அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று… மவ்லவி, ஏ. உமர் ஜஹ்ஃபர் பாஜில் மன்பயீ அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று அன்றைக்குச் சொல்லிவைத்த பழமொழிகள் எதற்கு? அடுப்பூதும் வழக்கங்கள் இன்றில்லை! பெண்கள் அடிமைபோல் அடங்கிவிடும் நிலையுமில்லை இன்று! அண்ணல்நபி சொல்லிவைத்த அறிவுமொழி உண்டு “ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வி கடமை” என்று கண்ணியத்தைப் பெண்களுக்கு கொடுக்கவேண்டு மென்றால் கட்டாயம் கல்விகற்க வைத்திடுவீர் நன்று கற்றவராய்க் கட்டாயம் ஆக்கிடுவீர் நன்று
Category: கவிதைகள்
வயலை நம்பி!
வயலை நம்பி! நேற்றைய ஏக்கத்தைத் தூக்கிப் போட்டு நிம்மதியோடு இருக்கச் சொன்னோரே…..! சேற்று வயலில் இருப்போரின் சேதியைக் கொஞ்சம் கேட்பீரோ…? காட்டை வெட்டி ஒரு உழவன் களனி செய்யப் பார்க்கின்றான் நெல் நிலத்தை விதைத்திடவே புல்நிலமொன்றைப் புதைக்கிறான் வாடும் இந்த ஏழைக்கு வயலில் மட்டும் நம்பிக்கை ஏர் பிடிக்கும் கைகளில் தான் -அவன் எதிர்காலத்தின் தும்பிக்கை
படிப்பினையூட்டும் பழமொழிகள்
O அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான். O அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும். O அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள். O அழகு, அடைத்த கதவுகளை திறக்கும். O அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர். O இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம். O இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள். O உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டுப் போகமாட்டான். O ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது. O எவ்வளவு…
இறையோனின் பேரருளே!
இறையோனின் பேரருளே! திருவை அப்துர் ரஹ்மான் ஒட்டியே வைத்ததுபோல் ஒரு கோடி முல்லை மலர் கொட்டிக் கிடப்பதுபோல் கோலமிடும் வானத்தில் வட்டில் நிறை சுடராம் வைரமணிக் கோளங்கள் எட்டிப் பார்ப்பதெல்லாம் இறையோனின் பேரருளே! மின்னும் பனிமுத்தில் மோகமெனும் வலைவீசி பொன்னாய் ஒளிசிந்திப் போர்வீரன் போல வரும்; கண்ணைக் கவர்ந்திழுக்கும் கதிரவனின் செங்கரங்கள் மண்ணைப் படைத்தோனின் மாபெரிய பேரருளே!
மரணம் – ஒரு நிகழ்வு
மரணம்! ஒரு நிகழ்வு. ஓவ்வொரு கணமும் நடைபெறுகின்றது. நாம் எதிர்கொள்கின்றோமோ? இல்லையோ? நாம் அதைக் கவனிக்கின்றோமோ? இல்லையோ? அது நம்முடன் இருக்கின்றது. வாழ்கின்றது. நம் மூச்சைப்போல! மூச்சை உள்ளெடுக்கின்றது முதல் முறை ஒரு குழந்தை பிறக்கும் பொழுது, இதுவே வாழ்வின் ஆரம்பம் . ஒரு நாள் வயது சென்று இறக்கின்றது. இதுவே வாழ்வின் முடிவு, மூச்சை வெளியே விடுகின்றது இறுதியாக!
பெண்ணொரு பெட்ரோல்!
பெண்ணொரு பெட்ரோல்! தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் பெண்ணே, நீ முக்காட்டிற்குள் மூடிவைக்கப்படுகிறாயாம்! சாட்டை ஆடையைச் சட்டென்று உறுவி பம்பரத்தை பரத்தையாக்கிடுவோர் பரிகசிக்கின்றனர்!
முட்டித் தள்ளிடுவோம்..
யாசர் அரஃபாத் விதைக்கப்பட்ட எங்கள் உயிர் புதைக்கப்பட்ட நீதி; மீண்டும் இரத்ததுளிகளால் போர்த்தப்படும் பயங்கரவாதம்! மிதமான தீர்ப்பு என்று மதவாதம் கூறும்; அநியாயம் என்று அடிப்பட்டவனுக்கேத் தெரியும்!
திரையிட்டு வந்தேன்…
யாசர் அரஃபாத் குறையேதுமில்லை திரையிட்டு வந்தேன்; உன் இச்சைக்கொண்ட பார்வைக்கு எச்சில் துப்பி எதிர்ப்பேன்! அரைநிர்வாணம் அழகாய் தோன்றும் உனக்கு; உன் அக்காள் தங்கை காட்டி வந்தால் முழுக்கோபம் எதற்கு!
பெண் என்னும் பாலம்!
பெண் என்னும் பாலம்! இரு நதிக் கரைகளை மிக அழகுற இணைப்பதே நாம் காணும் பாலம்; இல்லத்தில் உள்ளவர்களை எல்லாம் இணைப்பவளே பெண் எனும் பாலம். தந்தை என்றால் பயம், மரியாதை; தாய் என்றால் பாசம், உரிமைகள்; தாயிடம் ஒருமுறை சொன்னாலேயே, சேய் விரும்புவது உடனே கிடைக்கும்.
கண் என்னும் ஜன்னல்!
கண் என்னும் ஜன்னல்! ஜன்னல் என்பது இருவழி போக்கு. ஒளியும், ஒலிகளும் மட்டுமின்றி, ஜன்னல்கள் வழியே ஓடி வரும், வளியும், வாசனைகளும் கூடி! வெளியே இருப்பவர் காணலாம், உள்ளே இருக்கும் பொருட்களை; நபர்களை, நடவடிக்கைகளை; நல்லது, பொல்லாதவைகளை.