கட்டளைகளை ஏளனமாக்கி இறுமாப்புடன் செயல்படுது மனிதமனசாட்சி மரபுகளை அறுத்தெறிகிறது மனிதனின் உணர்ச்சி மனஇச்சைகளின்மேல் ஆட்டம்போடுது மனகிளர்ச்சியின் ஆட்சி
திடுக்கம் நிறைந்த அந்நாளினிலே…(கவிதை)
லறீனா அப்துல் ஹக் சொல்லில் இனிமை நெஞ்சினில் நஞ்சு பொல்லாச் சுயநலம் பொறாமை குரோதம் எல்லாம் சேர்ந்திட சமூகத்தில் பிளவெனும் பெருநெருப்பூதிட கெடுமதி கொண்டோர் உலகோர் மத்தியில் ‘தீன்தாரி’ வேடம் புனைந்தே வாழுவர் பிறரையும் ஏய்ப்பர் வாழ்வு நிரந்தரம் என்றெ(ண்)ணும் மடமையால்-பிறர் வாழ்வுடன் விளையாடி(யும்) இன்புறுவாரே, எனின்…