அருமை அப்பா! I miss u daddy எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது
Category: கவிதைகள்
எனக்குப் பிடித்தவை… (ஒரு பெண்ணின் பார்வையில்)
ஷப்பீர் கண்களை நேராக பார்த்துப்பேச பிடிக்கும் பேசுவதே கண்களால் என்றால் ரொம்ப பிடிக்கும் இதழ் பிரியாத புன்னகை பிடிக்கும் புன்னகையில் மறைந்திருக்கும் நிஜமான நேசம் பிடிக்கும் அதிர்ந்து பேசாத வார்த்தைகள் பிடிக்கும் வார்த்தைகளற்ற மெளனம் பிடிக்கும் அதிகாலை புரிந்திடும் காதல் பிடிக்கும் கணவனின் இதழ்களுடன் இணையும் முத்தம் பிடிக்கும் மழலையின் மொழி பிடிக்கும் பல சமயங்களில் குழந்தையாய் மாறிட பிடிக்கும்
தலையில் குட்டு வைப்போம்!!
யாசர் அரஃபாத் அன்பைப் போதித்த அழகிய மார்க்கத்திற்க்கு அடையாளமிட்டுள்ளது அயல் நாடுகள் தீவிரவாதம் என்று!! மூலைக்கு மூலை துரத்தி அடிக்கப்பட்டாலும் மூலதனமாய் எங்களிடம் உள்ளது ஒன்றே ஒன்றுதான்; ஒரிறைக்கொள்கைதான்!!
”உறவுகள்”
ஆதாம் ஹவ்வா ஆரம்பித்த உறவுகள் சாத்தான் புகுந்து சாய்த்தான்; அதனால் – பிரிவுகள் அண்டை வீட்டோடும் அண்டை நாட்டோடும் சண்டை போட்டே மண்டை ஓட்டை மலிவாக்கினோம்….
என் தந்தையே!..
கரு கொடுத்து உருவாக்கினாய் விரல் பிடித்து நடை பழக்கினாய் கண்டிப்புடன் கல்வி தந்தாய் பணிவுடன் பாசமும் பொறுமையும் தந்தாய் நம்பிககையுடன் கல்லூரி செல்கையில் தைரியம் என்ற ஆயுதம் பழக செய்தாய் தன்னம்பிகையுடன் பணிக்கு செல்லும்போது உன் கடமை முடித்தாய்
நித்யானந்தா! – இல்லறமல்லது நல்லற மன்று!
”கதவைத்திற காற்று வரட்டும் ஆத்மாவைத்திற ஆனந்தம் வரட்டும்” இப்படியெல்லாம் நித்தமும் திறக்கச் சொன்னவர் வந்தார்! தொலைக்காட்சியைத் திறந்தால் நடிகையைத் திறந்தபடி…
மிரட்சிக் கொள்ள மாட்டோம்…
யாசர் அரஃபாத் உலகெங்கும் கறுப்புக் கொடி பர்தாவிற்கு எதிராக; மனநோயால் பாதிக்கப் பட்ட கூட்டம் ஒன்று மங்கையின் அழகாய் காண துடிப்பதுண்டு! உரக்கச் சொல்லுங்கள் எதிரிகளுக்கு அவிழ்த்துவிட்டு வருவதுதான் உனக்கு அழகு என்றால் இழுத்து மூடிக் கொள்வேன் என் சுண்டுவிரலின் நகக் கண்ணையும்!! கழட்ட மாட்டேன் அங்கியை கயவர் கூட்டத்திற்காக;
இரு இதழ் பூ!
மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி பூங்காவனம், பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்? பூமியிலே முளைத்ததெல்லாம் பூமிக்குச் சொந்தமா? பூவையர் பறிதத்தெல்லாம் கூடைக்குள் போகுமா? புயலடித்து விட்டால் பூக்களெல்லாம் பூமிக்குள் புதைந்து விடும்! ஆடவர் புயலாய் ஆடிவிட்டால் பறித்த பூவாய் பூவையர் கசங்குவர். கண் கசக்குவர்! ”பூக்களை வெறுக்காதீர்” எங்கோ நான் படித்த வரிகள்!
அன்பின் கூடாக அழகிய இல்லாள்
அவள் அன்புக்கும் வானமே எல்லை எல்லைகளை எனக்குள் உருவாக்கி அதனை அவ்வப்போது அழகாய் உணர்த்தும் அன்பான இல்லத்தரசி.. தன் கணவனை முழுமையானவனாய் இவ்வுலகுக்கு இதமாய் இல்லறத்தின் பயனாய் ஈன்றெடுத்து அவன் முகத்தில் மலரும் மகிழ்வை தன்னால் தரமுடிந்ததை எண்ணி உள்ளூர இன்புறும் இல்லாள்
சுகமான சுமைகள்
சுகமான சுமைகள் மௌலவி லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) கடமை மறந்த மானிடா! உன் – மடமையை ஒரு முறை அசைபோட்டுப் பார். அடித்தளத்தை இடித்துவிட்டா அடுக்கு மாடி கட்டப்பார்க்கிறாய்?! சரிந்து கொண்டிருக்கிறது உன் எதிர்காலம்! அதை சரிக்கட்டினால் உனக்குப் பொற்காலம். வாழ்வதும் வீழ்வதும் உன் முடிவிலே.. முடிவெடு,இன்றே இனியதோர் விடைகொடு!