யாசர் அரஃபாத் அம்மா புரியாத உன் பாசம்.. புரியாத உன் பாசம்.. உன்னை அழைக்கும் போதே குளிருதம்மா உள்ளம்; கோடி நபர் இருந்தாலும் உன் அன்பில் மட்டுமே இல்லாத கள்ளம்!
Category: கவிதைகள்
சிரிப்புதான் எத்தனை வகை!
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன் ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன் இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன் கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன் கற்பனையில் சிரிப்பவன் கவிஞன் மோகத்தில் சிரிப்பவன் வெறியன் மகிமையில் சிரிப்பவன் மன்னன்
ரமளான் ஒரு மாதத்தோடு விலகுவதற்கல்ல!
திருச்சி.A.M.அப்துல் காதிர் ஹஸனி M.A., அன்பு சகோதரனுக்கு ஒர் பெருநாள் செய்தி மகிழ்ச்சி பொங்குக பெருநாள் காலை அன்பு சகோதரனே உன்னை பார்க்க ரொம்பவே வியப்பு எனக்கு ரமளான் முழுவதும் உனக்குள் அத்தனை மாற்றம் ஃபஜர் தொழுகைக்கு கூட எழாமல் போர்த்திக்கொண்டு உறங்கும் நீ தஹஜ்ஜத் கூட தவறவிட வில்லையே
யாருக்குப் பெருநாள்?
கலீல் பாகவீ உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை. பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை. காலையில் எழுந்து டீ அல்லது காஃபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும்… என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை. புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை. இவருக்குத்தான் இனிய பெருநாள்…!
எது வெற்றி?
முதன்மையாக இருப்பதல்ல வெற்றி முன்னேறிக் கொண்டே இருப்பதுதான் வெற்றி! வீழாமல் இருப்பதல்ல வெற்றி வீழும் போது எழுவதுதான் வெற்றி!!
நட்பு வாழ்வின் நறும் பூ!
சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மத் தோளுக்கு துணையாகும் தோழன் – அவன் துன்பத்தை துடைக்க வரும் பண்பாளன்! அன்பைச் சொரிவதிலே மாரி – அவன் ஆபத்தில் வழங்கிடுவான் வாரி!
வாழ்க்கையின் இரகசியம்
வாழ்க்கையின் இரகசியம் நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்! யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்! பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது. மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
கசப்பான உண்மைகள்!
கசப்பாக இருப்பினும்,பிறர் அதிருப்தியுற்றாலும் உண்மையே பேசுங்கள் ஆனாலும்….. மனிதர்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர் ஆனாலும் அவர்களை மன்னியுங்கள் நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும் உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள் ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள் நீங்கள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருந்தால், மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம் ஆனாலும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருங்கள்
பழமொழி பயனுள்ளமொழி!
O அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான். O அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும். O அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள். O அழகு, அடைத்த கதவுகளை திறக்கும். O அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர். O இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம். O இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள். O உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டுப் போகமாட்டான்.
திடுக்கம் நிறைந்த அந்நாளினிலே…
திடுக்கம் நிறைந்த அந்நாளினிலே… லறீனா அப்துல் ஹக் சொல்லில் இனிமை நெஞ்சினில் நஞ்சு பொல்லாச் சுயநலம் பொறாமை குரோதம் எல்லாம் சேர்ந்திட சமூகத்தில் பிளவெனும் பெருநெருப்பூதிட கெடுமதி கொண்டோர் உலகோர் மத்தியில் ‘தீன்தாரி’ வேடம் புனைந்தே வாழுவர் பிறரையும் ஏய்ப்பர் வாழ்வு நிரந்தரம் என்றெ(ண்)ணும் மடமையால்-பிறர் வாழ்வுடன் விளையாடி(யும்) இன்புறுவாரே, எனின்…